ஒற்றையாளாக உலகை வலம் வந்து சாதனை படைத்த ஸாரா

பிர­சல்ஸ்: ஆக இளம் வய­தில் ஒற்­றை­யா­ளாக உலகை வலம் வந்து, கின்­னஸ் சாத­னைப் புத்­த­கத்­தில் தமது பெயரை இடம்­பெறச் செய்­துள்­ளார் பிரிட்­டிஷ்-பெல்­ஜி­யப் பெண்­ணான ஸாரா ரதர்­ஃபர்ட், 19.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி, உல­கின் அதி­வேக குறு­வி­மா­னத்­தில் இந்­தச் சாதனை முயற்­சி­யைத் தொடங்­கி­னார் ஸாரா. ஐந்து கண்­டங்­கள், 52 நாடு­கள் என 51,000 கிலோ­மீட்­டர் தொலைவு பறந்த பிறகு நேற்று முன்­தி­னம் 20ஆம் தேதி பெல்­ஜியத்­தின் கோர்ட்­ரைக்-வெவல்­ஜிம் விமான நிலை­யத்­தில் இவர் தரை­யி­றங்­கி­னார்.

அங்கு இவ­ருக்­குப் பெரும் வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது. தமது இப்­ப­ய­ணத்­தில் பல அற்­பு­தத் தரு­ணங்­க­ளைச் சந்­தித்­த­தா­கக் கூறிய ஸாரா, மீண்­டும் ஒரு­முறை தம்­மால் இச்­சா­த­னை­யை நிகழ்த்­தவே முடி­யாது என்­றும் சொன்­னார்.

ஆப்­கா­னிஸ்­தா­னில் பிறந்த அமெ­ரிக்­கப் பெண்­ணான ஷேஸ்டா வைஸ் கடந்த 2017ஆம் ஆண்டு தமது 30வது வய­தில் தனி­யா­ளாக உலகை வலம் வந்­ததே முன்­னைய சாதனை­.

ஆண்களைப் பொறுத்தமட்டில், 2018ல் தமது 18வது வய­தில் தனி­யாக உல­கைச் சுற்றி வந்து சாதனை படைத்திருந்தார் அமெ­ரிக்­கா­வின் மேசன் ஆண்ட்­ரூஸ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!