கணிதத் திறனை வளர்க்கும் பாரம்பரிய விளையாட்டுகள்

சிறியோரும் முதியோரும் உற்சாகமாக விளையாடி குடும்பப் பிணைப்பை வலுப்படுத்தவும் விளையாட்டோடு விளையாட்டாக கணித அறிவை எளிதாக வளர்த்துக்கொள்ளவும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் பெரிதும் துணைபுரிகின்றன. இப்போதைய கொரோனா கால சூழலில் கணினி, கைபேசியில் மணிக்கணக்கில் மூழ்கிப்போகும் சிறுவர்களை இந்தப் பாரம்பரிய விளையாட்டுகள் திசைதிருப்பி வருகின்றன.

தமி­ழர்­க­ளால் வழி­வ­ழி­யாக விளை­யா­டப்­பட்டு வந்த விளை­யாட்­டு­களே தமி­ழர் பாரம்­ப­ரிய விளை­யாட்­டு­கள் என அழைக்­கப்­ப­டு­கின்­றன.

தாயக்­கட்டை, பல்­லாங்­குழி, ஆடும் புலி­யும், பாம்­பும் ஏணி­யும், பம்­ப­ரம், சதுரங்கம், பச்சக்குதிரை, மூன்று கல் ஆட்­டம், உப்புமூட்டை தூக்­கல், கூட்­டாஞ்­சோ­றாக்­கல், கோலி, பருப்­புக்­கட, கிச்சு கிச்சு தாம்­ப­லம், கில்லி, ஒத்­தையா, ரெட்­டையா, கர­கர வண்டி, சீதைப் பாண்டி, ஒரு­கு­டம் தண்ணி ஊத்தி, குலை­குலையா முந்­தி­ரிக்­காய், நொண்டி உள்ளிட்ட ஏரா­ள­மான விளை­யாட்­டு­கள் பழங்­கா­லத்­தில் விைளயாடப்­பட்டு வந்துள்ளன.

இந்த விளை­யாட்­டு­களில் பல­வும் நமது நினை­வாற்­றலை மேம்­படுத்­த­வும் கணி­தத் திறனை வளர்க்­க­வும் மன அழுத்­தத்தையும் சோர்வையும் விரட்டி உடலைப் புத்­து­ணர்ச்­சி­யு­டன் ஆரோக்­கி­ய­மாக பேணவும் உத­வு­கின்­றன.

இருப்­பி­னும், இன்­றைய கால­கட்­டத்­தில் இந்­தப் பாரம்­ப­ரிய விளை­யாட்­டு­களில் ஈடு­ப­டு­வோ­ரின் எண்­ணிக்­கை­யில் பெரும் சரிவு ஏற்­பட்­டி­ருப்­ப­தாக ஆய்­வு­கள் சுட்­டிக்­காட்டு­கின்­றன.

அதே­வே­ளை­யில், அழி­வின் விளிம்­பில் இருக்­கும் இந்­தப் பழங்­கால விளை­யாட்­டு­க­ளுக்கு புத்­து யி­ரூட்ட வேண்­டும் என்­கின்­ற­னர் உள­வி­யல் வல்­லு­நர்­கள்.

இன்­றைய கொரோனா கால கட்டத்தில் வெளியே சென்று விளையாடுவது குறைந்து வரும் நிலையில், வீடு­க­ளுக்­குள் விளை­யா­டக்கூடிய விளை­யாட்டுகளான தாயம், சதுரங்கம், சொட்­டாங்­கல் அல்­லது பாண்டி கல், பல்­லாங்­குழி போன்­ற­ விளையாட்டுகள் மீண்டும் உயிர்ப் பெற்று வருகின்றன.

"தாயம் என்­பது விளை­யாட்டு மட்­டு­மல்ல. கணித அறிவை மேம்­படுத்­தக் கூடி­யது. ஆழ­மாக யோசித்­துப் பார்த்­தால் அடிப்­படை கணித அறிவு என்­பது தாயம் விளை­யாட்­டுக்கு அடிப்­படை.

