வேட்டியை மடிச்சுக்கட்டு

வேட்டி. தமி­ழர்­க­ளின் கலா­சா­ரம் மட்­டு­மல்ல, அடை­யா­ளமும்கூட.

தொன்று தொட்டு தமி­ழர்­கள் வேட்டி அணி­யும் பழக்­கத்தை வழக்­கத்­தில் வைத்து உள்­ள­னர்.

சட்டை அணி­யும் பழக்­கம் வரும் முன்பே வேட்­டியை மட்­டும் கட்­டிக்­கொண்டு கர்­ஜிக்­கும் சிங்­க­மாய் முன்­னோர்­கள் வலம் வந்­த­னர். தற்­போது படிப்­ப­டி­யாக வேட்டி அணி­யும் பழக்­கம் குறைந்து வருகிறது.

வேட்­டி கட்டினால் அது ஏதோ பெரிய மாற்­ற­மாக வியப்­பா­கவும் பார்க்­கப்­ப­டு­கிறது. அதே சமயத்தில் வேட்டி கட்டி யிருப்பதை மகிழ்ந்து பாராட்டவும் செய்கின்றனர்.

முன்­பெல்­லாம், பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்­து­தான் ஆண்கள் மண­மே­டையை அலங்­கரித்தனர். இன்றோ மண­ம­கன்கள் கோட்டு சூட்­டில் காட்சி அளிக்­கின்­ற­னர். மேலை நாடுகள் குளிர்ப்பிர­தே­சமாக இருப்பதால் அதற்கு ஏற்ற உடையாக கோட்டு சூட்டு உருவானது.

ஆனால் ேவட்­டி அப்படியல்ல. எல்லா காலத்­துக்­கும் ஏற்­றது. குளிர்­கா­லத்தில் உடலை சூடா­க­வும் கோடை­யில் குளிர்ச்­சி­யா­க­வும் வைத்­தி­ருக்­கும்.

வெளிப்­புற வெப்­ப­நி­லை­யைப் பற்றிக் கவலைப்ப­டா­மல் அதிக நேரம் வேட்­டியை அணி­ய­லாம். பெரும்­பா­லான வேட்­டி­கள் பருத்தி நூலில் நெய்யப்ப­டு­ வதால் உடலுக்கும் இதமாக இருக்கும்.

வேட்­டி­யில், முகூர்த்த வேட்டி, தற்­காப்­புக் கலை வேட்டி, பட்டு வேட்டி, பூஜை வேட்டி, சாதா­ரண வேட்டி என பல வகை உண்டு.

சில குடும்பங்கள் தங்க ளுடைய பாரம்­ப­ரி­யத்­துக்கு ஏற்ப வேட்டியின் கரையைப் பார்த்து அணிகின்றனர்.

ஆன்­மி­கத்­துக்­கும் வேட்­டி­யின் நிறம் மாறு­ப­டு­கிறது. சிவனை வழி­பட கரை­யில்லா வெள்ளை வேட்டி, விஷ்­ணுவைத் தரி­சிக்க மஞ்­சள் நிற வேட்டி, அம்­மனை வேண்ட சிவப்பு நிற வேட்டி, அனு­மனை ஜெபிக்க காவி நிற வேட்டி, ஐயப்­ப­னுக்கு கருப்பு நிற வேட்டி என ஆன்மிக நேரங்­களில் வேட்டி கட்­டப்­ப­டு­கிறது. திரு­ம­ணம் போன்ற சுப நிகழ்ச்சி­க­ளுக்கு பட்டு வேட்டி கட்­டப்படு­கிறது.

மண­மே­டை­யில் இருக்­கும் மாப்­பிள்ளை கட்­டு­வதை முகூர்த்த வேட்டி என்­பார்­கள். அது­வும் பெரும்­பா­லும் பட்டு வேட்­டி­யா­கத்­தான் இருக்­கும். இது, மாப்பிள்ளைக்கு புதிய நம்­பிக்­கையை ஏற்படுத்துகிறது. திரு­ம­ணத்­துக்கு முந்­தைய நிச்­ச­ய­தார்த்­தத்­துக்கு என தனி­யாக வேட்டி உண்டு.

பழைய காலத்­தில் உடல் உழைப்பை மட்­டுமே நம்­பி­யி­ருந்­தார்­கள். விவ­சா­ய­மும் உடல் உழைப்பு சார்ந்த தொழில்­கள் மட்­டுமே பிர­தா­ன­மாக இருந்­தது. அப்­படி வேலை செய்­யும்­போது சாதா­ரண வேட்டி அணி­வது காற்­றோட்­ட­மா­க­வும் உட­லுக்கு உகந்­த­தா­க­வும் இருக்­கும்.

