பழங்களால் பெரும்பலன் பெற வேளை முக்கியம்

நெல்­லி­யால் நெடும்­பகை போகும் என்பது பழமொழி. இங்கு நெடும்­பகை என்­பது நாட்­பட்ட நோயைக் குறிக்­கும். இப்­ப­டிப் பழங்­க­ளைப் பற்­றிய பழ­மொ­ழி­கள் ஏரா­ள­முண்டு.

உயிர்ச்­சத்து, நார்ச்­சத்து, தாதுப்­பொ­ருள்­கள் எனச் சத்­து­கள் நிறைந்த பழங்­களை எல்­லா­ரும் நாளும் உண­வில் சேர்த்­துக்­கொள்­வது மிக நல்­லது. ஊட்­டச்­சத்­துக்கு பழங்­களை உட்­கொள்ள மருத்­து­வர்­களும் பரிந்­து­ரைக்­கின்­ற­னர்.

ஆனால், எந்­தப் பழத்தை எந்த நேரத்­தில் உட்­கொள்ள வேண்­டும் என்­பது தொடர்­பில், பல­ரும் பல மாதி­ரி­யாக அறி­வு­ரை­க­ளைக் கூறு­வ­தால் குழம்­பிப் போக­லாம்.

இந்­நி­லை­யில், வாழ்­வி­யல் மருத்­து­வ­ரான டாக்­டர் அச்­சு­தன் ஈஸ்­வர், நொறுக்­குத்­தீ­னி­போல அல்­லது உண­வாக பழங்­களை ஒரு­நா­ளின் எந்த நேரத்­தி­லும் உண்­ண­லாம் எனும் தமது கருத்தை இன்ஸ்­ட­கிராம் காணொளி வழி­யா­கப் பகிர்ந்­துள்­ளார்.

குறிப்­பாக, உண­வுக்­கு­முன் பழங்­களை உட்­கொள்ள அவர் பரிந்­து­ரைக்­கி­றார். அப்­படி உண்­ப­தால் வயிறு நிரம்­பி­ய­து­போல் இருக்­கும், குறை­வான வெப்ப ஆற்­ற­லை­யும் (கேலரி) எடுத்­துக்­கொண்­ட­து­போல் இருக்­கும் என்றார் டாக்­டர் ஈஸ்­வர்.

இரண்டு விஷ­யங்­க­ளைக் கவ­னத்­தில் கொள்ள வேண்­டும் என்­கி­றார் அவர்.

முத­லா­வது, பழங்­க­ளின் எண்­ணிக்கை. மூன்று பழங்­க­ளுக்­கும் குறை­வாக எடுத்­துக்­கொள்­வது பக்­க­வா­தம் போன்ற நாட்­பட்ட நோய்­க­ளை­யும் மற்ற உடல்­ந­லப் பிரச்­சி­னை­க­ளை­யும் ஏற்­படுத்தும் அபா­யத்தை அதி­க­ரிக்­க­லாம். அதே வேளை­யில், மூன்று பழங்­க­ளுக்­கு­மேல் உட்­கொள்­வ­தால் கூடு­தல் பய­னே­தும் கிட்­டாது என்­றும் டாக்­டர் ஈஸ்­வர் சொன்­னார்.

நாள்முழுக்க பழங்­கள் எடுத்­துக்­கொள்­வது இன்னொரு விஷ­யம்.

அத்­து­டன், காலை­யில் பழம் சாப்­பி­டு­வது அவ்­வே­ளை­யில் மட்­டுமே நம்மை நல­மாக வைத்து இருக்­கும். ஆனால், மாலை­யில் ஆன்­டி­ஆக்­சி­டன்ட் அளவு குறைந்து போக­லாம்.

"தாவ­ரம் சார்ந்த உண­வுக்­குப் புதி­ய­வ­ராக இருந்­தால், ஒவ்­வொரு வேளை உணவு உட்­கொள்­வ­தற்கு முன்­னும் ஒன்று அல்­லது இரண்டு பழங்­களை எடுத்­துக்­கொள்­ளுங்­கள். இப்­ப­டிச் செய்­வது ஒவ்­வொரு வேளை உண­வை­யும் சத்­தா­ன­தாக்­கும்," என்று டாக்­டர் ஈஸ்­வர் விளக்­கி­னார். பழக்­க­லவை, பேரீச்­சைச்­சாறு, உலர்­பழ லட்டு போன்ற வழி­களி­லும் பழங்­களை உண­வில் சேர்த்­துக்­கொள்­ள­லாம் என்றார் அவர். படம்: இபிஏ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!