சுவாசப் பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும் யோகாசனங்கள்

நுரை­யீ­ரல் நன்­றாகச் செயல்­ப­ட­வும் ஆஸ்­துமா நோயா­ளி­கள் நன்­றாக சுவா­சிக்­க­வும் யோகா­ச­னங்­கள் பெரி­தும் உத­வு­கின்­றன. ஆஸ்­துமா நோயா­ளி­கள் எளி­தில் செய்­யக்­கூ­டிய சில பய­னுள்ள ஆச­னங்­கள் இங்கே:

சுகா­ச­னம்

உட்­கார்ந்து செய்­யும் ஆச­னங் களில் சுகா­ச­னம் எளி­மை­யா­னது. கீழே சம்­ம­ணம் போட்டு உட்­கா­ரு­வது யோகா­ச­னத்­தில் சுகா­ச­னம் என அழைக்­கப்படு­கிறது.

கீழே ஒரு விரிப்பை விரித்­துக்­கொள்­ள­வும். ஓய்­வெ­டுக்­கும் நிலை­யில், சுவா­சம், நுரை­யீ­ரல் செயல்­பாட்­டில் கவ­னம் செலுத்­து­வ­தன் மூலம் ஆஸ்­து­மா­வில் இருந்து நிவா­ர­ணம் கிடைக்கும்.

சுகா­ச­னம் செய்ய காலைத் தொடை­யில் குறுக்குவாட்­டில் போட முடி­யா­த­வர்­கள், சாப்பிடுவது போல் உட்­கார்ந்­தும் செய்­ய­லாம். இப்­போது, ​​உங்­கள் இரு கைகளை யும் உங்­கள் முழங்­கால்­க­ளுக்கு முன்­னால் கொண்டு வந்து, தியான நிலையில் கண்­களை மூடிக்­கொண்டு ஆழ்ந்து மூச்­சு­வி­டுங்­கள். இப்­படி, ​​குறைந்­தது ஐந்து நிமி­டங்­க­ளுக்கு ஆழ்ந்த சுவா­சம் விடு­வதை தொடர்ந்து செய்­ய­வும்.

அர்த்த புஜங்­கா­ச­னம்

குழந்­தை­கள், பெண்­கள், வய­தா­ன­வர்­கள் என அனை­வ­ரா­லும் எளி­தில் செய்­யக்­கூ­டிய ஆச­னமே அர்த்த புஜங்­கா­ச­னம். இது சுவா­சத்தை மேம்­ப­டுத்த உத­வும்.

முத­லில் ஒரு விரிப்­பில் இரு கால்­க­ளை­யும் ஒன்று சேர்ந்­தாற்­போல நேராக நீட்டி குப்­புற படுக்­க­வும். இப்­போது, ​​உங்­கள் கைகளை முன்­னால் கொண்டு வந்து, உங்­கள் உள்­ளங்­கையை தரை­யில் வைத்து, உங்­கள் கைக­ளின் ஆத­ர­வு­டன் கழுத்தை நிமிர்த்தி மேல் உடலை உயர்த்­த­வும். இடுப்­பி­லிருந்து தலை­வரை உடல் மேலெ­ழும்­பி­ய­படி இருக்­க­வேண்­டும்.

இரு கால்­க­ளின் மேல் பாதங்­களும் தரை­யில் படர்ந்­த­படி இருக்க வேண்­டும். இந்த ஆச­னத்­தில் 15 முதல் 20 வினா­டி­கள் இருந்து பழைய நிலைக்குத் திரும்­ப­வும். இந்த ஆச­னத்தை 5 அல்­லது 6 தடவை பயிற்சி செய்­ய­வும்.

சவா­சனா

சடலம் போல் இருப்பதுதான் சவாசனா. இந்த ஆச­னம் பதற்­றம், மன அழுத்­தத்தைப் போக்கி சுவா­சத்தை சரிப்படுத்தும். ஆஸ்­து­மாவில் இருந்து குணம்பெறலாம். ஆச­னங்­க­ளி­லேயே மிகமிக முக்­கி­ய­மா­னது. 10 நிமி­டங்­கள் உடலை அசைக்­கா­மல் இவ்வாச­னம் செய்­வது, 30 நிமி­டங்­கள் யோகா­ச­னம் செய்­வ­தற்­குச் சமமானது.

படங்கள்: இணையம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!