கூகல் கணக்கு வைத்திருப்போர்க்குக் கட்டாயமாகிறது

ஒருமுறை சொடுக்குவதன் மூலம் ஒருவர் தமது கூகல் கணக்கில் நுழையும் நடைமுறை விரைவில் முடிவிற்கு வரவிருக்கிறது.

கூகல் கணக்கினுள் செல்ல புதிய நடைமுறையை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

கூகலில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் இருவழிச் சரிபார்ப்பு முறையின் (2SV) மூலமே அதில் நுழைய முடியும். கூடுதல் பாதுகாப்பிற்காக இம்முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

இம்மாதம் 9ஆம் தேதியில் இருந்து அனைத்து கூகல் கணக்குகளுக்கும் இந்த 2எஸ்வி முறை அறிமுகப்படுத்தப்படும்.

இந்த 2எஸ்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டபின், ஒருவர் மறைச்சொல் கொண்டு முதலில் தமது கணக்கில் நுழைய வேண்டும். 

பின்னர் தமது கைபேசி எண்ணை அவர் தரவேண்டும். அதன்பின் குறுஞ்செய்தியாகவோ, குரல் அழைப்பாகவோ, அல்லது கூகல் மொபைல் செயலி வழியாகவோ அவருக்கு ஒற்றை மறைச்சொல் (ஓடிபி)  அனுப்பப்படும். அதனை அவர் உள்நுழைப் பட்டியில் (login bar) குறிப்பிட வேண்டும்.

கூகலில் கணக்கு வைத்துள்ளோரில் பலர் ஏற்கெனவே இந்த 2எஸ்வி முறையைப் பயன்படுத்தி வருகின்றனர். வரும் 9ஆம் தேதியில் இருந்து கூகல் கணக்கு வைத்துள்ள அனைவர்க்கும் இது கட்டாயமாகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!