தமிழின் சிறப்புக் குறித்து சீனம், மலாய் மொழிகளில் உரையாற்றிய தமிழர்கள்

ஹர்­ஷிதா பாலாஜி

தமிழ்­மொ­ழி­யின் எதிர்­கா­லத்­தைப் பற்­றிச் சிந்­திக்­க­வும், தமிழ்­மொழி பற்­றிய புரி­தலை மற்ற இனத்தவரி டத்­தில் ஏற்­ப­டுத்­த­வும் சிங்­கப்­பூ­ரின் நான்கு அதி­கா­ரத்­துவ மொழிகளி­லும் உரை நிகழ்ச்­சியை நடத்­தியது தமி­ழ­வேள் நற்­பணி மன்­றம்.

நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற இந்­நி­கழ்ச்­சி­யில் ஆங்­கி­லம், தமிழ், சீனம், மலாய் ஆகிய மொழி­களில் தமி­ழர்­கள் உரை­யாற்­றி­னர். மற்ற இனத்­த­வர்­களும் பங்­கேற்­றுச் சிறப்­பித்­த­னர்.

சிங்­கப்­பூர் தொழில்­நுட்­பக் கழகத்­தின் பேச்சு, மொழி­யி­யல் துறை மாண­வ­ரான முத்­துக்­கு­ம­ரன் அபிஷா, தமி­ழர்­கள் தமி­ழைப் பேசிப் புழங்க வேண்­டி­ய­தன் அவ சியத்­தைப் பற்றி குறிப்பிட்டார்.

சிங்­கப்­பூர் எழுத்­தா­ளர் லதா­வின் 'தமி­ழுக்கு அமு­தென்று பேர்' என்ற சிறு­க­தையை மேற்­கோள்காட்டி, வருங்­கா­லத்­தில் தமிழ் அழி­யாமல் எவ்­வாறு தடுக்­க­லாம் என்று உரை யாற்­றி­னார்.

"மதிப்­பெண்­க­ளை­விட மதிப்­பான எண்­ணங்­களே முக்­கி­யம். ஆகையால், தேர்­வு­க­ளுக்­காக தமிழைப் படிக்­கா­மல், வருங்­கால சந்­ததியின­ருக்­காக தமிழைப் படிக்க வேண்­டும்" என்றார் அவர்.

நார்த் ப்ரூக்ஸ் உயர்­நிலை பள்ளி மாண­வ­ரான ஷண்­மு­க­சுந்­த­ரம் ஸ்ரீஜன், தமி­ழுக்­கும் சீனத்­துக்­கும் உள்ள ஒற்­று­மை­கள் குறித்து மாண்­ட­ரின் மொழி­யில் உரை­யாற்றி னார். இரு மொழி கற்­ற­லின் நன்­மை­களை அவர் எடுத்­து­ரைத்­தார்.

தமி­ழின் தொன்மை, தமிழ் இலக்­கியப் படைப்­பு­கள், அவை உணர்த்­தும் பண்­பு­நெ­றி­கள் போன்­றவை குறித்து தமி­ழ­வேள் நற்­பணி மன்ற நிர்­வா­கக்­குழு உறுப்­பி­ன­ரான திரு­மதி கலை­வாணி இளங்கோ ஆங்­கி­லத்­தில் பேசி­னார்.

தமிழ் நூல்­கள் பாது­காக்­கப்­பட வேண்­டி­ய­தன் தேவை குறித்­தும், தொழில்­நுட்­பத்­தின் உத­வி­யோடு அதை அடுத்த தலை­மு­றை­யி­ன­ருக்கு கொண்டு செல்­லும் வழி­மு­றை­கள் பற்­றி­யும் அவர் பேசினார். மலாய் மொழி­யில் உரை­யாற்­றிய கோ குளோபல் நிறு­வ­னர் டாக்­டர் எச்.சி. அஸிஸா ஜலாலுதின், பிற மொழி­களை கற்­று­க்கொள்­வ­தன் பயன்­களைப் பற்­றிப் பேசி­னார். தமி­ழர் என்ற அடை­யா­ளத்தை நேசிப்­பதைப் பற்றி, தன் மக­னு­டன் அவர் கலந்­து­ரை­யா­டி­னார்.

பள்­ளி­யில் சீன மொழி பயின்ற டாக்­டர் எச்.சி. அஸிஸா ஜலாலுதின், சில காலம் சீன மொழி ஆசிரி­ ய­ராக இருந்­தார். தற்­போது வர்த்­த­கத்­தில் ஈடு­பட்­டி­ருக்­கும் அவர் எந்த மொழி பேசி­னா­லும், எப்­பணி புரிந்­தா­லும் தமி­ழர் என்ற அடை­யா­ளத்­தில் தாம் எப்­போ­தும் பெரு­மை­கொள்­வ­தா­க­வும் அதுவே தமது தனித்த அடை­யா­ளம் என்­றும் கூறி­னார்.

நிகழ்ச்­சி­யின் சிறப்பு விருந்­தி­ன­ராகக் கலந்­து­கொண்ட இந்து அறக்­கட்­டளை வாரிய தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யான திரு த. ராஜ­சே­கர், இரு மொழி உல­கத்­தில் தமிழ் அழிந்­து­வி­டாது என்று கூறி­னார்.

அதே­நே­ரத்­தில் தமிழ்­மொ­ழியை வளர்க்க வேண்­டி­யது நம் கடமை என்­ப­தை­யும் அவர் சுட்­டி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!