நலமான வாழ்க்கைமுறையில் தரமான இசை

என் தாயார் சமைக்கும்போது, எப்போதும் வானொலி பாடிக்கொண்டே இருக்கும். அன்றாட வாழ்வில் ஒன்றிணையும் தன்மை இசைக்கு உண்டு. 

அவ்வகையில் கைகள் வேலையில் ஈடுபட்டிருக்கும்போது அல்லது தீவிரமாக உடற்பயிற்சி செய்யும்போது இசை உதவுகிறது. எளிதில் கழன்று விழாமல் தலையில் இறுக்கமாக பிடித்துகொள்ளக்கூடிய கேட்பொறிகள் (Headsets) வசதியாக இருக்கும். 

உடற்பயிற்சி செய்வதற்குத் தலையில் இறுக்கமாக பிடித்துகொள்ள முடியும் ஒரு சாதனம் உகந்தது. அப்படிப்பட்ட ஒரு கருவி, தலையணி கேட்பொறி (Headset). 

Property field_caption_text
பெக்பிட் ஃபிட் 6100 படம்: பிலாண்டுரானிக்ஸ் இணையப்பக்கம்

அண்மையில் நான் பயன்படுத்தி வரும் ஒரு கருவி, ‘பிலாண்டுரோனிக்ஸ் பேக்பீட் ஃபிட் 610’ (Plantronics BackBeat FIT 6100). இந்த இசைக் கருவியைப் பற்றி சுருக்கமாக:

  1. ‘பிஸ்ட் மொட்’ (Beast mode) என்றழைக்கப்படும் அம்சம் கேட்பொறி அவரவர் தலையின் அளவுக்கு ஏற்றவாறு இறுக்கிக்கொள்ள உதவுகிறது. 

  2. புளூடூத் (bluetooth) வசதி கேட்பொறியைத் திறன்பேசியுடன் இணைக்கிறது. 5 நொடிகளுக்குள் இணைத்து விரும்பிய பாடலைக் கேட்கலாம். இணைப்புவடத்தின் (wire) தொல்லையின்றி பாடலைக் கேட்பது எனக்குப் பிடிக்கும். இணைப்புவட அம்சமும் இந்த கேட்பொறிக்கு உண்டு.

  3. இசையுடன் சுற்றுப்புற ஒலிகளையும் கேட்கும் ‘ஓப்பன் மைக்’ (Open mic) வசதி இதில் உண்டு. இதனால், பாட்டுக்கேட்டுகொண்டே பொது இடங்களில் வாகனம் மோதிவிடுமோ என்ற பயமின்றி உடற்பயிற்சி செய்யலாம். 

  4. இரண்டு மணி நேரத்திற்கு மேல் காதில் பொருத்திக்கொள்வது கடினம், காதுகள் சூடாகிவிடும். 

  5. நீடித்த மின்கல ஆயுட்காலம் (battery life) உடையது. இடைவிடாமல் 24 மணி நேரம் பயன்படுத்தலாம். எனது வழக்கமான பயன்பாட்டிற்கு வாரத்திற்கு ஒரு முறை மின்னூட்டு (charge) செய்தால் போதும்.