‘உலக ஆஸ்துமா தினம்’ 2022 ஆஸ்துமாவைத் தடுக்க உதவும் உணவு, யோகப் பயிற்சி

நீண்­ட­கால ஒவ்­வா­மை­யால் நுரை­யீ­ரல், சுவா­சக் குழாய்­களில் ஏற்­படும் மாற்­றங்­க­ளின் விளை­வாக ஏற்­படும் இளைப்பு நோயே ஆஸ்­துமா எனப்­ப­டு­கிறது.

அதி­க மூச்­சுத் திண­றல் அல்­லது இளைப்பு, தொடர் இரு­மல், தூக்­க­மின்மை, நெஞ்சு வலி, இறுக்­கம் ஆகியவற்றை ஆஸ்­து­மா­வின் அறி­கு­றிகளாக மருத்­து­வர்­கள் குறிப்­பிடுகின்­ற­னர்.

உலக சுகா­தார அமைப்­பின் 2019 அறிக்­கை­யின்­படி, உல­க­ள­வில் ஏறத்தாழ 262 மில்­லி­யன் மக்கள் ஆஸ்­துமாவால் பாதிக்கப் பட்டதாகக் குறிப்­பிடப்­பட்­டுள்­ளது. இவர்­களில், 15 முதல் 20 மில்­லி­யன் பேர் இந்­தி­யா­வில் உள்­ள­னர்.

அந்த ஆண்­டில் மட்­டும் 4.60 லட்ச உயி­ரி­ழப்­பு­கள் ஆஸ்­து­மா­வால் ஏற்­பட்­ட­தா­க­வும் தெரி­கிறது.

இத­னைத் தடுக்­கும் வழி­முறை கள் குறித்து ஆஸ்­துமா, அலர்ஜி மருத்­துவ நிபு­ணர் டாக்­டர் ஜி.கமல் பிபிசியிடம் விளக்­கி உள்­ளார்.

"ஆஸ்­துமா ஏற்­பட ஒவ்­வாமை ஒரு முக்­கிய கார­ணம். அதே­போல் பரம்­ப­ரை­யும் ஒரு கார­ணம்.

"இந்­நோ­யால் பாதிக்­கப்­பட்ட வர்­கள் தூசி­யைத் தவிர்க்­க­வேண்­டும். படுக்கை உறை, தலை­யணை உறை­களைச் சுத்­த­மா­கப் பயன்­படுத்த வேண்­டும். பஞ்சு தலை­யணை­க­ளைத் தவிர்க்கவேண்­டும்.

"புகைபிடிப்பதையும் புகை பிடிக்­கும் சூழ­லை­யும் தவிர்க்­க­வேண்­டும்," என்று கூறியுள்ள டாக்டர் கமல், "சரி­யான இடை­வெ­ளி­யில் இந்நோய்க்­கான சிறப்பு மருத்­து­வரை அணுகி சிகிச்­சை பெற­வேண்­டும்," என அறிவுறுத்தி உள்ளார்.

ஆஸ்­து­மா­ அறி­கு­றி­க­ளைக் குறைப்­ப­தற்கான எளிய உண­வுக் குறிப்­பு­கள்:

நுரை­யீ­ர­லில் உள்ள அழற்சி, வீக்­கத்­தைக் குறைக்க ஆன்டிஆக்­ஸி­டன்ட்­கள் உத­வு­கின்­றன. இது ஒரு­வர் சரி­யான முறை­யில் சுவா­சிக்க உதவு­கிறது.

உண­வுப் பழக்­கமும் ஆஸ்­துமா அறி­கு­றி­க­ளுக்­குக் கார­ணம் என்று நம்­பப்­ப­டு­கிறது. வைட்­ட­மின் சி, ஈ, பீட்டா கரோட்­டின், ஃபிளாவ­னாய்­டு­கள், மெக்­னீ­சி­யம், செலி­னி­யம், ஒமேகா-3 கொழுப்பு அமி­லங்­கள் அதி­கமுள்ள உணவுகளைச் சாப்­பி­டு­ப­வர்­க­ளுக்கு ஆஸ்­துமா வரு­வ­தற்­கான வாய்ப்புகள் குறைவு என்று கூறப்­ப­டு­கிறது.

பழங்­கள், காய்­க­றி­க­ள்

கிவி, ஸ்ட்­ரா­பெரி, ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்­களிலும் தக்­காளி, புரோக்­கோலி, குடை­மி­ள­காய் போன்ற காய்­க­றி­களிலும் ஆன்டி-ஆக்­ஸி­டன்ட்­கள் நிறைந்து உள்ளன. இவை நுரை­யீ­ர­லில் ஏற்­படும் அழற்சி, வீக்­கத்­தைக் குறைக்க உதவுவதால் பாதிக்­கப்­பட்டவர்­கள் நன்­றாக சுவா­சிக்க முடியும்.

வைட்­ட­மின் டி

உட­லில் வைட்­ட­மின் டி குறை வாக உள்­ள­வர்­க­ளுக்கு ஆஸ்­துமா வரு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் அதிகம். எனவே, வைட்­ட­மின் டி நிறைந்த பால், முட்டை, மீன்களை உண­வில் சேர்த்­துக்­கொள்­வது நல்­லது. காலை, மாலை வெயிலில் காய்ந்து வருவதும் நல்லது.

சல்­பைட்­டு­க­ளைத் தவிர்க்­க­வும்

பல உண­வுப் பொருள்­களில் சல்­பைட்­டு­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. இவை ஆஸ்­துமா அறி­கு­றி­க­ளைத் தூண்டி விடுபவை. எனவே, சல்­பைட்­டு­கள் நிறைந்த ஒயின், உலர் பழங்­கள், ஊறு­காய், இறால் போன்ற உண­விலிருந்து விலகி இருப்­பது நல்­லது.

விதை­கள், பருப்புகள்

விதை­கள், பருப்புகளில் வைட்­ட­மின் ஈ நிறைந்திருப்பதால், ஆஸ்­துமா நோயா­ளி­களின் இரு­மல், மூச்­சுத்­தி­ண­ற­லைக் குறைக்க உத­வு­கிறது.

உலக ஆஸ்­துமா தினம்

ஆஸ்­துமாவைத் தடுத்­தல், சிகிச்சை, விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தும் வகை­யில் ஆஸ்­து­மா­விற்­கான உல­க­ளா­விய அமைப்பு கடந்த 1993ஆம் ஆண்டு ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. அதுமுதல், ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 3ஆம் தேதி உலக ஆஸ்துமா தினம் குறித்து உலக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தகவல்: பிபிசி தமிழ்,

நியூஸ் 18 ஊடகங்கள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!