கொரோனாவின் பிந்தைய விளைவுகள்

கொரோனா நோய்த்­தொற்று உரு­வாகி மூன்று அலை­கள் முடிந்து விட்­டன. அனைத்­தி­லுமே ஒரு­வ­ருக்கு நோய்த்­தொற்று ஏற்­பட்ட பிறகு நீண்ட கால அறி­கு­றி­கள் இருப்­பதே வழக்­க­மாக இருந்­தது. இலே­சா­னது முதல் தீவி­ர­மான அறி­கு­றி­கள் கொண்ட பல­ருக்கு சில வாரங்­கள் அல்­லது சில மாதங்­க­ளுக்கு கூட அந்­தப் பிரச்­சினை நீடிக்­கிறது.

மனக் குழப்­பம், ஞாப­க­ம­றதி, முடி உதிர்வு ஆகிய பிரச்­சி­னை­கள் அனைத்து வய­தி­ன­ரை­யும் பாதிக்­கிறது. கொரோ­னா­வுக்கு பிந்­தைய பாதிப்­பு­களில் ஆண்­க­ளைக் காட்­டி­லும் பெண்­களே அதி­கம் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர் என்று அண்­மைய ஆய்வு தெரி­விக்­கிறது.

மக­ளிர் நலன் குறித்த மருத்­துவ இதழ் ஒன்­றில் கொரோனா பாதிப்பு குறித்த கட்­டுரை ஒன்று வெளி­யா­னது. அதில் உணவை விழுங்­கு­வ­தில் சிர­மம், தலைச்­சுற்­றல், நெஞ்சு வலி போன்­றவை நீண்­ட­கால பாதிப்­பு­க­ளாக பெண்­

க­ளுக்கு ஏற்­ப­டு­கின்­றன என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. கொரோ­னா­வால் ஏற்­படும் உயி­ரி­ழப்­பு­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் ஆண்­க­ளைக் காட்­டி­லும் பெண்­கள் குறை­வா­கத்­தான் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர் என்­றா­லும் நோய் குண­மா­ன­தற்கு பிந்­தைய அறி­கு­றி­கள் என்­பது பாலி­னம் அடிப்­ப­டை­யில் வேறு­ப­டு­கிறது என்று ஆய்­வு­கள் தெரி­விக்­கின்­றன.

இருபாலரிடமும் உள்ள வேறுபாடுகள்:

கொரோ­னா­வால் நீண்ட கால பாதிப்­பு­களை எதிர்­கொண்­டி­ருப்­

ப­வர்­களை வைத்து ஆய்வு செய்­யப்­பட்­ட­தில் 84 விழுக்­காடு ஆண்­களுடன் ஒப்­பி­டு­கை­யில் 97 விழுக்­காட்டு பெண்­க­ளுக்கு அறி­கு­றி­கள் மிக அதி­க­மாக இருந்­தி­ருக்­கின்­றன. குறிப்­பாக, சுவா­சிப்­ப­தில் பிரச்­சினை, சோர்வு, இத­யத் துடிப்­பில் மாற்­றம் மற்­றும் தூங்குவதில் பிரச்­சினை போன்­றவை பெண்­

க­ளுக்கு ஏற்­ப­டு­கின்­றன. ஆண்­

க­ளுக்கு பெரும்­பா­லும் உடல் எடை குறை­கிறது.

பொது­வான அறி­கு­றி­கள்:

கொரோனா நோய்த்­தொற்று ஒரே சம­யத்­தில் பல உடல் உறுப்பு­களை பாதிக்­கக் கூடி­ய­தா­கும். இந்த பாதிப்­பு­கள் பல மாதங்­க­ளுக்கு நீடிக்­க­லாம். நீண்ட கால கொரோனா பாதிப்பு யாருக்கு ஏற்­படும் அல்­லது யாருக்கு ஏற்­ப­டாது என்று கணிக்க முடி­யாது. மயக்­கம், மூச்­சுக்­கோ­ளாறு, இரு­மல், மூட்டு வலி, நெஞ்சு வலி, ஞாபக மறதி, தூக்­கப் பிரச்­சினை, தசை வலி, பட­ப­டப்பு, நுக­ரும் திறன் இழப்பு, கவலை, காய்ச்­சல், உடல் சோர்வு போன்ற பிரச்­சி­னை­கள் ஏற்­ப­டக்­கூ­டும்.

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்­பட்­ட­தில் இருந்து 90 நாட்­க­ளுக்கு பிற­கும் அறி­கு­றி­கள் இருப்­பது நீண்­ட­கால பாதிப்பு ஆகும். இந்த அறி­கு­றி­கள் இலே­சா­ன­தாக அல்­லது தீவி­ர­மா­ன­தாக இருக்­க­லாம். அல்­லது மருத்­து­வ­

ம­னை­யில் சேர்க்­கும் அள­வுக்கு இருக்­க­லாம்.

நீண்ட கால கொரோனா பாதிப்பு குறித்து இன்­னும் ஆய்­வு­கள் தொட­ரு­கின்­றன. இருந்தாலும் பாதிப்பு ஏற்­பட்­ட­வர்­களில் 10 விழுக்காட்டி னருக்கு இந்­தப் பிரச்­சினை

ஏற்­ப­டு­கிறது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!