டெங்கியும் அதன் பக்கவிளைவுகளும்

ஏடிஸ் வகை கொசுக்­கள்

கடிப்­ப­தன் மூலம் டெங்­கிக் காய்ச்­சல் பர­வு­கிறது. இது உயி­ருக்கு ஆபத்து விளை­விக்­கக்­

கூ­டி­ய­தா­கும்.

இவ்­வாண்­டில் அதி­க­மா­னோர் டெங்­கி­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக தேசிய சுற்றுப்புற வாரியம் கூறி­யுள்­ளது.

கொசுப் பெருக்­கத்­திற்கு 20 காசு அள­வுள்ள தண்­ணீரே போது­மா­ன­தா­கும்.

நீங்­கள் டெங்கி குழு­ம­முள்ள வட்­டா­ரத்­தில் வசிப்­ப­வ­ராக இருந்­தால் வீட்­டைச் சுற்றி இருட்­டான மூலை­களில் பூச்­சிக்­கொல்லி மருந்தை தெளித்து வையுங்கள்.

அறி­கு­றி­கள்

கடு­மை­யான காய்ச்­சல், வயிற்­று­வலி, தாங்க முடி­யாத அளவு தலை­வலி, உடல்­வலி, மூட்­டு­வலி, கண்­ணுக்­குப் பின்­பு­றம் வலி, தொடர்ச்­சி­யான வாந்தி, களைப்பு ஆகி­யவை டெங்­கிக்­கான அறி­கு­றி­கள்.

எலும்­பு­களை முறித்­துப் போட்­

ட­து­போல் எல்லா மூட்­டு­க­ளி­லும் வலி ஏற்­ப­டு­வது, இந்த நோயை இனம்­காட்­டும் முக்­கிய அறி­குறி. வாந்­தி­யும் வயிற்­று­வ­லி­யும் ஆபத்­தான அறி­கு­றி­கள். அடுத்து உட­லில் அரிப்பு ஏற்­படும். சிவப்­புப் புள்­ளி­கள் தோன்­றும்.

ஆபத்து எப்­போது?

பெரும்­பா­லோ­ருக்கு ஏழாம் நாளில் காய்ச்­சல் சரி­யா­கி­வி­டும். சில­ருக்கு மட்­டும் காய்ச்­சல் குறைந்­த­தும் ஓர் அதிர்ச்சி நிலை (Dengue Shock Syndrome) உரு­வா­கும். அந்த நிலை ஏற்­பட்­டால் ஆபத்து அதி­கம்.

அவர்­க­ளுக்­கு கை, கால் குளிர்ந்து சில்­லிட்­டுப்­போ­கும். சுவா­சிக்­கச் சிர­மப்­ப­டு­வார்­கள். ரத்த அழுத்­த­மும் நாடித் துடிப்­பும் குறைந்து சுய­நி­னைவை இழப்­பார்­கள்.

டெங்கி நோய்த்­தொற்று ரத்­தத்­தில் உள்ள தட்­ட­ணுக்­களை (Platelets) அழித்­து­வி­டும். இந்த தட்­ட­ணுக்­கள்­தான் ரத்­தம் உறை­

வ­தற்கு உத­வும் முக்­கிய அணுக்­கள். இவற்­றின் எண்­ணிக்கை குறை­யும்­போது, பல் ஈறு, மூக்கு, நுரை­யீ­ரல், வயிறு, சிறு­நீர்ப் பாதை, எலும்­பு­மூட்டு ஆகி­ய­வற்­றில் ரத்­தக் கசிவு ஏற்­படும். இதற்கு உரிய நேரத்­தில் சிகிச்சை கிடைக்­க­வில்லை என்­றால் உயி­ரி­ழப்பு

ஏற்­படும்.

பக்­க­வி­ளை­வு­கள்

நம் உட­லில் நோய் எதிர்ப்புச் சக்தி இருந்­தால் எந்த நோயி­லி­ருந்­தும் மீள்­வது எளிது.

எனி­னும் டெங்கி காய்ச்­சல் கார­ண­மாக, உட­லில் உள்ள 'பிளேட்­லெட்' எனப்­படும் ரத்­தத் தட்­ட­ணுக்­க­ளின் எண்­ணிக்கை குறைந்துகொண்டே போகும். மேலும் ரத்த அணுக்­களை நிற­மற்­ற­தாக மாற்­று­வ­தால் ரத்த உறைவு பிரச்­சி­னை­யை­யும் எதிர்­கொள்ள நேரி­டும்.

அப்­படி 'பிளேட்­லெட்' எண்­ணிக்கை குறை­வாக இருக்­கும் பட்­சத்­தில் நோய் பாதிப்­பில் இருந்து மீள்­வ­தற்கு கால அவ­கா­சம் தேவைப்­படும்.

அப்­போது சில பக்க விளைவு­கள் ஏற்­ப­ட­லாம். எனி­னும் டெங்கி நோய்த்­தொற்­றால் நீண்­ட­கால பக்­க­வி­ளை­வு­கள் ஏற்­ப­டாது என்­பதே மருத்­து­வர்­க­ளின் கருத்து.

டெங்கி காய்ச்­சல் உடலை பல­வீ­னப்­ப­டுத்தி தசை மற்­றும் மூட்­டு­களில் வலி­களை ஏற்­ப­டுத்­தும். எழுந்து நட­மாட முடி­யாத நிலை­யை­யும் சில­ருக்கு ஏற்­படும். நோய் பாதிப்­பில் இருந்து மீள்­

வ­தற்கு பத்து முதல் பதி­னைந்து நாட்­கள் ஆகும்.

ஒரு­முறை டெங்கி காய்ச்­சல் பாதிப்பு ஏற்­பட்­டால் நோய் எதிர்ப்பு சக்தி மீண்­டும் இயல்புநிலைக்குத் திரும்­பு­வ­தற்கு சில மாதங்­கள்

ஆ­கும்.

அதற்­குள் இரண்­டா­வது முறை­யாக டெங்கி காய்ச்­சல் ஏற்­பட்­டால் பாதிப்பு கடு­மை­யாக இருக்­கும். அத­னால் நோய் பாதிப்பு ஏற்­பட்­டவுடன் மருத்­து­வர் கொடுக்கும் மருந்­து­களை தவ­றா­மல் எடுத்­துக்­கொள்ள வேண்­டும்.

இரும்புச் சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி12, வைட்டமின் சி போன்ற வைட்டமின்கள் உள்ள உணவுகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!