வாழ்க்கையில் மாற்றம் வர இரண்டே நிமிடம் போதும்

காலை­யில் எழுந்து, காலைக் கடன்­களை அரக்கப்பரக்க முடித்­து­விட்டு, வேலைக்கு அவ­சர அவ­ச­ர­மா­கக் கிளம்பி, அங்கு மின்­னஞ்­சல்­க­ளுக்­குப் பதி­ல­ளித்­து­விட்டு, அன்­றைய பணி­க­ளையோ செய்­யா­தி­ருந்த வேலை­க­ளையோ முடிக்­கவே போதும் போதும் என்­றா­கி­விடு­கிறது. இந்­நி­லை­யில் நல்ல முறை­யில் உங்­க­ளின் நாளை தொடங்­கு­வ­தற்­கும் வாழ்க்­கை­யில் நல்­ல­தொரு தாக்­கத்தை உணர்­வ­தற்­கும் பத்தே நிமி­டங்­கள் போதும் என்­கின்­ற­னர் நிபு­ணர்­கள்.

1. சுவா­சிக்­கும்­போது அதை உணர்ந்து செய்­யுங்­கள்

மூக்­கு­வ­ழி­யாக காற்றை உள்­ளி­ழுக்­கும்­போது ஐந்­து­வரை எண்­ணுங்­கள். உங்­க­ளுக்­குள் ஒரு பலூன் இருப்­பது போன்று உணர்­வீர்­கள். மூச்­சைச் சற்று நேரம் பிடித்­து­விட்டு வெளியே விடுங்­கள். அப்­போ­தும் ஐந்­து­வரை எண்­ணுங்­கள். இதை பத்து முறை செய்­யுங்­கள்.

குறிப்­பாக, மன அழுத்­தத்­திற்கு ஆளா­கும்­போது இந்த மூச்­சுப் பயிற்­சி­யைச் செய்­யுங்­கள்.

2. உணவை அவ­ச­ர­மில்­லா­மல் மெல்­லுங்­கள்

விருப்­ப­மான உண­வாக இருந்­தா­லும் அதை எப்­படி உண்­கி­றீர்­கள் என்­ப­தில் கவ­னம் செலுத்­துங்­கள். உணவை ஒழுங்­காக மெல்­லா­விட்­டால் அது செரி­மா­னம் ஆகாது.

சத்­து­ண­வாக இருந்­தா­லும் அதி­லுள்ள சத்­து­கள் உட­லைச் சென்­ற­டை­யாது.

3. வெது­வெ­துப்­பான எலு­மிச்சை நீரை அருந்­துங்­கள்.

காலை­யில் காபி, தேநீர் அருந்­து­வதை விட்­டு­விட்டு அதற்­குப் பதி­லாக வெது­வெ­துப்­பான எலு­மிச்சை நீரை அருந்­துங்­கள்.

காலை எழுந்­த­தும் உங்­க­ளின் உட­லுக்கு நீர் தேவை. எலு­மிச்சை நீர் தாகம் தணிப்­ப­து­டன் உங்­க­ளின் செரி­மான அமைப்­பு­மு­றை­யை­யும் தயார்­ப­டுத்­தும். வைட்­ட­மின் 'சி'யும் உட­லுக்­குக் கிடைக்­கும்.

4. உடலை அசைக்க மற­வா­தீர்

உடற்­ப­யிற்சி செய்­வது முக்­கி­யம்­தான். ஆனால் நாள் முழு­வ­தும் உடலை அசைக்க மறந்­து­வி­டா­தீர்­கள்.

உட்­கார்ந்­தி­ருக்­கும் ஒவ்­வொரு மணி நேரத்­திற்­கும் எழுந்து நின்று சில நிமி­டங்­க­ளுக்கு கை, கால், இடுப்பு பகு­தி­களை அசைத்­த­வாறு சிறு சிறு உடற்­ப­யிற்­சி­க­ளைச் செய்­யுங்­கள்.

5. கால­ணி­களை அகற்­றுங்­கள்

உங்­க­ளின் ஆரோக்­கி­யத்­துக்கு உத­வும் ஒன்று, உங்­கள் கால­டி­யி­லேயே இருக்­கிறது. அலு­வ­ல­கத்­தில் கால­ணி­க­ளின்றி நடக்­க­வும் நிற்­க­வும் நேரம் ஒதுக்­குங்­கள்.

நாள்­பட்ட நோவு, வீக்­கம் போன்­ற­வற்றை இது குறைப்­ப­து­டன் உறக்­க­மின்­றித் தவிப்­போ­ருக்­கும் உத­வி­யாக இருப்­ப­தாக ஆய்­வு­கள் கூறு­கின்­றன.

செய்தி: இணையம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!