ரசிகர்களை மகிழ்வித்துவரும் பெக்கம்

யுகேஷ் கண்­ணன்

சிங்­கப்­பூ­ருக்கு வருகை தந்­தி­ருக்­கும் முன்­னாள் காற்­பந்து நட்­சத்­திரம் டேவிட் பெக்­கம் கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஆர்ச்­சர்ட் சாலை­யில் அமைந்­துள்ள ‘அடி­டாஸ்’ கடை­யில் மன­ந­லத்­தின் முக்­கி­யத்­து­வத்­தைப் பற்­றி­யும் கிரு­மித்­தொற்­றி­லி­ருந்து மீண்­டு­வ­ரு­வ­தைப் பற்­றி­யும் வலி­யு­றுத்­திய கலந்­து­ரை­யா­டல் ஒன்­றில் கலந்­து­கொண்­டார்.

அதைத் தொடர்ந்து தற்­போது பல ரசி­கர்­க­ளின் முகங்­களில் புன்­னகை பூக்க கார­ண­மாக இருந்து வரு­கி­றார் பெக்­கம்.

உட்லீ வட்­டா­ரத்­தில் தனது ‘ஜேஎஸ்­எஸ்­எல்’ காற்­பந்­தாட்­டப் பயிற்­சியை முடித்­து­விட்டு ஓர் ஓர­மாக அமர்ந்­தி­ருந்­தார் செயின்ட் கேப்­ரி­யல் தொடக்­கப் பள்­ளி­யில் படித்து வரும் லய­னல் சஞ்­சீ­வன், 11.

அந்­தக் காற்­பந்­தாட்­டப் பயிற்­சிக்கு வருகை தந்­தி­ருந்த பெக்­கம், அங்­கி­ருந்து புறப்­ப­டு­வ­தற்­காக வாக­னத்­தில் ஏறி­ய­வு­டன் லய­னல் கைப்­பே­சி­யைப் பயன்­ப­டுத்­திக்­கொண்­டி­ருப்­ப­தைக் கண்டு, அவரை அழைத்து வரச் செய்து, அவ­ரு­டன் புகைப்­ப­டம் எடுத்­துக்­கொண்­டார்.

அவர் அவ்­வாறு செய்­தது தனக்கு வியப்­பை­யும் மகிழ்ச்­சி­யை­யும் அளித்­த­தா­கக் குறிப்­பிட்­டார் லய­னல்.

‘அடி­டாஸ்’ ஏற்­பாடு செய்த நிகழ்ச்சி ஒன்­றில் பெக்­கமை எதிர்த்து விளை­யா­டும் வாய்ப்­பைப் பெற்­றார் வங்­கி­யில் வாடிக்­கை­யா­ளர் சேவை அதி­கா­ரி­யாகப் பணி­பு­ரிந்துவரும் டி சில்வா ஃபேபி­யன் கில்­பர்ட், 33.

சிங்­கப்­பூர் மான்­செஸ்­டர் யுனை­டெட் ஆத­ர­வா­ளர்­கள் குழு­வின் விளை­யாட்­டா­ள­ரான இவர், 15 நிமி­டங்­கள் பெக்­க­மின் ‘அடி­டாஸ்’ குழுவை எதிர்த்து விளை­யா­டி­னார். ‘அடி­டாஸ்’ குழு­வில் ஃபேபியன் குவெக், இக்­சான் ஃபாண்டி போன்ற தேசிய காற்­பந்­தாட்ட வீரர்­களும் இடம்­பெற்­ற­னர்.

பெக்­கம் சிறப்­பாக விளை­யா­டி­ய­தைக் கண்டு அங்கு இருந்­த­வர்­கள் கைதட்டி ஆர­வா­ரம் செய்­த­தா­கக் கூறி­னார் ஃபேபியன் கில்­பர்ட். மேலும், பெக்­கம் அனை­வரு­டனும் நன்­றாக உரை­யா­டி­னார், புகைப்­ப­டங்­கள் எடுத்­துக்­கொண்­டார் என்­றும் அவர் கூறி­னார்.

பெக்­கம் தனது சீரு­டை­யில் கையெ­ழுத்­திட்­டது மிகுந்த மகிழ்ச்­சி­ய­ளித்­தது என்­றார் ஃபேபியன் கில்­பர்ட்.

ஃபேபிய­னு­டன் இணைந்து பெக்­கமை எதிர்த்து விளை­யா­டி­னார் தொழி­ல­தி­ப­ரான ரூபன் காந்த், 34.

“பெக்­கம் அங்கு வரும்­வரை அவர் வரு­வார் என்று நான் நம்­பவே இல்லை,” என்­றார் ரூபன்.

தனக்கு மிக­வும் பிடித்­த­மான காற்­பந்­தாட்ட வீர­ரு­டன் ஒரே திட­லில் விளை­யா­டி­ய­தால் ஏற்­பட்ட உணர்வை வெளிப்­ப­டுத்த வார்த்­தை­யில்லை என்­றும் அவர் சொன்­னார்.

பெக்­க­மு­டன் சிறிது நேரம் பேசும் வாய்ப்­பும் கிடைத்­தது பெரு­மகிழ்ச்சி அளித்­த­தாக அவர் கூறி­னார்.

அதே நிகழ்ச்­சி­யில் டேவிட் பெக்­க­மைச் சந்­தித்­தார் கண­பதி அங்­க­யற்­கண்ணி, 58.

சிறு வய­தி­லி­ருந்தே பெக்­க­மின் தீவிர விசி­றி­யான அங்­க­யற்­கண்ணி, காலாங் ‘கேஜ்’ விளை­யாட்டு மையத்­திற்­குத் தாம் சென்று சேர்ந்­த­போது, பெக்­கம் தமது வாக­னத்­தை­விட்டு இறங்­கி­ய­தா­கக் கூறி­னார்.

பெக்­கம் அங்கு விளை­யாடி முடித்­த­பின், அவ­ரு­டன் புகைப்­படங்­கள் எடுத்­துக்­கொள்­ளும் வாய்ப்பு தமக்­குக் கிடைத்­த­தா­கச் சொன்­னார் அங்­க­யற்­கண்ணி.

அவ்­வே­ளை­யில் பெக்­கமை அர­வ­ணைத்­துக் கொள்­ள­லாமா என அவ­ரி­டம் கேட்­ட­போது, அவர் எவ்விதத் தயக்­க­முமின்­றித் தன்னை அர­வ­ணைத்­துக்­கொண்­ட­தா­கச் சொல்லி மகிழ்ந்­தார் அங்­க­யற்­கண்ணி.

தொடர்ந்து இளை­யர்­க­ளைத் தன்­னம்­பிக்கை கொள்ள ஊக்­கு­விப்­ப­தும் கடி­ன­மாக உழைக்க வலி­யு­றுத்­து­வ­தும் பெக்­க­மின் சிறப்பை எடுத்­து­ரைப்­ப­தா­கக் கரு­து­கி­றார் அங்­க­யற்­கண்ணி.

இவ்­வாறு, சிங்­கப்­பூ­ரில் தாம் இருந்­து­வ­ரும் வேளை­யில் ரசி­கர்­கள் பல­ரைத் தொடர்ந்து மகிழ்­வித்து வரு­கி­றார் பெக்­கம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!