காணொளியில் கதை சொல்லும் போட்டி

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ‘காணொளியில் கதை சொல்லும் போட்டி’ ஒன்றை மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இம்மாதம் நடத்துகிறது. கற்பனைக்கு ஏற்ற ஒரு சிறுகதையை எழுதி, வாசித்து, காணொளிப் பதிவினை நாளை மறுதினம், மே 22ஆம் தேதிக்குள் 8725 8701 என்ற கைபேசி எண்ணிற்கு வாட்ஸ்அப் வழி அனுப்பி வைக்க வேண்டும்.

பொதுப் பிரிவுப் போட்டியில் பங்கு பெறுவோருக்கு $100, $70, $50 என மூன்று ரொக்கப் பரிசுகள் அளிக்கப்படும். மாணவர் பிரிவுப் போட்டியில் பங்கு பெறுவோருக்கு $60, $40, $30 என மூன்று ரொக்கப் பரிசுகள் அளிக்கப்படும்.

பொதுப் பிரிவுப் போட்டியில் பங்கு பெறுவோர் சொந்தமாக எழுதும் புதிய கதையை வாசித்து அனுப்ப வேண்டும். எழுத்தாளரே வாசிக்கலாம் அல்லது இன்னொருவரை வாசிக்க வைத்தும் காணொளியில் பதிவிட்டு போட்டிக்கு அனுப்பலாம். மாணவர் பிரிவுப் போட்டியில் புதிய அல்லது ஏற்கெனவே எழுதிய கதையை மாணவர் குரலில் வாசித்து, காணொளியில் பதிவு செய்து போட்டிக்கு அனுப்பலாம்.

சிறுகதை அளவிற்கு வார்த்தை வரம்புகள் இல்லை. காணொளிப் பதிவு 3 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும். ஒருவர் ஒரு கதையை மட்டுமே அனுப்ப முடியும். எழுத்தாளரின் பெயர் மற்றும் வாசிப்பவரின் பெயரைக் காணொளியில் பதிய வேண்டாம். எழுத்தாளர்/வாசிப்பவரின் பெயர்(களை) தனியே குறுஞ்செய்தியில் புகைப்படத்துடன் இணைத்து அனுப்பவும்.

காணொளி landscape modeஇல் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். சிங்கப்பூர் அடையாள அட்டை எண் உள்ள அனைவரும் இப்போட்டியில் பங்குபெறலாம்.

காணொளி கதைகள் தணிக்கைக் குழுவினரின் ஒப்புதலுக்குப் பின் வாட்ஸ்அப் மூலமாகவும் ஃபேஸ்புக் வழியாகவும் பதிவு செய்யப்படும். பார்வையாளர்கள் மதிப்பீடு செய்வார்கள். இம்மாதம் 31ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

மேல் விவரங்களுக்கு http://singaporetamilwriters.com/ எனும் இணையப்பக்கத்திற்குச் செல்லலாம். அல்லது 9169 6996 / Premapathi2303@gmail.com எனும் கைபேசி எண்ணில்/மின்னஞ்சல் முகவரியில் திருமதி பிரேமா மகாலிங்கத்தை தொடர்புகொள்ளலாம்.