திரும்பியது இளமை 

தம்முடைய 25வது வயதில் காற்பந்து விளையாடும்போது ஏற்பட்ட தசைநார் கிழி வால் அறுவை சிகிச்சை மேற் கொண்டார் திரு ரா.முத்துகண்ணு படையாச்சி.

"என் வீடு நான்கா வது மாடியில் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் என் அடுக்குமாடி வீட்டு கட்டடத்தில் மின்தூக்கி வசதி இல்லை. படிகளில் ஏறித்தான் வீட்டுக்குச் செல்லவேண்டும். ஒவ்வொரு நாளும் படிக ளில் ஏறுவதற்கு முன் பல முறை யோசிப்பேன். படியேறி வீட்டுக்குச் செல்ல 20 நிமிடங்களாகும். வீட்டை அடைந்ததும் மூச்சு வாங்கு வதோடு, அதிக களைப்பும் ஏற்படும். மற்ற வேலை களைச் செய்ய உடல் ஒத்து ழைக்காது," என்றார் 22 ஆண்டுகளாக ஜூரோங் ஈஸ்ட் வட்டாரத்தில் குடி யிருக்கும் திரு முத்து.

தாம் வசிக்கும் அடுக்குமாடி கட்ட டத்தின் கீழ்த் தளத்தில் செயல் படும் ரத்த சுத்திகரிப்பு நிலையத்துக்கு வரும் நோயாளி கள் படும் அவதியைப் பார்த்து துணுக்குற்ற திரு முத்து, உடல் எடையைக் குறைக்க தமது 50வது பிறந்தநாளன்று உறுதி பூண்டார்.

மெதுநடையோடு உடற்பயிற் சியைத் தொடங்கிய அவர், ஓட்டத் திற்கு முன்னேறினார். அதற்கு பின் 'கிங் ஆஃப் ஸ்ட்ரெங்த்' என்ற உடற்பயிற்சி நிலையத்தில் உடற் பயிற்சியோடு குத்துச்சண்டையும் பயிலத் தொடங்கினார்.

தற்போது 54 வயதாகும் அவர், கிட்டத்தட்ட 57 கிலோ வரை உடல் எடையைக் குறைத்து, 90 கிலோ எடையை எட்டியுள்ளார்.

திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் உடற்பயிற்சி நிலையத் தில் பயிற்சி செய்கிறார். செவ்வாய், வியாழக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டுவது, மெதுவோட்டம் போன்ற உடற்பயிற்சிகளில் தனிப்பட்ட முறை யில் ஈடுபடுகிறார். வாரத்தில் ஆறு நாட்கள் தலா ஒரு மணி நேரம் உடற்பயிற்சிக்காக ஒதுக்குகிறார் திரு முத்து. 'ஃபிட்னஸ் மந்த்ராஸ்' என்ற உடற்பயிற்சிக் கூடத்தை நடத்தி வரும் 41 வயது திரு சரவணன் கோவிந்தசாமி, திரு முத்துவிற்கு தனிப்பட்ட பயிற்றுவிப் பாளராக இருக்கிறார்.

"என்னைத் தொடர்புகொண்ட போதே முத்து நிறைய உடல் எடையைக் குறைத்திருந்தார். தன் உடற்பயிற்சித் திட்டத்தை மேம் படுத்த விரும்பிய அவருக்கு உகந்த உடற்பயிற்சிகள், உணவுவகைகள் குறித்து ஆலோசனை வழங்கினேன். உடற்பயிற்சி உத்திகளையும் பகிர்ந்துகொண்டேன்," என்றார் திரு சரவணன்.

"உடற்பயிற்சி செய்வதற்கு ஊக்கம் மிகவும் முக்கியம். சிலர் உடற்பயிற்சி பற்றிய அறியாமையில் இருப்பார்கள். நேரப் பற்றாக்குறை இன்னொரு காரணமாக இருக்க லாம்," என்ற திரு சரவணன், "நம் ஆரோக்கியத்துக்கு நாம்தான் முன்னுரிமை அளிக்கவேண் டும்," என்றார்.

"இந்திய சமூகத்தில் பலரும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்ப தால் ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு, நீரிழிவு போன்றவற்றுக்குப் பலி யாகிறார்கள்," என்று கூறிய அவர், அதைச் சமாளிக்க கண் டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றார். 18 ஆண்டு களாக உடற்பயிற்சி பயிற்றுவிப்பா ளராகப் பணிபுரிந்து வருகிறார் திரு சரவணன்.

தோட்டக்கலைத் துறையில் பட்டயம் பெற்று, நிலப் பராமரிப்புத் துறையில் 27 ஆண்டுகளாகப் பணியாற்றும் திரு முத்து, நேரத்தை திட்டமிட்டு வகுத்துக் கொள்கிறார்.

வேலை, உடற்பயிற்சி ஆகிய வற்றுக்கு இடையே கிடைக்கும் ஓய்வு நேரத்தில் கூகலில் புதிய பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதாகக் கூறும் திரு முத்து, தற்போது தமது புளோக் கில் மின்தூக்கி இருந்தாலும் படியேறித்தான் வீட்டுக்குச்

செல்வதாக உற்சாகத்துடன் கூறுகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!