இல்லப் பணிப்பெண்களுக்கான அன்னையர் தினக் கொண்டாட்டங்கள்

பிள்­ளை­க­ளை­யும் குடும்­பத்­தா­ரை­யும் பிரிந்து வந்­துள்ள வெளி­நாட்டு இல்­லப் பணிப்­பெண்­களை ஒன்­றி­ணைத்து அன்­னை­யர் தினத்தை நேற்­றுக் கொண்­டா­டி­னர் 'ஃபாஸ்ட்' எனப்­படும் சமூக ஆத­ர­வுக்­கும் பயிற்­சிக்­கு­மான வெளி­நாட்டு இல்­லப் பணி­யா­ளர் சங்­கக் குழு­வி­னர்.

நாற்­ப­துக்­கும் மேற்­பட்­டோர் தங்­க­ளது விடு­முறை தினத்­தில் 'ஃபாஸ்ட் ஹப்' நிலை­யத்­தில் கூடினர்.

கேக் வெட்டி, நண்­பர்­க­ளு­டன் பேசி­யும் ஆடிப்­பா­டி­யும் மகிழ்ந்­த­னர்.

"கடல் கடந்து வந்த நாங்­கள் பிள்­ளை­க­ளைக் காணொளி அழைப்­பு­க­ளில்­தான் காண்­கி­றோம்.

"எங்­கள் வருத்­தங்­க­ளைப் போக்கி ஆத­ர­வ­ளித்த 'ஃபாஸ்ட்­டுக்கு' நெஞ்­சார்ந்த நன்றி," என்­றார் விழா­வில் கலந்­து­கொண்ட 50 வயது திரு­வாட்டி சண்­மு­கம் கவிதா.

இவ்­வே­ளை­யில், நேப்­பா­ளத்­தில் இருந்து சிங்­கப்­பூர் வந்து பணி­பு­ரி­யும் இல்­லப் பணிப்­பெண்­க­ளுக்­காக அன்­னை­யர் தினத்­துக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது கிரேஸ் தேவா­ல­யம்.

வழக்­க­மான ஞாயிற்­றுக்­கி­ழ­மைப் பிரார்த்­தனை மட்­டு­மின்றி இத்­த­கைய சிறப்­புக் கொண்­டாட்ட ஏற்­பாட்­டின் மூலம், உற­வு­க­ளைப் பிரிந்து இங்கு வந்து பணி­யாற்­றும் அன்­னை­ய­ருக்கு உற்­சா­க­மூட்­டும் முயற்சி மேற்­கொண்­ட­தாக தேவா­ல­யம் கூறி­யது.

நேற்­றைய கொண்­டாட்­டத்­தில் அன்­னை­யர் அனை­வ­ருக்­கும் சிறப்பு அன்­பளிப்­பு­கள் விநி­யோ­கம் செய்­யப்­பட்­டது.

அவர்­களை மேலும் மகிழ்­விக்க, சிறப்புப் புகைப்­ப­டம் எடுக்­கும் நிகழ்ச்­சி­யும் இடம்­பெற்­றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!