வேட்டி கட்­டு­வதை ஊக்குவிக்க பல வேட்டி தயாரிக்­கும் நிறு­வ­னங்­கள் புதுப்­புது உத்­தி­யைக் கையாண்டு வரு­கின்­றன.

சில நிறு­வ­னங்­கள் பிர­பல நடி­கர்­களை கம்­பீ­ர­மா­கக் காட்டி வேட்­டியை விளம்­ப­ரம் செய்து வரு­கின்­றன. ராம்­ராஜ் காட்­டன் வேட்­டி­க­ளுக்கு ஜெய­ராம், உத­யம் வேட்­டி­க­ளுக்கு மம்முட்டி, 'சிபி' வேட்­டி­க­ளுக்கு ரகு­மான், எம்.சி.ஆர். வேட்­டி­க­ளுக்கு மோகன்லால் மற்­றும் சரத்­கு­மார், நேஷ­னல் வேட்­டி­க­ளுக்கு ராதா­ரவி, ஆலயா வேட்­டி­க­ளுக்கு ஸ்ரீகாந்த், பூமர் வேட்­டி­க­ளுக்கு கார்த்­திக் என நடி­கர்­கள் வேட்­டி­யு­டன் விளம்­ப­ரங் களில் காட்­சி­ய­ளிக்­கின்­ற­னர்.

வேட்­டி­யைக் கட்­டத் தெரி­யாத இளை­யர்­க­ளுக்கு ஒட்­டிக் கொள்­ளும் வகை­யில் 'ஒட்­டிக்கோ, கட்­டிக்கோ' என்ற பெயரில் ராம்­ராஜ் காட்­டன் எனும் நிறு­வ­னம் புதிய வேட்டியை அறிமுகப்­ப­டுத்­தி­யுள்­ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிைடத்துள்ளது.

சட்டை நிறத்­திற்கு ஏற்ற வேட்­டி­யின் கரை­யும் பல்­வேறு நிறங்­க­ளு­டன் விற்­ப­னைக்கு வந்­துள்­ளன. இடுப்பு வார் (பெல்ட்) வைக்கப்பட்ட வேட்டி யும் விற்கப்படுகிறது.

கைபேசி, பணம் வைத்­துக் கொள்ள பாக்­கெட் கொண்ட வேட்­டி­கள் அண்மையில் பிர­பலமடைந்­து வருகின்றன.

'இற­கின் மென்மை', 'கவர்ச்­சி­யான கரை', 'கைநூற்பு துணி', 'இயற்கை பருத்தி', 'லேசான எடை' எனக் குறிப்­பிட்டு ஒரு நிறு­வ­னம் எட்டு முழ வேட்­டியை இணை­யம் வழி­யாக விற்று வரு­கிறது.

வேட்­டிக்கு கிடைத்­துள்ள வர­வேற்பு குறித்து தமி­ழக ஊட­க­மான விக­ட­னில் தமது கருத்தைப் பகிர்ந்து கொண்ட பிர­பல உள­வி­யல் நிபு­ணர் அபி­லாஷா, "சிறு­வர்­கள் வேட்டி அணி­வது மிக­வும் வரவேற்­கப்­ப­ட­வேண்­டிய ஒன்று," என்று தெரி­வித்­துள்­ளார். திரைப்­ப­டம், தொலைக்­காட்சி போன்­ற­வற்­றில் அடிக்­கடி வேட்டி அணிந்து வந்து போகும் பிரபலங்­களும் அவர்­ க­ளின் மன­தில் நுழைந் ­திருக்க வாய்ப்பு அதி­கம். மொத்­தத்­தில் இது ஒரு கலா­சார மீட்­டெ­டுப்பு என்­று­தான் சொல்ல வேண்­டும்," என்­கி­றார் அவர்.

கடந்த 2016ஆம் ஆண்டில் அைனத்­து­லக வேட்டி தின­மா­க­வும் 'யுனெஸ்கோ' அறி­வித்து வேட்டியை அங்கீகரித்துள்ளது.

அன்று முதல் இன்று வரை ஆண்­டு­தோ­றும் ஜன­வரி 6ஆம் தேதி, வேட்டி தினம் கொண்­ டா­டப்பட்டு வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!