இரு உடற்பயிற்சி கையேடுகள் வெளியீடு

உலக உட­லி­யக்­கப் பயிற்சி தினத்தை முன்­னிட்டு டான் டோக் செங் மருத்­து­வ­மனை இரு உடற்­ப­யிற்சி கையே­டு­களை இம்­மா­தம் 8ஆம் தேதி வெளி­யிட்­டது. ‘Keep It Fit’, ‘Get Active’ ஆகிய இந்த நூல்­கள் துடிப்­பான வாழ்க்­கை­மு­றையை மேற்­கொள்­வ­தற்­கான படங்­கள், காணொ­ளி­கள், தக­வல்­கு­றிப்­பு­க­ளைக் கொண்­டுள்­ளது.

இளை­யர்­கள், முதி­யோர் இரு­த­ரப்­பி­ன­ருக்­கு­மான ஏரோ­பிக் பயிற்­சி­கள், உடலை பலப்­ப­டுத்­தும் பயிற்­சி­கள், உடலை சம­நி­லைப்­ப­டுத்­தும் பயிற்­சி­கள் இவற்­றில் உள்­ளன.

பாதிப்­பின் அள­வைப் பொறுத்து கொவிட்-19 கிருமி ஒரு­வ­ரது உட­லில் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­கிறது. நுரை­யீ­ரல் பாதிக்­கப்­ப­ட­லாம். பெரும்­பா­லா­னோர் நன்கு குண­ம­டைந்து விடு­கின்­றனர்.

ஆனால், கடு­மை­யான பாதிப்­புக்கு உள்­ளா­னோ­ருக்கு தொடர்ந்து மூச்­சு­வி­டு­வ­தில் சிர­மம், சோர்வு, நுகர் உணர்ச்சி குறைந்­தி­ருத்­தல் போன்ற பிரச்­சி­னை­கள் சில காலத்­துக்­குத் தொட­ர­லாம்.

மருத்­து­வ­ம­னை­யில் இருக்­கும்­போது, வாதம், நுரை­யீ­ரல் அல்­லது நாளங்­களில் ரத்­தம் உறை­தல் போன்ற பிரச்­சி­னை­கள் ஏற்­பட்­டால் அவர்­கள் நலம்­பெற சிறிது காலம் ஆகும்.

நிமோ­னியா, கொவிட்-19 பாதிப்­பைக் கடு­மை­யாக்­கு­கிறது. சில­ருக்கு சுவா­சிக்க சுவா­சக் கருவி தேவைப்­படும். உட­லி­யக்க சிகிச்சை நிபு­ணர்­கள் அவர்­க­ளுக்கு சளியை வெளி­யேற்றி சுவா­சத்தை எளி­தாக்க உத­வு­கின்­ற­னர். மறு­வாழ்வு பயிற்­சி­களில் உட­லி­யக்­கப் பயிற்சி சிகிச்­சை­யா­ளர்­கள் முக்­கிய பங்­காற்­று­கின்­ற­னர்.

ஒரு­வ­ரின் உடல் குண­ம­டை­யும் முயற்­சி­யில், முன்­கூட்­டியே அளிக்­கப்­படும் உட­லி­யக்க சிகிச்சை உதவு­கிறது.

இந்த நூல்களை https://www.ttsh.com.sg/ டான் டொக் செங் மருத்துவ மனையின் இணையப் பக்கத்தில் காணலாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!