ஒலிம்பிக் விளையாட்டு வீரர் ஹரிச்சந்திரா காலமானார்

சிங்­கப்­பூர்: ஒலிம்­பிக் விளை­யாட்டு வீர­ரும் பல முன்­னணி ஓட்­டப்­பந்­தய வீரர்­க­ளுக்கு பயிற்­சி­யா­ள­ராகவும் விளங்­கி­ய திரு ஹரிச்­சந்­திரா புதன்­கி­ழ­மை­யன்று மர­ண­ம­டைந்­தார்.

மலே­சி­யா­வின் போர்ட் டிக்­சன் நக­ரில் பிறந்த திரு ஹரிச்­சந்­திரா, 1956ஆம் ஆண்டு ஆஸ்­தி­ரே­லி­யா­வின் மெல்­பர்ன் நக­ரில் நடை­பெற்ற ஒலிம்­பிக் விளை­யாட்­டு­களில் அப்­போ­தைய மலா­யாவை 800 மீட்­டர் ஓட்­டப்­பந்­த­யத்­தில் பிர­தி­நி­தித்­தார். இவர் பின்­னர் சிங்­கப்­பூர் வந்து இங்கு சிறைத் துறை அதி­கா­ரி­

யா­கப் பணி­யாற்­றி­னார்.

சிங்­கப்­பூ­ரில் திரு ஹரிச்­சந்­திரா ஓட்­டப்­பந்­த­யத்­தில் கொண்­டி­ருந்த மோகத்தை இளம் திடல்­தட வீரர்­

க­ளுக்கு பயிற்சி அளிப்­ப­தில்

திருப்­பி­னார்.

சிங்­கப்­பூர் ஓட்­டப்­பந்­தய சரித்­

தி­ரத்­தில் 1,500 மீ. ஓட்­டப்­பந்­த­யத்தை 3 நிமி­டம், 53.1 வினா­டி­களில் ஓடி அந்த சாத­னையை 23 ஆண்­டு­கள் தக்­க­வைத்­துக் கொண்ட செர்­ஜித் சிங் என்ற வீர­ருக்கு திரு ஹரிச்­சந்­தி­ரா­தான் பயிற்சி அளித்து

ஊக்­கு­வித்­தார்.

சிர­ம­மான சிறு வய­துப்

பரு­வத்தை அனு­ப­வித்த தன்னை ஒரு கட்­டுக்­குள் கொண்டு வந்து என்னுடைய மன­தில் கொழுந்­து­விட்டு எரிந்த நெருப்பை ஹரிச்சந்திரா ஒரு கலை­யாக மாற்­றக் கற்­றுத் தந்­த­தாக திரு செர்­ஜித் கூறுகிறார்.

"ஹரி ஒரு மிகப் பெரிய மனி­தர். அவர் என்னை அவரது வீட்டிற்கு அழைத்­துச் சென்று எனக்கு உண­வளிப்­பார். ஒரு முரட்டு வாலி­ப­னாக இருந்த என்னை சிங்­கப்­பூ­ருக்கு பெருமை சேர்க்­கும் உய­ரத்­துக்கு வளர்த்­து­விட்­டார்," என்­றார் 1973ஆம் ஆண்டு தென்­கி­ழக்கு ஆசிய

தீப­கற்ப விளை­யாட்­டுப் போட்­டி­யில் 800 மீட்­டர் ஓட்­டப்­பந்­த­யத்­தில் வெண்­க­லப் பதக்­கம் வென்ற

செர்­ஜித் சிங்.

ஆசிய விளை­யாட்டுப் போட்­டி­களில் 1966ஆம் ஆண்டு 100, 200 மீட்­டர் போட்­டி­களில் வெற்­றி­யா­ள­ரா­கத் திகழ்ந்த மலே­சி­யா­வின் மணி ஜெக­தீ­ச­னின் மூத்த சகோ­த­ர­ரான திரு ஹரிச்­சந்­திரா தொடர்ந்து

ஓட்­டப்­பந்­த­யப் போட்­டி­களில்

கலந்­து­கொண்­டார் என்­பதை இங்கு குறிப்­பிட வேண்­டும்.

கன­டா­வில் 1978ஆம் ஆண்டு நடை­பெற்ற உலக மாஸ்­டர்ஸ் திடல்­தட சங்­கப் போட்­டி­களில் 400 மீட்­டர் ஓட்­டப்­பந்­த­யப் போட்­டி­யில் வெள்­ளிப் பதக்­கம் வென்­றார்.

சிங்­கப்­பூர் 100 மீட்­டர், 200 மீட்­டர் ஓட்­டப்­பந்­தய வீர­ரான திரு குணா­ளன் 1970ஆம் ஆண்­டின் ஆசிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் சோபிக்­கா­மல் போன­தால் ஓட்­டப்­பந்­த­யத்­தில் இருந்தே வில­கி­யி­ருந்த சம­யம் திரு ஹரிச்­சந்­தி­ரா­தான் அவரை மீண்­டும் திடல்­த­டப் போட்­டி­களில் ஈடு­பட வைத்து 1973ஆம் ஆண்டு 4x400 மீட்­டர் அஞ்­சல் ஓட்­டத்­தில் வெள்­ளிப் பதக்­கம் வெல்ல உத­வி­னார்.

"வீரர்­க­ளைப் பயிற்­று­விப்­ப­தில் திரு ஹரிச்­சந்­திரா முழு மூச்­சாக இறங்­கி­னார்," என்று கூறினார் குணா­ளன்.

"அவர் பயிற்சி அளித்து வந்த 8 வீரர்­களும் முழு ஈடு­பாட்­டு­டன் பயிற்சி செய்ய வேண்­டும் என்ற குறிக்கோளுடன் அவர்­கள் அனை­வ­ரை­யும் சிறைத்துறை அவருக்கு அளித்த வீட்­டில் தங்க வைத்­தார்," என்று திரு ஹரிச்­சந்­தி­ரா­வின் மகன் ரோஹன் நினை­வு­கூர்­கி­றார். அவர்­கள் அனை­வ­ருக்­கும் தனது தாயார் வீட்­டில் சமைத்து உண­வ­ளித்­ததாக திரு ரோஹன் கூறி­னார்.

சிங்கப்பூர் அமெச்சூர் தடகள சங்கம் (SAAA) ஃபேரர் பார்க்கில் நடைபெற்ற 'ஓபன் ரிலே சாம்பியன்ஷிப்' போட்டியின்போது எம்.ஹரிச்சந்திரா

4 x 400 அஞ்சல் ஓட்டத்தைத் தொடங்கி வைத்து அவரின் அணியைச் சேர்ந்த எம்.சிங்கிடம் தடியைக் கொடுக்கிறார்.

திரு ஹரிச்சந்திரா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!