தேசிய இளையர் திரைப்பட விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கவின்­விழி கதி­ரொளி

சிங்­கப்­பூ­ரின் சிறந்த இளம் திரைப்­படத் தயா­ரிப்­பா­ளர்­க­ளைச் சிறப்­பிக்­கும் 'தேசிய இளை­யர் திரைப்­பட விரு­து­கள்' இவ்­வாண்டு எட்­டா­வது முறை­யாக இடம்­பெ­ற­வுள்­ளது.

'மாண­வர்', 'இளை­யர்' பிரி­வு­களில் மொத்­தம் 24 விரு­து­கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

'இளை­யர் உத்­வேக விருது', 'மிகுந்த நம்­பிக்­கைக்­கு­ரிய விருது' எனும் இரு சிறப்பு விரு­து­களும் வழங்­கப்­படும்.

நாட­கங்­க­ளுக்கு எவ்­வாறு கதை எழு­த­லாம் என பெயர்­பெற்­ற­வர்­களி­ட­மி­ருந்து இளம் தயா­ரிப்­பா­ளர்­கள் பயிற்சி பெற, 'தி சீரிஸ் லேப்' என்ற புத்­தாக்க வழி­காட்­டித் திட்­டம் இவ்­வாண்டு அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

'தி சீரிஸ் லேப்' திட்­டம், தொடர்­கதை எழு­தத் தேவை­யான அடிப்­படைத் திறன்­களை இளம் திரைப்­படத் தயா­ரிப்­பா­ளர்­க­ளுக்­கும் எழுத்­தா­ளர்­க­ளுக்­கும் கற்­பிக்­கும். இந்­தத் திட்­டத்­திற்­குத் தேர்­வு­பெ­றும் பத்­துப் பங்­கேற்­பா­ளர்­க­ளுக்கு, சிறப்பு பேச்­சா­ள­ரின் நேரலை உரை, ஆறு பயி­ல­ரங்­கு­கள் மற்­றும் மதி­யு­ரை­ஞர் இரு­வ­ரு­டன் தொடர்பு போன்­றவை காத்­தி­ருக்­கின்­றன.

ஆர்­வ­முள்­ளோர் இம்­மா­தம் 13ஆம் தேதிக்­குள் விண்­ணப்­பிக்­க­லாம்.

இலாப நோக்­க­மில்லா அமைப்­பான ''ஸ்கேப்', 2015இல் தேசிய இளை­யர் திரைப்­பட விரு­து­க­ளைத் தொடங்­கி­யது. வளர்ந்து வரும் இளம் திரைப்­பட த்தயா­ரிப்­பா­ளர்­களுக்­கான தளத்­தை­யும், சரி­யான வாய்ப்­பை­யும் உரு­வாக்கி, அவர்­களின் தொழில் வளர்ச்­சிக்கு உதவுவதே அதன் இலக்கு.

"கடந்த ஆண்டு எங்­க­ளின் தேசிய இளை­யர் திரைப்­பட விரு­து­கள் திரைப்­பட வச­தித் திட்­டம், வளர்ந்து வரும் திரைப்­ப­டத் தயா­ரிப்­பா­ளர்­கள் தங்­க­ளு­டைய சொந்த குறும்­ப­டங்­க­ளைத் தயா­ரிக்க உத­வி­ய­தில் பெரும் வெற்­றி­யைக் கண்­டது. 'லோகார்னோ', 'ஃபேன்டெ­சியா', 'டொரன்டோ ஆஃப்டர் டார்க்' போன்ற முக்­கி­யத் திரைப்­பட விழாக்­க­ளுக்கு இந்­தக் குறும்­ப­டங்­கள் தேர்­வு­பெற்­றன. இளை­யர்­களை ஆத­ரிப்­ப­தில் எங்­க­ளின் அர்ப்­பணிப்பு, தொடர் முயற்சி ஆகி­ய­வற்­றுக்­குச் சான்­றாக இவை திகழ்­கின்­றன," என்­றார் 'ஸ்கேப்' நிர்­வாக இயக்­கு­நர் ஐவி லிம்.

இவ்­வாண்டு விருது நிகழ்ச்­சி­யின் சிறப்பு அங்­க­மாக, சென்ற ஆண்­டில் 'சிறந்த அசை­வூட்­டம்' விரு­தைப் பெற்ற யோ சு சியென் வடி­வ­மைத்த மெய்­நி­கர் உல­கின் கூறு­களும் இடம்­பெ­ற­வுள்­ளன.

விண்­ணப்ப விதி­கள்

அசை­வூட்­டம், ஆவ­ணப்­ப­டம் அல்­லது குறும்­ப­டத்­தைச் சமர்ப்­பிக்க விரும்­பும் பங்­கேற்­பா­ளர்­கள் 35 வய­துக்­குக்­கீழ் இருக்க வேண்­டும்.

வெற்­றி­யா­ளர்­கள் அனை­வ­ருக்­கும் மொத்­தம் $70,000 பரி­சுத்­தொகை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஒவ்­வொரு வெற்­றி­யா­ள­ருக்­கும் $1,000 ரொக்­கப் பரிசு வழங்­கப்­படும். படைப்­பு­க­ளைச் சமர்ப்­பிப்­ப­தற்­கான இறுதி நாள் மே 13, 2022. மேல்­வி­வ­ரங்­க­ளுக்­கும் திரைப்­படங்­க­ளைச் சமர்ப்­பிப்­ப­தற்­கும் நாட வேண்­டிய முக­வரி: https://scape.sg/nyfa

விருதுப் பட்டியல்

 சிறந்த ஒலிப்பதிவு

 சிறந்த கலை இயக்கம்

 சிறந்த படத்தொகுப்பு

 சிறந்த திரைக்கதை

 சிறந்த ஒளிப்பதிவு

 சிறந்த இயக்குநர்

 சிறந்த இசை

 சிறந்த செயலாக்கம்

 சிறந்த ஆவணப்படம்

 சிறந்த அசைவூட்டம்

 சிறந்த குறும்படம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!