தாய்மார்களின் மனநலத்தைப் பேணுவோம்

மன உளைச்­ச­லால் உடல் எடை அதி­க­ரிக்­கும்: செரட்­டோ­னின்

என்­னும் ஹார்­மோன் நமது மன­நிலை சரி­வர செயல்­பட முக்­கி­ய­மா­ன­தா­கும். இது பசி, தூக்­கம், மகிழ்ச்சி ஆகி­ய­வற்றை நிர்­வ­கிப்­ப­தில் முக்­கிய பங்கு வகிக்­கிறது. இந்த ஹார்­மோன் சரி­யாக

சுரக்­கா­த­தால் மன அழுத்­தம் ஏற்­பட்டு அதன் மூலம் பசி மற்­றும் தூக்­கம் ஆகி­ய­வற்­றில் மாறு­தல் ஏற்­படும்.

மன அழுத்­தத்­தில் இருக்­கும்­போது கார்­டி­சோல் எனும் ஹார்­மோன் அதிக அள­வில் சுரக்­கும். இதன் மூல­மாக மூளை அதிக அள­வில் குளுக்­கோஸை பயன்­ப­டுத்­து­வ­தால் பசி அதி­க­மாக ஏற்­ப­டு­கிறது.

மன அழுத்­தம் ஏற்­ப­டும்­போது ஒரு­வர் தீவி­ர­மாக சிந்­திக்கத் தொடங்­கு­கி­றார். அதன் மூலம் உடல் சுழற்சி மற்­றும் தூக்­கம் பாதிப்­புக்­குள்­ளா­கிறது.

அதி­கப்­ப­டி­யான மன அழுத்­தம் ஏற்­ப­டும்­போது மூளை­யில் இருந்து எச்­ச­ரிக்கை ஒலி உடல் முழு­வ­தும் அனுப்­பப்­படும்.

அதன் மூலம் இதய துடிப்பு அதி­க­மா­கும். எனவே இத­யம் அதிக அளவு ரத்­தத்தை நுரை­யீ­ரல் மற்­றும் கை, கால்­க­ளுக்கு

அனுப்­பும்.

இந்­தச் செயல்­க­ளால் உடல் உறுப்­பு­கள் வேக­மாக இயங்­கு­

வ­தன் மூலம் அதிக கலோரி இழப்பு ஏற்­பட்டு உட­லில் இன்­சு­லின் அளவு குறைந்து பசி உண்­டா­கிறது.

பசி மற்­றும் மன அழுத்­தம் ஆகிய இரண்­டும் ஒன்­றுக்­கொன்று தொடர்­பு­டை­யது.

மன அழுத்­தம் அதி­க­ரிக்­கும் நிலை­யில் விரக்தி சலிப்பு கார­ண­மாக நொறுக்கு தீனி­களை சிலர் அதி­க­மாக சாப்­பி­டு­வார்­கள். இதன் கார­ண­மாக உடல் எடை அதி­க­ரிக்­கின்­றது.

மன உளைச்­ச­லுக்­கான தீர்வுகள்

வீட்­டி­லேயே இருக்­கும் தாய்­மார்­கள் வீட்டு வேலை­கள், குழந்தை பரா­ம­ரிப்பு என நாள் முழு­வ­தும் தங்­கள் கடமை எனும் வட்­டத்­துக்கு

உள்­ளேயே சுற்­றிச் சுற்றி வரு­கின்­ற­னர். இதுவே மனச்­சோர்­வுக்கு கார­ண­மாக அமை­யும் என உள­வி­யல் வல்­லு­நர்­கள் கூறு­கின்­ற­னர்.

எனவே, ஒவ்­வொரு நாளை­யும் உங்­க­ளுக்­கா­ன­தாக மாற்­று­வது அவ­சி­யம்.

அன்­றா­டப் பணி­க­ளுக்கு இடையே உங்­க­ளின் தனிப்­பட்ட தேவை­க­ளை­யும் பூர்த்தி செய்­யக் காட்­டும் அக்­க­றை­தான் இதற்­கான சிறந்த வழி.

உங்­க­ளின் உடை, சிகை

அலங்­கா­ரம் உட்­பட அனைத்து விஷ­யங்­க­ளி­லும் மாற்­றத்­தைக் கொண்டு வாருங்­கள்.