"அது­வும் ஈரஞ்சி, மூவாறு, ரெண்டு பண்­ணி­ரெண்டு என்­றெல்­லாம் புள்­ளி­கள் விழும்­போது இதை மன­தில் வைத்­துக்­கொண்டு கட்­டங்­களை சட்­டென நகர்த்துவதற்கு கணித அடிப்­படை அறிவு தேவை.

"இந்தப் பல்லாங்குழி, தாயம் உருட்டுதல், பரமபதம், பம்பரம், பச்சை குதிரை உள்ளிட்ட விளை யாட்டுகள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவு கின்றன," என்கின்றனர் மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர்களை உள்ளடக்கிய இந்திய நிபுணர் குழுவின் மருத்துவர்கள்.

"தமி­ழர் பாரம்­ப­ரிய விளையாட்­டு­கள் மனம், உட­லின் சுறுசுறுப்பை உயர்த்­து­கின்­றன," என்­கி­றார் பாரம்­ப­ரிய விளையாட்­டு­கள் குறித்து ஆராய்ச்சிகள் செய்துள்ள சென்­னைப் பல்­க­லைக்கழ­கத்­தின் முன்­னாள் வர­லாற்­றுப் பேரா­சி­ரி­யர் டாக்­டர் வி.பாலாம்­பாள்.

'தமிழ்­நாட்­டின் நாட்­டுப்­புற விளை­யாட்­டு­கள்' என்ற நூலை எழுதி யுள்ள பேராசிரியர் பாலாம்­பாள், விளை­யாட்­டிற்கான 11 பதிப்­பு­களையும் வெளியிட்டுள்ளார்.

கணித அறிவை வளர்க்­கும் தமிழர் பாரம்­ப­ரிய விளை­யாட்­டு­களில் இங்கே ஒருசில:

பல்­லாங்­குழி: 12 குழிகள் உள்ள பல­கை­யில் புளி­யம்பழ விதைகள் அல்­லது சோழி­க­ளைக் கொண்டு விளை­யா­டு­வ­தால் விர­லுக்­குப் பயிற்­சி­யும் நினைவாற்றலும் கூடும். பல்­லாங்­குழி விளை­யா­டும்­போது முத்­துப்­பாண்டி எடுப்­ப­தால் சிறு­வர்­களுக்­குக் கணித அறிவு வள­ரும்.

எண்­களை சொல்­லிக்கொண்டே விளை­யாட வாய்ப்­பா­கும். சிந்­தனைத்­ தி­றன் மேலோங்­கும்.

தாயம்: இரு­வர் அல்­லது நால்­வர் இணைந்து நான்கு காய்­க­ளைக் கொண்டு விளை­யா­டு­வர். முத­லில் யார், சது­ரங்கப் பல­கை­யில் உள்ள மற்­ற­வ­ரின் காய்­களை வெட்டி அவர்­க­ளி­டம் இருந்து தப்­பித்து, வெற்றிபெறு­வார் என்­பதே சுவா­ரசியம் கூட்­டும் அம்­ச­மா­கும்.

காய்­களை வெட்டி வீழ்த்­தும் போது மீண்­டும் முயற்சி செய்து முன்­னே­ற­வேண்­டும் என்ற ஊக்கம் பிறக்கும். அத்­து­டன், நமது கணி­தத் திற­னும் வலுப்­பெ­றும். சாதுர்­யம், மன ஆற்­றல் மேம்­படும்.

பம்­ப­ரம்: கை, கால் அசை­வு­களை மேம்­ப­டுத்­து­தல், நினை­வாற்­றல், தனித்­தி­றன் மேம்­பாடு.

பச்சைக் குதிரை: சிறுவர்கள் விரும்பி விளையாடும் இவ்விளை யாட்டின் மூலம் வந்ததுதான் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகள். உடல்திறன் மேம்படுவதுடன், எச்சரிக்கை மனப் பான்மையும் ஏற்படும்.

பாரம்பரிய விளையாட்டுகளில் பல ஏற்கெனவே காணாமல் போய் விட்டன.

நம் நினைவுகளில் மட்டும் எஞ்சியிருக்கும் ஒரு சில விளை யாட்டுகளையாவது இன்றைய தலை முறையினருக்கு கற்றுத் தருவது நம் மூதாதையர்களுக்கு நாம் செய்யும் பெரும் கடமையாக இருக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!