கதைக்களத்தில் அகிலன், சோமலெ

சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கம் மாதந்­தோ­றும் நடத்­தும் கதைக்­க­ளம் நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை 4.00 மணிக்கு இணை­யம் வழி நடை­பெ­றும். எழுத்­தா­ளர்­கள் அகி­லன், சோமலெ ஆகி­யோ­ரின் நூற்­றாண்டை நினை­வு­கூ­ரும் வகை­யில் அகி­ல­னின் எழுத்து அனு­ப­வங்­களை அவ­ரது மகன், எழுத்­தா­ளர் அகி­லன் கண்­ண­னும், சோம­லெ­யின் எழுத்து அனு­ப­வங்­களை அவ­ரது மகன், எழுத்­தா­ளர் சோமலெ சோம­சுந்­த­ர­மும் பகிர்ந்­து­கொள்­கின்­ற­னர்.

புகழ்­பெற்ற இவ்­வி­ரண்டு எழுத்­தா­ளர்­க­ளின் அறி­யப்­ப­டாத பல விவ­ரங்­களை இவ­ரும் பகிர்­வர்.

குவி­யம் இணைப்பு: http://singaporetamilwriters.com/kathaikalamzoom/

Meeting ID: 949 7590 1122 Passcode: 142821

ஜூலை மாத நூல் அறி­மு­கப் போட்­டிக்கு சிங்­கப்­பூர்த் தேசிய நூல­கத்­தி­லுள்ள நூல் ஒன்­றுக்கு 140 வார்த்­தை­க­ளுக்­குள் அறி­முகம் எழுதி அனுப்ப வேண்­டும்.

சிறு­கதை எழு­தும் போட்டி மூன்று பிரி­வு­க­ளாக நடைபெறு கிறது. ஜூலை மாதப் போட்­டிக்­குக் கதை எழு­து­வ­தற்­கான தொடக்க வரி­கள்:

பிரிவு 1: மாண­வர் பிரிவு (உயர்­நிலை வகுப்பு மாண­வர்­கள்)

"இந்த வெற்­றியை நாம் கொண்­டா­டியே ஆக வேண்­டும்" என்று நான் சொல்ல அகி­லின் முகம் இருண்­டது."

பிரிவு 2: இளை­யர் பிரிவு (தொடக்­கக் கல்­லூரி, பல்­க­லைக் கழக மாண­வர்­களும் 18லிருந்து 25 வயது வரை­யில் உள்­ளோ­ரும்.)

"என்னை யாரும் எதற்­கும் தொந்­த­ரவு செய்ய வேண்­டாம்" என்று கத்­தி­விட்­டுக் கதவை அறைந்­தேன்!'

பிரிவு 3: பொதுப் பிரிவு

"என்­னைப் பார்க்க எப்­போது வரு­வீங்­கப்பா? என்று ஏக்­கத்­து­டன் கேட்­கும் மக­ளுக்கு இன்று நல்ல செய்­தி­யைச் சொல்­லப் போகி­றேன்."

மேற்­கண்ட படைப்­பு­க­ளைக் கணி­னி­யில் அச்­சிட்டு http://singaporetamilwriters.com/kkcontest என்ற மின்­னி­யல் படி­வத்­தின் வழி­யாக அனுப்ப வேண்டிய இறு­தி­நாள்: 29/6/2022. வெற்­றி­பெ­றும் படைப்­பு­க­ளுக்கு ரொக்­கப் பரி­சு­கள் வழங்­கப்­படும்.

மேல்­வி­வ­ரங்­க­ளுக்கு: http://singaporetamilwriters.com/kathaikalam/

தொடர்புக்கு: kiruthikavirku@gmail.com, பிரேமா -91696996

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!