விருப்­பத்­தைத் தேடுங்­கள்:

குழந்தை பிறந்த பின்பு நம் தனித்­தன்­மையை ஒதுக்­க­வேண்­டும் என்ற கட்­டா­யம் இல்லை.

பெண்­கள் தங்­களை மகிழ்ச்­சி­யாக்­கும் செயல்­களில் ஈடு­ப­ட­லாம். புதி­தாக ஒன்­றைக் கற்க விரும்­பி­னால் அதற்­கான முயற்­சி­யில் இறங்­க­லாம்.

இது தனிமை உணர்­வைப் போக்கி மன­துக்கு மகிழ்ச்­சி­யூட்­டும். இதன் மூலம் தேவை­யற்ற மன அழுத்­தம் நீங்கி, மனம் ஒரு நிலைப்­படும்.

தற்­பொ­ழுது புதிய விஷ­யங்­களை வீட்­டி­லிருந்தே கற்க, பல வச­தி­கள் வந்­து­விட்­டன. அதைப் பயன்­ப­டுத்தி உங்­க­ளுக்­கான வெற்­றி­டத்தை நிரப்­ப­லாம்.

வெளி­யு­ல­கத் தொடர்பு அவ­சி­யம்:

பல தாய்­மார்­கள் வீட்­டி­லேயே தங்­க­ளின் நேரத்­தைச் செல­வி­டு­வ­தால் வெளி­யு­ல­கத் தொடர்­பின்றி மன அழுத்­தத்­திற்கு உள்­ளா­கின்­ற­னர்.

இதைத் தவிர்க்க, வெளி­யு­ல­கத் தொடர்பை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் பகுதி நேர வேலை செய்­ய­லாம். அதன் மூலம் தங்­க­ளின் திற­மை­களை வெளிக்­கொ­ண­ர­லாம்.

புதிய அறி­மு­கங்­கள் தேவை:

பெண்­கள் பல­ருக்­கும் குழந்தை பெற்ற பின்பு நண்­பர்­களை

உரு­வாக்­கு­வது கடி­ன­மா­கத்

தோன்­ற­லாம்.

குடும்­பப் பொறுப்­பு­கள்

இருக்­கும்­போது பிற­ரு­டன் நட்பை வளர்த்­துக்­கொள்ள நேரத்தை

ஒதுக்­கு­வது சிர­ம­மாக இருக்­கும்.

ஆனால், இந்­தப் புதிய

அறி­மு­கம் வாழ்­வில் பல­வற்­றைக் கற்­றுக்­கொள்­வ­தற்கு வழி­செய்­யும்.

வெளியே செல்­லுங்­கள்:

வெளி­யில் செல்­லும்­போது உடல் நலத்­துக்குத் தேவை­யான 'வைட்­ட­மின் டி' சத்தை இயற்­கை­யா­கவே பெறு­வ­து­டன் நீங்கள் புத்துணர்ச்சியையும் பெறு­வீர்­கள்.

பூங்­கா­விலோ கடற்­க­ரை­யிலோ நடக்­கும்­போது சின்ன விஷ­யங்­

க­ளை­யும் ரசிக்­கப் பழ­கு­வது

முக்­கி­யம்.

மனச்­சோர்­வைத் தவி­ருங்­கள்:

பல­வற்­றை­யும் மன­திற்­குள்ளே அசை போடு­வ­தால் மன அழுத்­தம் அதி­க­மா­கும். இது நாள­டை­வில் மனச் சோர்­வாக மாறும்.

இதைப் போக்­கு­வ­தற்கு நம்­பிக்­கைக்கு உரி­ய­வர்­க­ளி­டம் மனம் விட்­டுப் பேசுங்­கள்.

பேசப் பிடிக்­காத விஷ­யங்­களை ஒரு புத்­த­கத்­தில் எழு­துங்­கள்.

இத­னால் மனம் இலே­சா­கும்.

மனச்­சோர்வு தின­சரி வாழ்க்­கை­யைப் பாதித்­தாலோ அல்­லது தாங்க முடி­யாத அளவு உணர்ந்­தாலோ மன­நல மருத்­து­வ­ரின் ஆலோ­ச­னையை நாடு­வ­தற்­குத் தயங்­கக்­கூ­டாது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!