இசை காணொளி: உள்ளூர் பாடகர் பிரவின் சைவி கனடா பாடகருடன் இணைந்த படைப்பு

2010ஆம் ஆண்டில் சூப்பர் சிங்கர் மூன்றாம் பாகத்தில் பங்கேற்று புகழ்பெற்றதைத் தொடர்ந்து சென்னையில் வெவ்வேறு இசை சார்ந்த முயற்சிகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார் பிரவின் சைவி.

தன்னிச்சையான முறையில் பலதரப்பட்ட தமிழ்ப் பாடல்களையும் பலகுரல் பாடல் படைப்புகளையும் சுவரசியாமான முறையில் தயாரித்து வருகிறார் அவர்.

அந்த வரிசையில் அவரும் கனடா பாடகரான 'ஆரி'யும் இணைந்து பாடல் ஒன்றைப் பாடியுள்ளனர். இரண்டு மாபெரும் இசை கலைஞர்களின் பாடல்களை இணைக்கும் முயற்சி இது.

காலஞ்சென்ற அமெரிக்கா இசைக் கலைஞரான மைக்கேல் ஜாக்சனின் ‘மேன் இன் தி மிரர்’ (Man in the mirror), ஏ.ஆர். ரஹ்மானின் வெள்ளைப் பூக்கள் ஆகிய இரண்டு பாடல்களை இந்த படைப்பு இணைக்கிறது.

காணொளியை இங்கு காணலாம்: