பாதுகாப்பான, சுலபமான மின் கட்டண முறை

மின்னிலக்கமயமாக்கல் முயற்சிகள் உணவங்காடி கடைக்காரர்கள், வாடிக்கையாளர்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தியுள்ளன. மின்னிலக்க முறைக்கு மாறியதன்மூலம் ஏற்பட்டுள்ள அனுகூலங்கள் குறித்து உணவுக் கடைக்காரர்கள் விவரிக்கின்றனர்.

திருமதி சயது முகமது ஜஸ்மீன், திருமதி கபத்துல்லா சபா­ரியா பானு இருவரும் கடந்த 2020ம் ஆண்டு அக்­டோ­பர் மாதத்­தில் இருந்து ஹாஜி சையது ரெஸ்டாரண்ட் என்ற உண­வ­கத்தை நிர்­வகித்து வரு­கின்­றனர். இதற்கு முன்பு, டன்­லஃப் ஸ்தி­ரீட்­டில் உணவுக் கடையை நடத்­தி­வந்­தார். உணவு வியா­பா­ரத்­தில் இவ­ரும் இவ­ரது குடும்­பத்­தா­ரும் பல ஆண்­டு­க­ளாக ஈடு­பட்டு வந்­துள்­ள­னர்.

பிடோக்கில் உள்ள இக்கடை­யில் இஸ்­லா­மிய கடல் உணவு பிர­ப­ல­மான ஒன்­றாக வாடிக்­கை­யா­ளர்­க­ளால் விரும்பி உண்­ணப்­ப­டு­கின்­றது.

வார இறு­தி­களும் தின­சரி மாலை நேரங்­களும் வாடிக்­கை­யா­ளர்­கள் அதி­கம் வரக்­கூ­டிய நேரங்­கள் என்று திரு­மதி சபா­ரியா தெரி­வித்­தார்.

கொவிட்-19 காலம் சற்று தணிந்த அக்­டோ­பர் மாத வாக்­கில் இந்த உண­வ­கத்தை ஆரம்­பித்­த­தால் ஓர­ளவு வியா­பா­ரத்தை சமா­ளிக்க முடிந்­தது. மேலும் வீவக குடி­யி­ருப்­பில் கடை அமைந்­தி­ருப்­ப­தால் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளின் ஆத­ரவு அவர்­க­ளுக்­குக் கிடைத்­தது. நேர­டி­யாக வரு­வோ­ரும் உணவை வாங்­கிச் செல்­வோ­ரும் நல்ல எண்­ணிக்­கை­யில் இருந்­த­னர்.

கடை­யைத் திறந்த சில நாட்­க­ளி­லேயே மின்­கட்­டண முறையை திரு­மதி சபா­ரியா அறி­மு­கப்­ப­டுத்­தி­விட்­டார். அதன் பய­னால் பல வாடிக்­கை­யா­ளர்­கள் மின் கட்­டண முறையைப் பயன்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.

பாக்­கிப் பணம் கொடுத்­தல், அதற்­காக சில்­லறை காசு­களை வங்­கி­யில் மாற்றி வைத்­துக்­கொள்­ளு­தல் போன்ற நட­வ­டிக்­கை­களை மின்­கட்­டண முறை தவிர்த்­துள்­ளது வர­வேற்­க­வேண்­டிய மாற்­றம் என்­றார் திரு­மதி சபா­ரியா. நெட்ஸ் கட்­டண முறை­யைக் காட்­டி­லும் மின் கட்­டண முறை அதிக வச­தி­யா­னது என்­றார். வர்த்­த­கர்­கள் கட்­ட­ணத்தை உறுதி செய்­த­தும் இயந்­தி­ரத்­தில் உறுதி படி­வத் தாளை கிழித்து வைத்­துக்­கொள்­ள­வேண்­டும். வாடிக்­கை­யா­ளர்­கள் அவர்­க­ளது கை­பே­சி­யில் கட்­ட­ணம் கழிக்கப்­பட்­டதை அவர்­களே பார்த்து உறுதி செய்­து­கொள்­ள­வேண்­டும். இது இரு­வ­ருக்­கும் மிக வச­தி­யாக உள்­ளது என்­றார் திரு­மதி சபா­ரியா.

அவ­ரது வாடிக்­கை­யா­ளர்­களில் 45 முதல் 50% நபர்­கள் இந்த மின் கட்­டண முறையை பயன்­ப­டுத்­தி­வ­ரு­கின்­ற­னர். தம் உண­வ­கத்­தில் செயல்­படும் மற்ற உணவு ஸ்டால் உரி­மை­யா­ளர்­க­ளை­யும் இந்த மின்­கட்­டண முறைக்கு மாறிட அறி­வு­றுத்தி யுள்ளார்.

நேர­டி­யாக வங்­கிக் கணக்­குக்­குச் செல்லும் பணம்

தனது 18 வயது முதல் உணவு வியா­பா­ரத்­தில் பணி­யாற்­றி­வந்­துள்­ளார் திரு. சம்­சு­தின் அப்­துல் ரஹ்­மான். அவ­ருக்கு இப்­பொ­ழுது 47 வய­தா­கின்­றது. ஓ நிலை கல்வி பயி­லும் நாட்­களில் தனது தந்­தை­யா­ரின் உண­வுக் கடை­யில் உதவி வந்­துள்­ளார். முன்பு செங்­காங் அங்­கர்­வேல் உணவு அங்­கா­டி­யில் 5 வரு­டங்­க­ளாக உண­வுக் கடை நடத்­தி­வந்­த­வர். கடந்த 2018 அக்­டோ­பர் மாதம், ஏ.ஆர்.ரஹ்­மான் இந்­தி­யன் முஸ்­லிம் ஃபூட் என்ற தனது கடையை பாசிர் ரிஸ் சென்ட்­ரல் ஹாக்­கர் சென்­டர் என்ற உணவங்காடி நிலையத்திற்கு இட­ம் மா­றி­னார்.

