நெருக்கம் தொடரும் லிவர்பூல்

பர்­மிங்­ஹம்: நடப்பு இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் காற்­பந்­துப் பட்­டத்­திற்­கான போட்டி இறுதி­நாள்­வரை நீடிக்­கும் எனத் தெரிகிறது. பட்­டி­ய­லின் இரண்­டாம் நிலை­யிலுள்ள லிவர்­பூல் குழு, முத­லி­டத்­தில் இருக்­கும் மான்­செஸ்­டர் சிட்டி குழுவை விடாது தொடர்வதே அதற்குக் காரணம்.

லிவர்பூல் குழு நேற்று முன்­தினம் இரவு நடந்த ஆட்­டத்­தில் 2-1 என்ற கோல் கணக்­கில் ஆஸ்­டன் வில்­லாவை வீழ்த்­தி­யது. ஆட்­டத்தின் 3வது நிமி­டத்­தி­லேயே கோலடித்து, சொந்த அரங்­கில் தமது குழுவை முன்­னிலைபெறச் செய்­தார் வில்லா ஆட்­டக்­கா­ரர் டக்­ளஸ் லூயிஸ். ஆனா­லும், அம்­முன்­னிலை மூன்று நிமி­டங்­கள் மட்­டுமே நீடித்­தது.

லிவர்­பூல் வீரர் விர்­ஜில் வான் டைக் வலையை நோக்கி அனுப்பிய பந்தை வில்லா கோல் காப்­பா­ளர் எமி­லி­யானோ மார்ட்­டி­னஸ் தடுத்­த­போ­தும், மீண்டு வந்த பந்தை வலைக்­குள் தள்ளி, ஆட்­டத்­தைச் சம­நிலைக்குக் கொண்­டு­வந்­தார் ஜோயல் மட்­டிப். பின்னர் 65வது நிமி­டத்­தில் சாடியோ மானே தலை­யால் முட்டி அடித்த கோல் லிவர்­பூ­லுக்கு வெற்றி தேடித் தந்­தது.

தற்­போது மேன்­சிட்­டி­யும் லிவர்­பூ­லும் 86 புள்­ளி­க­ளு­டன் இருந்­தா­லும் சிட்­டிக்­குக் கூடு­த­லாக ஓர் ஆட்­டம் கைவ­ச­மி­ருக்­கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!