சுவையான தொலைக்காட்சி நிகழ்ச்சி வேண்டுமா? நக்கிப் பாருங்கள்!

தொலைக்காட்சியில் உணவைப் பார்த்து எச்சில் ஊறி ஏங்கும் நாட்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வரக்கூடும். 

ஜப்பானிய பேராசிரியர் ஒருவர், நக்கினால், அதில் தெரியும் உணவின் சுவையைத் தரும் தொலைக்காட்சித் திரையை உருவாக்கியுள்ளார். 

சுவையான நிகழ்ச்சி என்பதற்கு வேறொருப் பொருளைத் தருகிறது இந்தக் கண்டுபிடிப்பு. 

தொலைக்காட்சி பார்ப்பதைக் கண்களுக்கும் காதுகளுக்குமான அனுபவமாக மட்டுமில்லாமல், மற்ற புலன்களுக்குமான அனுபவமாக மாற்றுவது இதன் நோக்கம்.  

'டேஸ்ட் தி டிவி' எனும் அச்சாதனத்தை மெய்ஜி பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹோமெய் மியாஷிட்டா உருவாக்கியுள்ளார். 

அதில் பல்வேறு சுவைகள் கொண்ட பத்து உருளிகள் உள்ளன. 

திரையில் தோன்றும் உணவுக்கு ஏற்ப அவற்றைப் பல கலவைகளில் கலந்தால், அந்தக் குறிப்பிட்ட உணவில் உள்ள சுவைகள் கிடைக்கும். 

file7iyirwi9bhie0vgu8lw.jpg

Property field_caption_text
  • இயந்திரத்தில் உள்ள கலன்களில் வெவ்வேறு சுவைகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றைக் கலந்து திரையில் தோன்றும் உணவின் சுவையைக் கொண்டு வருகிறது அந்த இயந்திரம். 

பார்வையாளர் திரையை நக்கி பார்ப்பதற்கு ஒரு முறை பயன்படுத்தி வீசக்கூடிய பிளாஸ்டிக் தாள் உள்ளது. 

ஆரம்பநிலையில் உள்ள இந்த சாதனத்தை உருவாக்க ஓராண்டு பிடித்ததாக பேராசிரியர் மியாஷிட்டா கூறினார். 

ஒரு சாதனத்தை வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்ய 1190 சிங்கப்பூர் வெள்ளி பிடிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். 

வாடிக்கையாளர்கள் சுவைப்பதற்கான உணவு மாதிரிகளாக அல்லது சமையல் நிபுணர்களுக்கான பயிற்சிச் சாதனங்களாக அல்லது வீடியோ விளையாட்டுகளாக இந்தச் சாதனத்தை மேம்படுத்தி உருவாக்கலாம் என்றார் பேராசிரியர் மியாஷிட்டா. 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!