தொற்றுச் சூழலுக்குப் பிறகும் அலுவலகங்களில் மாற்றம்

சிங்­கப்­பூ­ரில் உள்ள நிறு­வ­னங்­கள் பல, தங்­கள் அலு­வ­ல­கங்­களை நீக்­குப்­போக்­கான முறை­யி­லும் ஊழி­யர்­கள் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் எளி­தில் அணு­கிக்­கொள்­ளும் வகை­யி­லும் மாற்­றி­ய­மைத்­துள்­ளன.

பணி­யா­ளர்­களை ஒன்­றி­ணைக்­கும் வகை­யில், அவர்­கள் அமர்ந்து பணி­பு­ரி­யும் இடங்­களை மாற்றியமைக்கும்போது, முத­லாளி, தொழி­லாளி என்ற பாகு­பா­டின்றி அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து மேசை, நாற்காலிகளைப் பகிர்ந்துகொண்டு பணி­பு­ரி­யும் நிலை உரு­வா­கி­யுள்­ளது. அதற்­காக முத­லா­ளிக்­கென ஒதுக்­கப்­பட்­டி­ருக்­கும் விசா­ல­மான தனி அறை­க­ளை­யும் பெரிய மேசை­க­ளை­யும் நீக்கி நீக்­குப்­போக்­கான வேலை­யி­டச்­சூ­ழல் உரு­வாகி வரு­கிறது.

இது­போன்ற சூழலை நாம் விரும்­பு­கிறோமோ இல்­லையோ, இதைத்­தான் இப்­போது சிங்­கப்­பூ­ரில் பல நிறு­வ­னங்­கள் மேற்­கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதற்­கெல்­லாம் முக்­கிய கார­ணம், ஊழி­யர்­கள் அலு­வ­ல­கத்­தில் இருந்­து­தான் பணி­பு­ரிய வேண்­டும் என்ற கட்­டா­ய­மின்றி, அவர்­கள், எங்­கி­ருந்­தும் பணி­பு­ரி­ய­லாம் என்­ப­தற்­கேற்ப நிறு­வ­னங்­கள் ஒரு நீக்­குப்­போக்­கான நட­வ­டிக்­கை­களை எடுத்­து­வ­ரு­கின்­றன.

அலு­வ­ல­கங்­களில் பெரிய அள­வில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிறு­வ­னங்­களில் மென்­பொ­ருள் நிறு­வ­ன­மான 'எஸ்­ஏபி'யும் ஒன்று. பாசிர் பாஞ்­சாங்­கில் உள்ள ஒரு கட்­ட­டத்­தின் மூன்று தளங்­களில் இயங்கி வரும் அந்த நிறு­வ­னம் அதன் அலு­வ­ல­கத்­தில், மேசை­க­ளின் வடி­வ­மைப்பை முற்­றி­லும் இப்­போ­துள்ள வேலைச்­சூ­ழ­லுக்கு ஏற்ப மாற்­றி­ய­மைத்­துள்­ளது.

பணி­யா­ளர் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் தனித்­தனி மேசை நாற்­காலி என்று ஒதுக்­கப்­பட்­டி­ருந்த நிலையை மாற்­றி­ய­மைத்­துள்­ளது. அலு­வ­ல­கத்­தில் காலி­யாக இருக்­கும் எந்­த­வோர் இடத்­தி­லும் தங்­கள் பணி­யைத் தொட­ர­லாம். இதற்கு அந்த நிறு­வ­னத்­தின் மூத்த தலை­வர்­களும் விதிவிலக்­கல்ல. நின்­று­கொண்டே பணி­பு­ரிய விரும்­பு­கி­ற­வர்­க­ளுக்கு ஏற்ப உய­ர­மான மேசைகளும், சிறு குழுக்­க­ளா­கப் பணி­பு­ரி­ப­வர்­க­ளுக்­கேற்ப சில இடங்­களும், தேநீர்க்­க­டை­யில் தேநீர் அருந்­திக்­கொண்டே பணி­பு­ரிய விரும்­பு­வர்­க­ளுக்கு ஏற்ப சில இடங்­களில் தேநீர்க்­கடை பாணி­யி­லும் இருக்­கை­கள் போடப்­பட்­டுள்­ளன.

ஜெர்­ம­னி­யில் தலைமை அலு­வ­ல­கத்­தைக் கொண்­டுள்ள இந்த நிறு­வ­னம், கொவிட்-19 தொற்­றைச் சமா­ளிக்­கும் வகை­யில், தனது அலு­வ­ல­கத்தை 2021 ஏப்­ர­லில் மாற்­றி­ய­மைக்­கத் தொடங்­கி­யது.

அந்நிறுவனத்தில் 1,200க்கு மேற்­பட்­டோர் பணி­பு­ரி­கின்­ற­னர். அவர்­க­ளி­டையே ஒற்­று­மை­யை­யும் ஒத்­து­ழைப்­பை­யும் அதி­க­ரிப்பதோடு நீக்குப்போக்கான வகை­யில் இந்த மாற்­றத்தை அந்­நி­று­வ­னம் மேற்­கொண்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது. சிங்­கப்­பூ­ரில் கடந்த ஏப்­ரல் 26ஆம் தேதி, தொற்­றுக்­கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டன. இருப்­பி­னும், தொற்று நெருக்­கடி காலத்­தின்­போது நிறு­வ­னங்­க­ளால் கடைப்பிடிக்கப்பட்ட நீக்குப்போக்கான முறையையே தொடர்ந்து கடைப்பிடிப்பதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!