‘புறத்தை மட்டுமன்றி அகத்தையும் பேணுவது அவசியம்’

'வாணி ராணி', 'கல்­யாண பரிசு' உள்­ளிட்ட சின்­னத்­திரை தொடர்­களில் நடித்து ரசி­கர்­க­ளைக் கவர்ந்து வருபவர் நடிகை நிவே­திதா பங்­கஜ்.

இவர், ஐபிசி மங்கை யூடி­யூப் ஒளி வழிக்கு அளித்துள்ள பேட்­டி­யில் தனது சரு­மப் பரா­ம­ரிப்பு குறித்து பகிர்ந்துகொண்­டுள்­ளார்.

"முத­லில் ஒரு­வ­ரது சரு­மம் பொலி வாக இருக்க நல்லமுறை­யில் பரா­ம­ரிப்­பது முக்­கி­யம். முகத்­தில் போட்­டுக்­கொள்­ளும் அழகு சாத­னங்­கள் நமது அழகை மெரு­கூட்­டிக் காட்­ட­லாம். ஆனால், இது மட்­டும் போதாது. வயது ஏறிக்கொண்டே போனாலும் முதுமை தட்டாமல், இயற்கை அழ­கோடு மிளிர நாம் தினமும் என்ன சாப்­பி­டு­கி­றோம் என்­ப­தும் மிக­வும் முக்­கி­யம்.

"சரு­மத்தை நீர் வறட்­சி­யின்றி தண்­ணீர் சத்து குறை­யா­மல் பேண வேண்­டும். நான் காலை­யில் எழுந்­த­தும் ஒரு குவளை தண்­ணீர் குடித்து எனது நாளைத் தொடங்­கு­வேன். அதன்பிற­கு­தான் முகம் கழு­வு­வேன். மென்­மை­யான 'ஃபேஸ் வாஷ்' தான் பயன்­ப­டுத்­து­வேன். அதன்­பி­றகு, மாய்ஸ்­ட­ரை­சர், சன்ஸ்­கிரீன் போன்ற கிரீம்களைப் பயன்­ப­டுத்­து­வேன். அத்­து­டன், இர­வில் ஒரு சீரம், இரவு நேர கிரீம்க­ளையும் பயன்­ப­டுத்­து­வேன். கண்­ணுக்குக் கீழ் போடும் கிரீம்­களை காலை, இரவு நேரங்­களில் பயன்­படுத்து­வேன்.

பொது­வா­கவே நான் தோல் பரா­மரிப்பு நிபு­ண­ர்­க­ளின் ஆலோசனையின்­படியே பொருள்­க­ளைப் பயன்­ப­டு­த்து ­வேன். கற்­றா­ழை­யில் தயா­ரா­கும் பொருள்­கள் உண்­மை­யா­கவே நல்ல பலன் அளிக்கிறது. இது, வெயில் காலத்தில் தோல் நிறம் மாறுவதற்கும் தோல் உரிவதற்கும் நல்ல பலன் தரும்.

"உதட்­டுக்­கும் கன்­னத்­தில் அடர்ந்த கறுப்பு விழாமல் இருக்கவும் பாலாடை சிறந்த பங்காற்றும்.

"அழகு நிலை­யம் செல்வதற்கு எனக்கு பொறுமை இருக்­காது. ஏனெ­னில், ஒவ்­வொரு நாளும் அழகு சிகிச்சை செய்­ப­வர்­கள் மாறிக்­கொண்டே இருப்­பார்­கள். புரு­வங்­க­ளைச் சீர்­செய்­யும்­போது முகமே மாறிப்­போய்­வி­டும். 50 ரூபாய்க்கு செய்யக்கூடியதை சிகிச்சை நிலையங்களுக்கு சென்றால் ரூ.5,000 செல­வா­கும் என்பது என் கருத்து. அத­னால் நானே வீட்­டில் செய்துகொள்­வேன்.

"நாம் என்ன சாப்­பி­டு­கி­றோம், ஹார்­மோன்­கள், அலங்காரம் இவை அனைத்துமே முகப்­பரு பிரச்சினைக்கு காரணமாகும். முகப்­பரு வராமல் தடுக்கமுடி­யாது. ஆனால், தழும்பு வராமல் என்­னென்ன செய்ய முடி­யுமோ, அதையெல்லாம் செய்யலாம்.

"பலரும் வீட்டுக்கு வந்தவுடன் முக அலங்காரத்தைக் கழுவாமல் அப்படியே தூங்குவார்கள். அப்­படிச் செய்தால், சருமத் துளைகள் அடைத்துக்கொண்டு முகப்­பரு வரும். அத­னால் எவ்வளவு களைப்பாக இருந்­தா­லும், முகத்தைக் கழுவுவது முக்கியம். தேங்­காய் எண்­ணெய் அல்­லது முகத்தை சுத்தமாக்கும் கிரீம்களைக் கொண்டு சுத்தம் செய்த பிறகு தூங்கினால், உங்கள் சருமத் துளை­கள் சுத்­தமாக இருக்கும். இதனால், மாசு மருவற்ற முகத்துடன் ஜொலிக்கலாம்.

"உங்கள் தோலின் நிறத்துக்கேற்ற 'பவுண்­டே­ஷன்' பயன்படுத்தவேண்டும்.

"நாளும் சூரிய ஒளி நம்மீது கண்­டிப்பாக படுவது நல்லது. அப்­போ­துதான் நமக்கு வைட்­ட­மின் டி கிடைக்­கும். காலை­யில் சூரிய உத­யம், மாலை­யில் சூரிய அஸ்­த­மனம் இந்த இரண்டு நேர வெயி­லுமே நமது சரு­மத்­துக்கு மிகவும் நல்­லது. இருப்பினும், நாம் சன்ஸ்­கிரீன் போடாமல் வெளியே போகக் கூடாது. நன்கு தூங்கினால் கருவளையம் வராது. தண்ணீர் நிறைய குடித்து, கண்ணுக்கான கிரீம் பயன்படுத்துவது முக்கியம்," என்கிறார் நிவே­திதா.

சருமப் பராமரிப்பு என்று வரும்போது, நாம் நமது வெளிப்புறத் தோலுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோமோ, அதே அளவுக்கு நாம் சத்தான உணவைச் சாப்பிட்டு அகத்தையும் பாதுகாப்பது முக்கியம். உடல் ஆரோக்கியமாக இருந்தால் முகமும் பட்டுப்போல் பளிச்சிடும்.

சின்­னத்­திரை நடிகை நிவே­திதா பங்­கஜ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!