சுடச் சுடச் செய்திகள்

தூக்கத்தை மையமாக்கும் துயில்

ஒரு நாளுக்கு 8 மணி நேரம் தூக்கம் ஒவ்வொரு சராசரி மனிதருக்கும் தேவை என்று அறிவியல் ஆராய்ச்சிகள் வலியுறுத்துகின்றன.

அந்த வரிசையில், தூக்கத்தின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றும் வண்ணம் ‘துயில்’ என்ற கலைத்திட்டத்தை ‘சிங்கப்பூர் இந்திய திரைப்பட, நாடக ஆர்வலர்கள்’ (சிட்ஃபி) அமைப்பு தொடங்கியுள்ளது.

இந்த திட்டத்தில், பொதுமக்கள் தூக்கத்திடம் உரையாட முடிந்தால் என்ன சொல்வார்கள் என்பதைக் கண்டறிந்து, அந்த கண்ணோட்டங்களை வைத்து ஒரு மேடைப் படைப்பு உருவாக்கப்படும். இவ்வாண்டு ஜூன் 20 முதல் 23ஆம் தேதி வரை இந்த மேடைப் படைப்புகள் ‘லசால்' கலைப்பள்ளியில் அரங்கேற்றப்படும்.

கைப்பட கடிதங்கள் எழுதும் பழைய வழக்கத்துக்கு உயிரூட்டும் வண்ணம், பொதுமக்கள் கைப்பட கடிதங்களை எழுதி சிட்ஃபி அமைப்புக்கு அனுப்பலாம்.

இம்மாதத்தின் நிறைவில் 100 கடிதங்களைத் திரட்ட இலக்கு இருக்கிறது என்றும் தூக்கத்தின் முக்கியத்துவத்திற்கு விழிப்புணர்வு உண்டாக்குவது இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும் என்றும் 'துயில்' நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

கடிதங்கள் அனுப்பும் முகவரிகள்:

S.I.T.F.E. Ltd (PROJECT THUYIL)

LASALLE College of the Arts

1 McNally Street, Blk F #01-01

Singapore 187940

அரங்கப் படைப்புகளுக்கான நுழைவுச்சீட்டுகளை https://thuyil.peatix.com/ என்ற இணைப்பக்கத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon