சிங்கப்பூருக்கு முதல் தங்கம்

ஹனோய்: வியட்­னா­மில் நடந்து வரும் 31வது தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் சிங்­கப்­பூ­ருக்கு முதல் பதக்­கத்­தைப் பெற்­றுத் தந்­தார் சீலாட் விளை­யாட்டு வீரர் இக்­பால் அப்­துல் ரகு­மான், 28.

ஆண்­கள் ஒற்­றை­யர் துங்­கால் பிரிவு இறு­திப் போட்­டி­யில் தாய்­லாந்­தின் இல்­யாஸ் சடா­ரா­வு­டன் மோதி­னார் இக்­பால். உலக வெற்­றி­யா­ள­ரும் நான்கு முறை ஆசிய வெற்­றி­யா­ள­ரு­மான இக்­பா­லுக்­குப் பத்து நடு­வர்­களும் சரா­ச­ரி­யாக 9.96 புள்­ளி­களை வழங்­கி­னர். தாய்­லாந்து வீர­ருக்கு 9.930 புள்­ளி­கள் கிட்­டின.

இதற்­கு­முன் ஐந்து முறை பங்­கேற்­றுள்­ள­போ­தும் தென்­கி­ழக்கு ஆ­சிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் இக்­பால் தங்­கம் வென்­றது இதுவே முதன்­முறை.

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இதற்குமுன் இவர் 2015ஆம் ஆண்டில் வெண்கலமும் 2019ஆம் ஆண்டில் வெள்ளியும் வென்றிருந்தார்.

வெற்­றிக்­குப்­பின் உணர்ச்சி பொங்­கக் காணப்­பட்ட இக்­பால், “இத்­த­ரு­ணத்தை விவ­ரிக்க வார்த்­தை­களே இல்லை. எனது திறன்­மீது எப்போதுமே நான் நம்­பிக்கை வைத்­துள்­ளேன்,” என்­றார்.

வீடு முழுக்க வெற்­றிக் கிண்­ணங்­களும் பதக்­கங்­களும் நிரம்­பி­ உள்­ள­போ­தும் இவ்­வெற்­றியை முக்­கி­ய­மா­ன­தா­கக் கரு­து­கி­றார் இவர்.

“இது­தான் எனக்கு எல்­லாமே. 2018ஆம் ஆண்­டில் உலக வெற்றி­யா­ளர் பட்­டம் வென்ற எனக்கு தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்டி­களில் மட்­டும் வெற்றி கைநழு­வி­ய­படியே இருந்­தது,” என்­றார் இக்­பால்.

“இந்­தத் தங்­கப் பதக்­கம் எனக்கு மட்­டு­மா­ன­தல்ல. என் சக அணி­யி­னர் அனை­வ­ருக்­கு­மா­னது. அவர்­களில் பல­ரும் ஆறா­வது முயற்சி மாயம் நிகழ்த்­தும் என்று கூறி­னர். என்­னால் முடிந்த அள­விற்­குச் சிறப்­பா­கச் செயல்­ப­டு­வேன் என்று அவர்­க­ளி­டம் உறு­தி­ய­ளித்­தேன்,” என்று உணர்ச்­சிப் பெருக்­கு­டன் இக்­பால் கூறி­னார்.

போட்­டிக்­குப் பிறகு இக்­பாலை ஆரத் தழுவி, தமது வாழ்த்­து­களைப் பகிர்ந்­து­கொண்­டார் கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்­சர் எட்­வின் டோங்.

வியட்­னாம் தலை­ந­க­ரில் இருக்­கும் அமைச்­சர் எட்வின் டோங், “சிங்­கப்­பூருக்கு முதல் தங்­கத்தை வென்று தந்­துள்ள இக்­பால், அடுத்து வரும் பல­ருக்­கும் முன்­மா­தி­ரி­யா­கத் திகழ்­வார். அவ­ரது மீள்­தி­ற­னுக்­கும் மனவுறு­திக்­கும் கிடைத்த வெற்றி இது,” என்று புக­ழா­ரம் சூட்­டி­னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!