'ஆப்பிள்' வெளியீட்டு நிகழ்ச்சி - என்னென்ன எதிர்பார்க்கலாம்?

தொழில்நுட்ப நிறுவனம் ஆப்பிளின் அடுத்த வெளியீட்டு நிகழ்ச்சியில் கைப்பேசிகள் மட்டுமின்றி வேறு பல தயாரிப்புகளும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்திலுள்ள கப்பர்டினோ நகரில் செவ்வாய்க்கிழமை (10 செப்டம்பர்) நடைபெறும் இந்நிகழ்ச்சியில் என்னென்ன வெளிவரலாம் என்பது குறித்த சில எதிர்பார்ப்புகள் இங்கே:

ஐ-போன்கள்

மூன்று புதிய ஐ-போன்கள் நாளை வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சந்தையில் விற்கப்பட்டு வரும் ஐ-போன் எக்ஸ்ஆர், ஐ-போன் எக்ஸ்எஸ், ஐ-போன் எக்ஸ்எஸ் மேக்ஸ் ஆகியவற்றுக்கு மாற்றாக அந்த மூன்று வடிவங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

ஆயினும், தற்போதுள்ள கைப்பேசிகளும் புதிய கைப்பேசிகளும் தோற்றமளவில் மட்டும் மிகச்சிறிதாக வேறுபடும் எனக் கூறப்படுகிறது.

இருந்தபோதும் ‘ஐ-போன் 11’ என கவனிப்பாளர்கள் அழைக்கும் புதிய வடிவ கைப்பேசியில் பின்பக்க இரட்டைக் கேமரா (rear dual-camera) அமைக்கப்படும் என்று நம்பப்படுகிறது. தற்போதைய ஐ-போன் எக்ஸ்ஆர் வடிவத்தின் பின்பக்க ஒற்றைக் கேமராவைக் காட்டிலும் (single rear camera) இது சிறந்தது.

கைப்பேசியின் பின்பகுதியில் காணப்படும் கேமரா வில்லைகளுக்கான இடம் சதுரம் போல் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது (கீழ்கண்ட படத்தில்).

ஆப்பிள் கடிகாரம்

கடந்தாண்டு ‘ஐ-போன் எக்ஸ்எஸ்‘ வரிசை கைப்பேசிகள் வெளியிடப்பட்ட அதே நேரத்தில் ஆப்பிள் கடிகாரம் வரிசை நான்கும் வெளியிடப்பட்டது. எனவே, இவ்வாண்டு கடிகாரத்தின் ஐந்தாம் வரிசை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மடிக்கணினி

ஆப்பிள் புதிதான ஒரு மடிக்கணினியை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அது, 16-அங்குல மேக்புக் மடிக்கணினியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!