கூட்டத்தில் இருந்தாலும் தனிமையில் வாடலாம்

தனி­யாக இருப்­ப­தும் தனிமை உணர்­வு­டன் இருப்­ப­தும் ஒன்­றா­காது. தனி­யாக இருந்­தும் நிம்­ம­தி­யு­ட­னும் மகிழ்ச்­சி­யு­ட­னும் இருப்­ப­வர்­களும் உள்­ள­னர்.

அதே சம­யம், பலர் சூழ்ந்­தி­ருக்க தனி­மை­யில் வாடு­ப­வர்­களும் உள்­ள­னர்.

ஒரு­வ­ரைச் சுற்றி எத்­தனை பேர் இருக்­கி­றார்­கள் என்­பது முக்­கி­யம் இல்லை என சிக்­காகோ பல்­க­லைக்­க­ழ­கத்­தின் கல்வி ஆய்வு நிலை­யத்­தின் பிர­தான ஆய்­வா­ளர் திரு­வாட்டி லுயிஸ் ஹாக்லி தெரி­வித்­துள்­ளார்.

மாறாக, அவர் மற்­ற­வர்­க­ளு­டன் எவ்­வாறு தொடர்­பு­கொள்­கி­றார் என்­ப­து­தான் முக்­கி­யம் என்­றார் அவர்.

சில­ரி­டையே உறவு இருந்­தா­லும் அது பல­வீ­ன­மா­ன­தாக இருக்­கும் என்று திரு­வாட்டி ஹாக்லி கூறி­னார்.

சமூக வலைத்­த­ளத்­தில் பல­ரு­டன் தொடர்பு இருந்­தும் தனி­மை­யில் இருப்­பது போன்ற உணர்வு ஏற்­ப­டு­வது இயல்பு என்று சான் ஃபிரான்­சிஸ்­கோ­வில் உள்ள கலி­ஃபோர்­னியா பல்­க­லைக்­க­ழ­கத்­தின் முதி­யோர் மருத்­து­வத் துறை பேரா­சி­ரி­யர் டாக்­டர் கார்லா பெரி­சி­னோட்டோ தெரி­வித்­தார்.

காதலருடன் ஏற்படும் தொடர்பு, உறவுகளுடன் ஏற்படும் தொடர்பு, சமூகத்துடன் ஏற்படும் தொடர்பு என மூன்று வகை தொடர்புமுறை இருப்பதாக திருவாட்டி ஹாக்லி தெரிவித்தார்.

தனிமையில் வாடாமல் இருக்க முதலில் உங்களுக்கு எத்தகைய தொடர்பு வேண்டும் என்பதை அடையாளம் காண்பது முக்கியம் என்று டாக்டர் பெரிசினோட்டோ வலியுறுத்துகிறார்.

தனிமை உணர்வைக் குறைக்க பல வழிகள் இருப்பதாக இருவரும் தெரிவித்தனர். உதாரணத்துக்குப் உணவகங்களில் உங்களுக்கு உணவு பரிமாறுபவர்களுடன் பேசலாம் அல்லது நீண்டநாட்களாக உங்களுடன் தொடர்புகொள்ளாத நண்பரைத் தொலைபேசி மூலம் அழைத்துப் பேசலாம்.

சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுதன் மூலம் பலருடன் நட்பு ஏற்படும் சாத்தியம் அதிகம் உள்ளதாக நிபுணர்கள் இருவரும் ஆலோசனை வழங்கினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!