‘விலைவாசி உயர்வால் வாடிக்கையாளர்களால் நிறைவாக வாங்க முடியவில்லை’

- கி. ஜனார்த்­த­னன்

மளி­கைப்­பொ­ருள்­க­ளின் விலை­யேற்­றத்­தால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தேக்கா வட்­டார கடைக்­கா­ரர்­கள் சிலர் தமிழ் முர­சி­டம் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

பொருள்­க­ளின் விலை­யேற்­றம் பற்றி, வாடிக்­கை­யா­ளர்­கள் சிலர் கேள்வி கேட்­கின்றனர். அவர்­க­ளின் கேள்­வி­க­ளுக்கு எல்­லாம், பொறு­மை­யா­கத் தற்­போ­துள்ள சூழ்­நி­லையை எடுத்­து­ரைக்க வேண்­டி­யுள்­ளது. அப்­போ­து­தான் அந்த வாடிக்­கை­யா­ளர்­களை நம்­மால் தக்கவைத்­துக்­கொள்ள முடி­யும் என்­கி­றார் பஃப்ளோ சாலை­யில் உள்ள ரசூல் மளி­கைக் கடை உரி­மை­யாளர் உம்­முல் ஃபஸி­ரியா.

இருப்­பி­னும், முடிந்­த­வரை விலை­க­ளைக் குறைத்­தி­ருப்­ப­தா­கக் கூறிய திரு­மதி ஃபஸி­ரியா, விலை­யேற்­றத்தை வாடிக்­கை­யா­ளர்­களும் பகிர்ந்­து­தான் ஆக­வேண்­டும் என்று கூறி­னார். "மற்ற கடை­க­ளை­விட குறைந்த விலை­யில் விற்­க­லாம். அதை­விட குறைத்­தால் லாபம் இருக்­காது," என்­றார் அவர்.

உதா­ர­ணத்­திற்கு, சமையல் எண்­ணெய்க்­கான சிறிய போத்­தல் $1.30க்கு அதி­க­ரித்­துள்­ளது. நடுத்­தர போத்­தல் எண்­ணெய் $3, பெரிய போத்­த­லின் விலை $4 வரை உயர்ந்­துள்­ளது. தொற்று ஓய்ந்து வந்­தா­லும் ரஷ்ய - உக்­ரேன் போர், மலே­சிய வெள்­ளம், எரி­பொ­ருள் விலை­யேற்­றம் உள்­ளிட்ட கார­ணங்­க­ளால் உற்­பத்தி பாதிக்­கப்­பட்டு இறக்­கு­ம­திச் செலவு அதி­க­ரித்­துள்­ள­தாக அவர்­கள் கூறி­னர். தங்­க­ளது அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தும் வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் மலி­வான இந்­திய மாற்­றுப்­பொ­ருட்­க­ளைப் பரிந்­து­ரைப்­ப­தாக அவர் கூறி­னார்.

திரு­மதி ஃபஸி­ரி­யா­வைப் போல, தமது வாடிக்­கை­யா­ளர்­கள் சில­ரும் அதி­ருப்­தி­யு­டன் முறை­யி­டு­வ­தாக குடாச்­சாரி மளிகைக் கடையின் உரிமையாளர் சீதா தேவி ரமேஷ் தெரி­வித்­தார்.

"பல­ரின் சம்­ப­ளங்­கள் உய­ரா­த­நிலையில் விலை­வா­சி­ உயர்வை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பொருட்­களை இவர்­கள் நிறை­வாக வாங்க முடி­வ­தில்லை," என்று அவர் கூறி­னார்.

பலம் வாய்ந்த ஒட்­டு­மொத்த விநி­யோ­கிப்­பா­ளர்­கள் கூடு­த­லாக உதவி செய்­ய­லாம் என்று அவர் கேட்­டுக்­கொண்­டார்.

ஒட்­டு­மொத்­த­மாக எல்­லாப் பொருட்­க­ளின் விலை ஏறி­னா­லும் மலே­சி­யப் பொருட்­க­ளைக் காட்­டி­லும் இந்­தி­யப் பொருட்­க­ளின் இறக்­கு­மதிச் செலவு குறை­வாக உள்­ளதை 'குட்­லக்' கடை­யின் உரி­மை­யா­ளர் அன்­ப­ழ­கன் சுட்­டி­னார்.

தற்­போ­தைய நிலை­மை­யால் குறைந்த வருமானக் குடும்­பங்­கள் கூடு­தல் கவ­னத்­து­டன் செல­வைத் திட்­ட­மி­ட­வேண்­டும் என்று வாடிக்­கை­யா­ளர்­க­ளின் தரப்­பில் ஓய்­வு­பெற்ற உணவு வர்த்­த­க­ரான பாலா, 62, தமிழ் முர­சி­டம் தெரி­வித்­தார், "சந்­தைக்­குச் சென்றால்கூட ஒரு வார மளி­கைப் பொருட்­களை வாங்­கு­வ­தற்கு $200 வரை செல­வா­கிறது," என்று அவர் கூறி­னார்.

எல்லா மளி­கைப்­பொ­ருட்­க­ளின் விலை ஏறி­னா­லும் சமை­யல் எண்­ணெய்­யின் ஏற்­றமே சமா­ளிப்­ப­தற்­குச் சிர­ம­மாக இருப்­பதாகக் கூறினார் ஓய்வுபெற்ற வர்த்தகர் டி மாரி­முத்து, 69, சலுகை விலையில் எண்­ணெ­ய் வாங்க உத­வியை அர­சாங்­கத்­தி­டம் எதிர்­பார்ப்­ப­தா­கக் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!