தின­மும் மாலை 6 முதல் 8 மணி வரை நல்ல கூட்­டத்தை அவ­ரது கடை சமா­ளித்து, சிறந்த முறை­யில் சேவை வழங்­கி­வ­ரு­கின்­றது.

கொவிட்-19 தொற்று பர­விய ஆரம்ப காலத்­தில், அவ­ரது வியா­பா­ர­மும் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டது. பல வாடிக்­கை­யா­ளர்­கள் வீட்­டில் இருக்க வேண்­டிய சூழ­லும் அவர்­கள் இல்­லங்­க­ளி­லேயே சமைத்­துக்­கொண்­டி­ருந்­த­தும் திரு அப்­துல் ரஹ் மானின் வர்த்­த­கத்தை முடக்­கி­யது. ஆயி­னும் அர­சாங்­கம் வழங்­கிய வாடகை ஒத்தி­வைப்பு போன்ற உதவி அவ­ருக்குப் பெரும் ஆத­ர­வாக அமைந்­தது. சுமார் 80% வியா­பா­ரம் நஷ்­டம் அடைந்த காலம் அது என்று திரு அப்­துல் ரஹ்­மான் நினை­வு­கூர்ந்­தார்.

கடந்த 2020ஆம் ஆண்­டின் மத்­தி­யில் இந்த மின்­கட்­டண முறையை அவர் கடை­யில் அறி­மு­கப்­ப­டுத்­தி­னார். அந்த கட்­டண முறை அவ­ருக்குப் பல நன்­மை­க­ளைத் தந்­தது. அனை­வ­ரும் எளி­தில் புரிந்­து­கொண்டு பயன்­ப­டுத்­தக்­கூ­டிய கட்­டண முறை என்று அவர் கூறி­னார். மேலும் மின்­னி­யல் தொழில்­நுட்­பத்தை நன்கு அறிந்­தால்­தான் இந்த கட்­டண முறை­யைப் பயன்­ப­டுத்த முடி­யும் என்­ப­தில்லை என்­றும் வலி­யு­றுத்­தி­னார்.

அவ­ச­ரத்­தில் வாடிக்­கை­யா­ளர்­கள் பணம் எடுத்­து­வர மறந்­து­விட்­டா­லும் இந்த ரொக்கமற்ற கட்­டண முறை பெரி­தும் உத­வி­யாக உள்­ள­தாக சொன்­னார் திரு ரஹ்­மான். உணவு தயா­ரிப்­பில் கவ­னம் செலுத்­தும் நேரத்­தில் கட்­ட­ணத்தை வசூ­லிப்­ப­தைப் பற்­றிய கவலை இன்றி அவ­ரைப் போன்­றோர் செயல்­ப­டு­வ­தற்கு இது பெரும் உத­வி­யாக உள்­ளது.

அவ­ரது கடைக்கு அடிக்­கடி வரும் வாடிக்­கை­யா­ளர்­களில் 30% இளை­யர்­கள் மற்­றும் மத்­திம வய­து­டை­ய­வர்­கள் இந்த மின் கட்­டண முறையைப் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர்.

இதன் பயன்­பாட்டை சிறி­து­கால பயிற்­சிக்­குப் பிறகு அறிந்­து­கொண்டு, அவ­ரது கடைக்கு அரு­கில் உள்ள மற்ற கடைக்­கா­ரர்­க­ளுக்­கும் திரு ரஹ்­மான் மின்­கட்­டண முறையைப் பரிந்­து­ரைத்­துள்­ளார். இத­னு­டன் சாங்கி வட்­டா­ரத்­தில் உண­வுக் கடை நடத்­தி­வ­ரும் தம் உற­வி­ன­ருக்­கும் இந்த கட்­டண முறை­யின் பயன்­களை எடுத்­து­ரைத்து அவர்­க­ளை­யும் இதற்கு மாறிக்­கொள்ள வேண்­டி­யுள்­ளார்.

இந்த கட்­டண முறையை வியா­பா­ரத்­துக்குப் பயன்­ப­டுத்த தாம் ஒப்­பு­தல் அளித்த சில நாட்­க­ளி­லேயே அதிகாரிகள், மின் கட்­டண பதா­கை­களை அவ­ரது கடை­யில் கட்­ட­மைத்து, மிக எளி­தாக அதை தாம் தொடங்­கி­விட்­ட­தை­யும் அவர் தெளி­வு­படுத்­தி­னார்.

மிக­வும் சுல­ப­மான கட்­டண முறை­யான இதனை பல­ரும் பயன்­ப­டுத்­து­வதை இவர் ஊக்­கு­விக்­கின்­றார். வியா­ரி­க­ளுக்­கும் வாடிக்­கை­யா­ளர்களுக்­கும் ஒருங்கே பய­ன­ளிக்­க­வல்ல இந்த முறை நீண்­ட­கா­லத்­துக்கு நீடிக்­கும் என்­றும் அவர் விரும்­பு­கின்­றார்.

பர­ப­ரப்­பான சூழ­லில், வாடிக்­கை­யா­ளர்­களும் வர்த்­த­கர்­களும் மிக இயல்­பாக இந்த ரொக்­க­மற்ற கட்­டண முறையை சிங்­கப்­பூ­ரின் பல உணவு நிலை­யங்­களில் பயன்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.

விளம்பரச் செய்தி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!