சேலையால் கவர்ந்திழுக்கும் இன்ஸ்டகிராம் அழகி

சமூக ஊடகப் பிரபலமும் மாடல் அழகியுமான அமெண்டா சர்னி தனது இந்தியப் பயணத்தை மிகக் கோலாகலமான முறையில் சமூக ஊடக விசிறிகளுக்கு எடுத்துக் காண்பிக்கிறார்.

யூடியூப் பிரபலமாகிய அவர் அண்மையில் இன்ஸ்டகிராமுக்குள் காலடி வைத்தார். அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தை 24.8 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். 

பச்சை நிற சேலை, பால் நிற ரவிக்கை, ஜொலிக்கும் தங்க ஆபரணங்கள் ஆகியவற்றை அவர் அணிவதைக் காட்டும் படம் ஒன்றை அந்த அழகி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றினார்.

பின்னர் அவர் பாலிவுட் நடிகை ஜேக்லின் பர்னெண்டர்ஸைச் சந்தித்தார். அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட படத்தை ஜேக்லின் தனது பக்கத்தில் பதிவேற்றம் செய்தார்.

ஆக மொத்தத்தில் இந்தியாவின் கட்டடக்கலை, ஆடை நளினம் மற்றும் இந்தப் பெண்களின் மகிழ்ச்சியும் உற்சாகமும் ஒருசேரக் காண்பிக்கும் படங்கள் பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தாய் அமைந்தன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon