வாடகை வீட்டில் வசித்தவரிடம் ஒரு மில்லியன் வெள்ளி சேமிப்பு

சிங்­கப்­பூ­ரில் ஓரறை வாடகை வீட்­டில் வசித்த 80 வய­து­களில் இருந்த ஒரு

முதி­ய­வ­ரின் சேமிப்­பில் ஒரு மில்­லி­யன் வெள்­ளி­யும் பல பங்­கு­களும் இருந்­தது

தற்­பொ­ழுது தெரியவந்­துள்­ளது.

அந்த முதி­ய­வர் எளி­மை­யாக உடை­

அ­ணிந்து இருந்­தா­லும் மற்ற ஓய்வு பெற்ற முதி­ய­வர்­க­ளைப்­போல இல்­லா­மல் சந்­தை­கள் மற்­றும் வணிக மையங்­களில் இருந்து வாங்­கப்­பட்ட உண­வு­க­ளையே அதி­கம் உட்­கொண்­டார்.

சிலர் அவர் உண்­மை­யில் நல்ல வசதி உள்­ள­வர் என்­றும் நன்கு திட்டமிடப்பட்ட ஓய்­வூ­தி­யத் திட்­டத்­தைக் கொண்­ட­வர் என்று நினைத்­தி­ருப்­பார்­கள்.

வங்­கி­யில் சேமிப்­புக் கணக்­கைத் தவிர அவர் தனது மத்­திய சேமநிதி­யி­லி­ருந்­தும் நான்கு ஓய்­வூ­தி­யக் காப்­பு­று­தித் திட்­டங்­களில் இருந்­தும் ஒவ்­வொரு மாத­மும் நல்ல ஒரு தொகை­யைப் பெற்று வந்­தார்.

பல தனி­யார் ஓய்­வூ­தி­யக் காப்­பு­று­தி­கள் மலி­வா­னவை அல்ல. ஒவ்­வொன்­றுக்­கும் சில நூறு ஆயி­ரம் வெள்­ளி­கள் தேவை. அவ­ரு­டைய வங்­கி­யில் இருந்த சேமிப்பு, மத்­திய சேம­நிதி, ஓய்­வூ­தி­யக் காப்­பு­றுதி ஆகி­ய­வற்­றின் மொத்த மதிப்பு கிட்­டத்­தட்ட ஒரு மில்லியன் வெள்ளிக்கு மேல் இருக்­கும்.

இவர் ஏன் அடுக்­கு­மா­டி­யின் ஓரறை வீட்டை வாட­கைக்கு எடுத்து தங்­கி­யி­ருந்­தார் என்று தெரி­ய­வில்லை.

இதன்­மூ­லம் இவர் தன்­னு­டைய ஓய்­வுக் காலத்தை நன்கு திட்­ட­மிட்டு இருந்­தது வெளிச்­சத்­திற்கு வந்­தி­ருக்­கிறது.

அவ­ருக்கு நினை­வாற்­றல் பிரச்­சினை ஏற்­பட்டு சமூக சேவை­யா­ளர்­க­ளின்

உத­வி­யு­டன் முதி­யோர் இல்­லத்­தில் அவர் சேர்ந்­த­ பி­றகே இந்த விவ­ரங்­கள் தெரிய வந்­தி­ருக்­கிறது.

ஜப்­பா­னிய ஆக்­கி­ர­மிப்­பின்­போது

இவ­ரு­டைய பெற்­றோர் இறந்­து­விட்­ட­தும் அவ­ரு­டைய உற­வி­னர்­க­ளு­டன் அவர் தொடர்­பில் இல்லை என்­ப­தை­யும் தவிர அவ­ரைப்­பற்றி அதி­கம் அறி­யப்­ப­ட­வில்லை.

அவ­ரது சொத்­து­களை நிர்­வ­கிக்க நீதி­மன்­றம் நிய­மிக்­கும் சட்­டப் பிர­தி­நி­தி­யை தவிர வேறு யாரும் அவருடைய சொத்து­

­க­ளைக் கையாள முடி­யாது. இது­வரை அவ­ருக்கு இன்­னும் சட்­டப் பிர­தி­நிதி நிய­மிக்­கப்­ப­டா­த­தால் அவர் அர­சாங்க மானி­யத்­தில் முதி­யோர் இல்­லத்­தில் வாழ்­கி­றார்.

அவ்­வாறு நிய­மிக்­கப்­படும் சட்­டப்­பி­ர­தி­நிதி, சமு­தாய குடும்ப மேம்­பாட்டு அமைச்­சால் ஆத­ரிக்­கப்­படும் லாப நோக்­க­மற்ற நிறு­வ­ன­மான சிறப்புத் தேவை­கள் அறக்­கட்­டளை நிறு­வ­னம் மூலம் அவ­ரது நிதியை நிர்­வ­கிக்க ஓர் அறக்­கட்­ட­ளையை அமைக்­க­லாம்.

சிறப்புத் தேவை­யுள்ள குழந்­தை­கள், பெரி­ய­வர்­க­ளின் நிதியை நிர்­வ­கிக்க 2008ல் இந்த அறக்­கட்­டளை நிறு­வ­னம் நிறு­வப்­பட்­டது.

சிறப்புத் தேவை­கள் அறக்­கட்­ட­ளை­யின் பொது மேலா­ளர் கூறு­கை­யில், "அண்­மை­கா­ல­மாக சுய­மாக சிந்தித்து முடி­வெ­டுக்­கும் திறன் குறைந்­த­வர்­கள் நிதி­யைப் பாது­காக்க இந்த சேவையை நீட்டித்துள்ளோம்," என்று கூறி­னார்.

இதுபோன்ற அறக்­கட்­ட­ளை­களை அவர்­க­ளின் உற­வி­னர்­கள் அல்­லது நீதி­மன்­றத்­தால் நிய­மிக்­கப்­பட்ட பிர­தி­நி­தி­களை அமைக்­க­லாம் என்­றும் அவர் கூறி­னார்.

முன்­கூட்­டியே திட்­ட­மிட வேண்­டும்

முதி­யோர் இல்­லங்­களில் நிதி­சார்ந்த ஓய்வு பெறு­ப­வர்­க­ளைக் காண்­பது அரிது. இருந்­தா­லும் கணி­ச­மான சொத்­து­க­ளைக் கொண்ட 'டிமென்ஷியா' நோயா­ளி­கள் சம்­பந்­தப்­பட்ட வழக்­கு­கள் வித்­தி­யா­ச­மா­னவை.

இது­போன்ற பலர் தனி­யாக வாழ்

­கி­றார்­கள். அல்­லது குடும்ப ஆத­ரவு இல்­லா­மல் இருக்­கி­றார்­கள். அத­னால் அவர்­கள் உடல்­நிலை சரி­யில்­லா­த­போ­து­தான் அவர்­க­ளின் இக்­கட்­டான நிலை வெளிச்­சத்­திற்கு வரு­கிறது.

இது­போன்ற நேரங்­களில் உதவ ஒரு வழக்­க­றி­ஞரை நீங்­கள் நிய­மிக்­க­வேண்­டும்.

அதா­வது சிறப்புத் தேவை­கள் அறக்­

கட்­டளை நிறு­வ­னங்­க­ளு­டன் ஓர் அறக்­கட்­ட­ளையை அமைத்து ஒரு திட்­டத்தை உரு­வாக்­க­லாம்.

உங்­க­ளுக்கு போது­மான ஓய்வு ஊதி­யம் கிடைக்­கும் பட்­சத்­தில் உங்­கள் விருப்­பத்தை பட்­டி­யல் இட­லாம். அதா­வது ஓய்வு காலத்­தில் உங்­கள் வீட்­டில் ஒரு பரா­ம­ரிப்­பா­ள­ரு­டன் தொடர்ந்து வாழ விரும்­பு­கி­றீர்­களா அல்­லது தனி வீட்­டில் வாழ விரும்புகிறீர்களா என்­ப­தைக் குறிப்­பி­ட­லாம்.

சிறப்­புத் தேவை­யுள்­ளோ­ருக்­கான அறக்­கட்­டளை நிறு­வ­னம் இது­வரை 70 முதி­ய­வர்­க­ளின் அறக்­கட்­ட­ளை­களை நிர்­வ­கித்து வரு­கிறது. அவர்­க­ளில் மூன்­றில் ஒரு பகு­தி­யி­னர் ஞாப­க­ம­றதி நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள்.

தனி­யாக வாழ்­ப­வர்­க­ளாக இருந்­தால்

பொரு­ளா­தார வசதி இருந்­தும் நெருங்­கிய குடும்ப உற­வு­கள் இல்­லை­யென்­றால் பிற்­கா­லத்­தில் தங்­க­ளைக் தாங்­களே கவ­னித்­துக்­கொள்ள நல்ல திட்­டங்­களை உரு­வாக்­க­வேண்­டும். இல்­லை­யென்­றால் தங்­க­ளைத் தாங்­களே கவ­னித்­துக்­கொள்ள முடி­யா­மல் போக­லாம்.

நான்கு அறை­கள் கொண்ட தனது வீட்­டு ­வ­சதி வாரிய குடி­யி­ருப்­பில் தனி­யாக வசித்து வந்த ஓர் ஓய்­வு­பெற்ற

ஆசி­ரி­யை­யின் அவல நிலையை எடுத்­துக் கொள்­ளுங்­கள். அவ­ரது கண­வர் இரு­பது

ஆண்­டுக­ளுக்கு முன்பு இறந்­து­விட்­டார். அவர்­க­ளுக்கு குழந்­தை­கள் இல்லை.

ஒரு நாள் அவர் தெரு­வில் சுற்­றித் திரி­வதை அவ­ரு­டைய தேவா­ல­யத்­தைச் சேர்ந்த சிலர் கவ­னித்­தார்­கள்.

வீட்­டிற்­குச் செல்ல நண்­பர்­கள் அவ­ருக்கு உத­வி­ய­போது, ​​​​அவ­ரால் தன்­னைக் கவ­னித்­துக்­கொள்ள முடி­யா­மல் இருந்­த­தால், அவ­ரு­டைய குடி­யி­ருப்­பின் அசுத்­த­மான நிலை­யைக் கண்டு அவர்­கள் அதிர்ச்­சி­ய­டைந்­த­னர்.

தேவா­லய பாதி­ரி­யார் உத­வி­யு­டன், அவர் இறு­தி­யில் 2015ல் ஒரு முதி­யோர் இல்­லத்­தில் அனு­ம­திக்­கப்­பட்­டார்.

அந்த நேரத்­தில், உற­வி­னர்­கள் இல்­லாத ஞாப­க­ம­றதி நோய் (டிமென்­ஷியா) நோயா­ளி­களை அறக்­கட்­டளை நிறு­வ­னம் கையா­ள­வில்லை. பின்­னர் அது தொழில் வல்­லு­நர்­க­ளின் உத­வியை நாடி­யது. ஒரு­வர் சட்­டப் பேரா­சி­ரி­யர் - நீதி­மன்­றத்­தால் நிய­மிக்­கப்­பட்ட பிர­தி­நி­தி­க­ளா­கத் தங்­கள் சேவை­களை முன்­வந்து அவர்­கள் அவ­ரது விவ­கா­ரங்­களை நிர்­வ­கிக்க முடி­யும்.

அவ­ரது அடுக்­கு­மாடி வீட்­டைத் தவிர, அவ­ரி­டம் சுமார் $250,000 ரொக்­கம்

மற்­றும் பங்­கு­கள் இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டது.

அவற்றை விற்ற பிறகு கிடைக்­கும் மொத்த வரு­மா­னம், அறக்­கட்­டளை நிறு­வ­னத்­தில் அவ­ருக்­காக ஓர் அறக்­கட்­ட­ளையை அமைக்க பயன்­ப­டுத்­தப்­பட்­டது. அத­னால் அவர் சிறப்­பாக பரா­ம­ரிக்­கப்­பட முடி­யும்.

அறக்­கட்­டளை நிதி­யின் பிர­தி­நி­தி­களும் அறக்­கட்­டளை நிறு­வன மேலா­ள­ரும் முதி­யோர் இல்­லத்­தில் தங்­கு­வதை மேம்­ப­டுத்த அனு­ம­தித்­தது. அத­னால் அவர் குளி­யல் அறை­யு­டன் கூடிய அறை­யில் வச­தி­யாக வாழ முடிந்­தது.

அது­மட்­டு­மல்­லா­மல், அவ­ரைப் பரா­ம­ரிப்­ப­வர்­கள் வாரத்­திற்கு இரண்டு முறை தேவா­ல­யத்­திற்கு அவ­ரு­டன் செல்­ல­வும், அவ­ரு­டைய நண்­பர்­க­ளைச் சந்­திக்­க­வும் ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டன.

2018ஆம் ஆண்டு 91 வய­தில் அந்த ஆசி­ரி­யர் இறந்­த­தைக் குறிப்­பி­டு­கை­யில், "எஞ்­சி­யி­ருக்­கும் ஆண்­டு­களில் அவர் நன்­றா­கக் கவ­னித்­துக் கொள்­ளப்­பட்­ட­தைப் பார்த்­த­போது மன­திற்கு இத­மாக இருந்­தது," என்­கி­றார் திரு­மதி டான்.

ஆசி­ரியை தனது 60வது வய­தில் உயில் எழுதியிருந்ததால், அவ­ரது அறக்­கட்­ட­ளை­யில் இருந்த எஞ்­சிய நிதி அவ­ரது பிற்­கா­லத்­திற்கு உத­வி­யாக இருந்­தது.

சிறப்­புத் தேவை­கள் உள்ள முதி­ய­வர்­

க­ளுக்­கான அறக்­கட்­ட­ளையை எவ்­வாறு திட்­ட­மி­டு­வது என்­பது குறித்த ஆலோ­சனை உங்­க­ளுக்­குத் தேவைப்­பட்­டால், இந்த இணை­ய­த­ளத்­திற்­குச் செல்­ல­வும். https://www.sntc.org.sg/

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!