உடல்நலம் காக்கும் நல்லெண்ணெய் குளியல்

புத்தாடை, பலகாரம், பட்டாசு என மகிழ்ச்சித் திருநாளாகக் கொண்டாடப்படும் தீபாவளித் திருநாள் நாளை  கொண்டாடப்பட உள்ளது.  இந்த நன்னாளன்று அதிகாலை யில் எண்ணெய் தேய்த்துக் குளிப் பது ஒரு பாரம்பரியச் சடங்காகப் பின்பற்றப்பட்டு வருகிறது.   

தீபாவளி அன்று நீராடுவதை ‘புனித நீராடல்’ என்று முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். ‘புனித நீராடல்’ என்று சொல்வ தற்குக் காரணம், அன்றைய தினம் அதிகாலையில் எல்லா இடங்களிலும் உள்ள தண்ணீரில் கங்கையும் காவிரித் தாயும் இருப்பதாக ஓர் ஐதீகம். அதேபோல் எண்ணெய்யில் லட்சுமியும் அரப்புப் பொடியில் சரஸ்வதியும் குங்குமத்தில் கௌரியும் சந்தனத்தில் பூமா தேவியும் புத்தாடைகளில் மஹா விஷ்ணுவும் வசிப்பதாகவும்  நம்பிக்கை உள்ளது. 

எண்ணெய் தேய்த்ததும் 15 நிமிடம் முதல் 30 நிமிடத்திற்குள் குளித்துவிட வேண்டும்.
மிதமான வெந்நீரை பயன்படுத்தி குளிக்க வேண்டும். ஷாம்புவை தவிர்த்து சீயக்காயை பயன்படுத்த லாம். குளித்த பிறகு குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்க்கவேண்டும்.

இந்த எண்ணெய் குளியளினால் கிடைக்கும் நன்மைகளும் ஏராளம்.    
  உடல் உஷ்ணம் தணியும்.
  சருமம் வறண்டு போகாமல் மென்மையாக இருக்கும்.
  உடல் சோர்வு, உடல் வலி நீங்கும்.
  நல்ல உறக்கத்தை தூண்டும்.
  கண்களுக்கு குளிர்ச்சி ஏற்படுவதால் கண்பார்வைக்கும் பயனாக உள்ளது.
 உடல் வெப்பத்தினால் ஏற்படும் நோய்களைத் தடுக்கும்.

எண்ணெய் குளியல் என்றாலே நல்லெண்ணெய்தான். அதிலும் சுத்தமான மரச்செக்கு நல்லெண் ணெய் பயன்படுத்துவது சிறந்தது.

எனவே, நன்மைகளின் சுரங்கமாக இருக்கும் எண்ணெய்க் குளியலை இந்த  தீபாவளியில் இருந்து வாரந்ேதாறும் குளிப்பதற்கு    பழக்கமாக்கிக் கொள்ளுங்கள் என்கின்றனர் தமிழக சித்த மருத்துவர்கள் விக்ரம்குமார், பேச்சி ஆகியோர்.

‘உடலுக்கு புத்துணர்ச்சி தரும் தீபாவளி எண்ணெய் குளியல் குறித்து, அரசு சித்த மருத்துவர் பேச்சி ஆலோசனை வழங்கினார்.

நரம்புகளின் செயல்பாடு அதிகரிக்கும். சரும அழுக்குகளை நீக்கும்.  

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!