உடல் பருமன் குறைக்க கீரைகள்

கலோரி குறைந்த, நார்ச்­சத்து அதி­க­முள்ள கீரை­கள் பொது­வா­கவே உட­லுக்கு நன்மை பயக்­கும் உண­வா­கும். புதி­தா­கப் பறிக்­கப்­பட்ட கீரை­கள் ஊட்­டச் சத்து நிறைந்­தவை. கீரை­கள் உடல் பரு­ம­னைக் குறைக்க விரும்­பு­ப­வர்­க­ளுக்கு ஏற்ற உண­வாக உள்­ளன.

வெந்­த­யக்­கீரை

வெந்­த­ய­மும் அதன் கீரையும் கசப்­பா­னவை. ஆனால், ஊட்­டச்­சத்து நிறைந்­தவை.

வெந்தயக் ­கீரை நீரி­ழிவு அபா­யத்­தைக் குறைக்­கிறது. எடை­யைக் குறைக்­க­வும் வீக்­கத்­தைக் குறைக்­க­வும் உத­வு­கிறது. இத­யம், ரத்த அழுத்­தம் தொடர்­பான சிக்­கல் உள்­ள­வர்­க­ளுக்­கும் நன்மை பயக்­கும்.

முள்­ளங்­கிக் கீரை

முள்­ளங்­கிக் கீரையை பல­ரும் உண்­ப­தில்லை என்­றா­லும், இவை சத்­தும் சுவை­யும் நிறைந்­தது. இது குறை­வான கலோ­ரி­க­ளைக் கொண்­டுள்­ளது. 100 கிராம் முள்­ளங்­கிக் கீரை­யில் 16 கலோ­ரி­கள் மட்­டுமே உள்­ளது. இக்கீரை வளர்­சிதை மாற்­றத்­திற்கு ஏற்­றது.

கடு­குக் கீரை

வைட்­ட­மின் சி, நார்ச்­சத்து நிறைந்த, குறைந்த கலோரி கொண்­டது. எடை குறைக்க உத­வு­கிறது. 100 கிராம் கடு­குக் கீரை­யில் 27 கலோ­ரி­கள் உள்­ளன.

பச­லைக்­ கீரை

பலரும் விரும்பிச் சாப்பிடும் இது, ஊட்­டச்­சத்து நிறைந்த கீரை.

100 கிராம் கீரை­யில் 23 கலோ­ரி­களும் 99 மில்லி கிராம் கால்­சி­யமும் உள்­ளது. பெண்­க­ளுக்­கும் வய­தா­ன­வர்­க­ளுக்கும் மிக­வும் ஏற்­றது.

எனி­னும் பெரும்பாலான கீரை வகைகள் செரி­மா­னம் ஆக தாம­தம் ஆகும் என்­ப­தால் இரவு நேரத்­தில் கீரை சாப்­பி­டு­வ­தைத் தவிர்ப்­பது நல்­லது. பகல் உணவில் கீரை சேர்த்துக் கொண்டால் போதுமானது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!