செல்லப் பிராணிகளால் ஏற்படும் ஒவ்வாமையை தவிர்க்க சுத்தம் முக்கியம்

கொவிட் கிருமி பர­வல் சூழ­லில் பலர் செல்­லப் பிரா­ணி­க­ளு­டன் அதிக நேரம் செல­வ­ழித்­த­வர்­கள் கொரோனா காலத்­தில் தங்­க­ளது மன­ந­லம் பாதிப்­ப­டை­யா­மல் பாது­காத்­துக்கொண்­ட­தாக பல்­வேறு ஆய்வு முடி­வு­கள் கூறு­கின்­றன.

நாய், பூனை போன்ற விலங்­கு­களை வளர்ப்­பது மன உளைச்­ச­லைக் குறைக்­கிறது. தனிமை உணர்­வைப் போக்­கு­கிறது. பொறுமை, அன்பு, சகிப்­புத்­தன்மை போன்ற குணங்­களை வளர்க்கிறது.

செல்­லப் பிரா­ணி­க­ளு­டன் நேரத்தைச் செல­வ­ழிப்­பது மனச்­சோர்வு, பதற்­றம், மன அழுத்­தத்தை போக்­கு­கிறது.

வேலை நேரங்­களில் ஏற்­படும் மனச்­சோர்வை சமா­ளிக்க உதவும்.

நாய் வளர்த்­தால், அன்­றா­டம் வெளி­யில் நடக்க அழைத்­துச் செல்ல வேண்­டும். இது நாய் வளர்ப்­ப­வ­ரின் நடைப் பயிற்சி தொடர உத­வு­கிறது. இவ்­வாறு உடற்­ப­யிற்­சி­யு­டன் தோழமை உணர்­வை­யும் செல்­லப் பிரா­ணி­கள் வளர்க்­கின்­றன. நேர்­ம­றை­யான எண்­ணங்­க­ளை­யும் வளர்க்­கக்­கூ­டும்.

அதே நேரத்­தில் முறை­யாக வளர்க்­கப்­படும் செல்­லப்­பி­ரா­ணி­கள் மட்­டுமே, மனி­தர்­க­ளின் மன­துக்­கும் உட­லுக்­கும் நன்மை செய்­யும் என்­ப­தை­யும் கவ­னத்­தில் கொள்ள வேண்­டும் என்­பது உள­வி­யல் நிபு­ணர்­க­ளின் அறி­வுரை.

அத்­து­டன், ஒவ்­வா­மைப் பிரச்­சி­னை­கள் ஏற்­படும் சாத்­தி­ய­மும் உண்டு. செல்­லப் பிரா­ணி­களை வளர்ப்­பது ஆஸ்­து­மா­வைத் தூண்­டும் என்று பல ஆய்­வு­களும் மருத்­து­வர்­களும் கூறி­யுள்­ள­னர்.

வளர்ப்­புப் பிரா­ணி­க­ளின் உட­லில் இருந்து உதி­ரும் செல்­கள், ரோமம், உமிழ்­நீர், சிறு­நீர், மலக் கழிவு ஆகி­யவை காற்­றில் கலந்து சுவாச, சரும ஒவ்­வா­மை­களை ஏற்­ப­டுத்­தும்.

இவை பெரும்­பா­லும் கண்­ணுக்­குத் தெரி­யாத அள­விலேயே உள்­ளன.

இவை உடை­கள், சன்­னல் திரைச்­சீ­லை­கள், சோபா, படுக்கை விரிப்­பு­கள், தலை­யணை உறை­கள், மிதி­ய­டி­கள், கழி­வறை உப­க­ர­ணங்­கள், கைப்­பி­டி­கள் போன்­ற­வற்­றில் பல வாரங்­க­ளுக்கு ஒட்­டி­யி­ருக்­கும்.

அவை உட­லுக்­குள் சென்று ஒவ்­வா­மையை ஏற்­படுத்­தும்.

பூனை, நாய், முயல், கிளி, புறா, கோழி போன்ற வளர்ப்­புப் பிராணி­களைத் தொட்­டுத் தூக்­கும்­போதும், அவற்­றோடு விளை­யாடும் ­போ­தும் இவை நேர­டி­யா­கவே உட­லில் பட்டு ஒவ்­வா­மைக்­கான அறி­கு­றி­களை வெளிப்­ப­டுத்­தும்.

மூக்கு ஒழு­கு­வது, தும்­மல், அரிப்பு, தடிப்பு, சரு­மம் சிவந்து வீங்­கு­வது, ஆஸ்­துமா போன்­றவை ஏற்­ப­டு­கின்­றன.

எனி­னும் சில பாது­காப்பு நடை­மு­றை­க­ளைக் கடைப்­பி­டித்­தால் ஆஸ்­துமா அதி­க­மா­கும் சாத்­தி­யத்­தைக் குறைக்­க­லாம்.

 

 வளர்ப்­புப் பிராணியை தனி­யாக ஒரு அறை­யில் வளர்த்­தால் பாதிப்புக் குறையும்.

 படுக்கை அறைக்கு பிரா­ணி­கள் வரா­மல் பார்த்­துக்­கொள்­வது நல்­லது.

 பூனை, நாய், முயல், கிளி போன்­ற­வற்­றைத் தொட்­டுத் தூக்­கு­வது, முத்­தம் கொடுப்­பது போன்ற பழக்­கங்­க­ளைத் தவிர்க்­க­லாம்

 வீட்டை அடிக்­கடி துடைத்து சுத்­த­மாக வைத்­தி­ருக்க வேண்டும்.

 படுக்கை விரிப்­பு­கள், தலை­யணை உறை­களை வாரம் ஒரு­முறை சூடான தண்­ணீ­ரில் ஊற­வைத்து, அலசி சுத்­தம் செய்ய வேண்­டும். சன்­னல் திரைச்­சீ­லை­களை அடிக்­கடி மாற்ற வேண்­டும்.

 ஹெப்பா ஃபில்டர் (HEPA filter) பொருத்­தப்­பட்ட 'வேக்யூம் கிளீ­னர்'­ மூலம் சோபா, மிதி­யடி, படுக்கை விரிப்­பு­க­ளைச் சுத்தப்­ப­டுத்த வேண்­டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!