சைக்கிளோட்டி உதவிக்கரம் நீட்டும் நல்லுள்ளம்

கி. ஜனார்த்­த­னன்

கொவிட்-19 தொடங்­கிய காலத்­தில் கடு­மை­யான நோயால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு நிதி திரட்­டும் முயற்சி­ யில் சுகா­தார கொள்கை ஆலோ­ச­கர் ராஜ­காந்த், 46 ஈடு­பட்­டார்.

அரி­ய­வகை நோய்­க­ளால் பாதிக்­கப்­பட்ட 150 நோயா­ளி­க­ளுக்­காக மொத்­தம் 150 கிலோ­மீட்­டர் தூரம் சைக்­கிள் ஓட்டி அவர்­க­ளுக்­காக 15,000 வெள்ளி நிதித்­தி­ரட்­டு­வதே திரு ராஜின் இலக்­காக இருந்­தது.

அதை­யும் தாண்டி அவர் $18,700 திரட்­டி­னார். கடந்த மாதம் 23ஆம் தேதி­யி­லி­ருந்து 28ஆம் தேதி வரை திரு ராஜ் சிங்­கப்­பூ­ரில் உள்ள பல்­வேறு இடங்­களில் மொத்­தம் 182 கிலோ­மீட்­டர் தூரம் சைக்­கிள் ஓட்டி நிதி திரட்­டி­னார். இதுவே தமது மிக நீண்ட சைக்­கிள் பய­ணம் என்று அவர் தமிழ் முர­சி­டம் பகிர்ந்­து­கொண்­டார்.

"கடந்த வாரம் மழை விட்­டு­விட்­டுப் பெய்­தது. எனவே என்­னால் ஓரிரு நாள்க­ளுக்கு சைக்­கிள் ஓட்ட முடி­யா­மல் போனது. மழை கார­ண­மாக பல­முறை சைக்­கிள் ஓட்­டு­வதை நிறுத்­தும் நிலை ஏற்­பட்­டது. தொடர்ந்து பல­மாக வீசிய காற்று, மற்­றொரு சவா­லாக இருந்­தது," என்று திரு ராஜ் கூறி­னார்.

திரு ராஜ் சிர­மப்­பட்டு திரட்­டிய நிதி அரி­ய­வகை நோய் சங்­கத்­திற்கு வழங்­கப்­படும்.

"கடந்த மாதம் 28ஆம் தேதி அரி­ய­வகை நோய் தினம் அனு­ச­ரிக்­கப்­பட்­டது. அரி­ய­வகை நோய் பற்றி ஒரளவுக்கு விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்தி உள்ளேன். இது எனக்கு மகிழ்ச்­சி­யைத் தரு­கிறது," என்று அவர் கூறி­னார். நிதித்­தி­ரட்டு யோச­னைக்­காக சங்­கம் தம்மை அணு­கி­ய­போது நெடுந்­தொ­லைவு ஓடு­வ­தற்கு மாறாக சைக்­கிள் ஓட்ட முடிவு செய்­த­தாக திரு ராஜ் கூறி­னார்.

"நீச்­சல் என்­றால் எனக்கு மிக­வும் பிடிக்­கும். ஆனால் கொவிட்-19 பர­வல் தொடங்­கி­ய­போது அதில் ஈடு­பட முடி­யாத நிலை ஏற்­பட்­டது. எனவே பொழு­து­போக்­கிற்­காக தொடங்­கிய சைக்­கி­ளோட்­டத்தை நற்­கா­ரி­யத்­திற்­குப் பயன்­ப­டுத்­த­லாம் என எண்­ணி­னேன்," என்று ஸ்ரீ வீர­மா­கா­ளி­யம்­மன் ஆல­யத்­தின் செய­லா­ள­ரு­மான திரு ராஜ் கூறி­னார். அசா­தா­ரண, நாள்பட்ட

நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி பல ஆண்­டு­க­ளாக ஆய்­வு­செய்து வந்த திரு ராஜ், அவர்­

க­ளின் நல­னுக்­காக முடிந்­த­வரை பல வழி­களில் குரல் கொடுப்­ப­வ­ரா­க­வும் உள்­ளார்.

சுகா­தா­ரத் துறை­யில் இரு­பது ஆண்­டு­க­ளுக்கு மேலா­கப் பணி­யாற்­றும் திரு ராஜ், தற்­போது மெனி­ஃபெஸ்ட் கொள்கை ஆய்வு

நிறு­வ­னத்­தில் தலைமை ஆலோ­ச­க­ராக இருக்­கி­றார்.

அத்­து­டன், 'ரெய்ன்­போஸ் அக்­ரோஸ் பார்­டர்ஸ்' என்ற சுகா­தார ஆர்­வ­லர் அமைப்­பின் நிர்­வாக இயக்­கு­ந­ரா­க­வும் இவர் உள்­ளார்.

"அரி­ய­வகை நோய்­கள் இருக்­கும் பல­ருக்கு அந்­நோயை இனம் கண்­ட­றி­வதே சவா­லாக இருந்­தது. 95 விழுக்­காடு அரியவகை நோய்­க­ளைக் குணப்­ப­டுத்த முடி­யாது. இத்­த­கைய நோய்­க­ளால் அவ­திப்­

ப­டு­வோ­ருக்­கும் அவர்­க­ளு­டைய குடும்­பத்­தி­ன­ருக்­கும் நிதி தேவைப்­

ப­டு­கிறது," என்று மூன்று பிள்­ளை­

க­ளுக்­குத் தந்­தை­யான திரு ராஜ் கூறி­னார்.

அரி­ய­வகை நோய்­க­ளால் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு இந்த இணைப்­பின் மூலம் நன்­கொடை வழங்­க­லாம்: https://www.giving.sg/rare-disorders-society-singapore/carryhope2022_raj

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!