எச்சரிக்கை: உணரப்படாத உயிர்க்கொல்லி

பெண்­ணின் மனம் புதி­ரா­னது என்­றும் ஆழங்­காண முடி­யா­தது என்­றும் குறை­கூ­றும் புலம்­பல்­களை நாம் அவ்­வப்­போது கேட்­ப­துண்டு. உடற்­கூறு ரீதி­யாக ஆணின் இத­யத்­துக்­கும் பெண்­ணின் இத­யத்­துக்­கும் அள­வில் வித்­தி­யா­சம் உண்டு என்­கிறது மருத்­துவ உல­கம்.

ஆனால் பெண்­க­ளின் இத­யக் கோளாறு குறித்த விழிப்­பு­ணர்வு சமூ­கத்­தில் குறைவு என்றே கருத வகை­செய்­கின்­றன ஆய்வு முடி­வு­கள் சில. மார­டைப்­பின் அறி­கு­றி­களுக்கு ஆண்­க­ளை­வி­டப் பெண்­கள் அதிக முக்­கி­யத்­து­வம் தரு­வ­தில்லை; இத­னால் அவ­சர மருத்­துவ உதவி எண்ணை அழைக்­கா­ம­லும் மருத்­து­வ­ம­னைக்கு விரைந்து செல்­லா­ம­லும் பெண்­கள் தாம­தப்­ப­டுத்­து­வதை ஆய்­வு­கள் காட்­டு­கின்­றன.

இதற்­கான கார­ணங்­க­ளைக் கண்­ட­றிய முனைந்த ஆய்­வா­ளர்­கள், பெண்­க­ளுக்கு ஆண்­க­ளைக் காட்­டி­லும் மித­மான அறி­கு­றி­களே ஏற்­ப­டு­வ­தா­கக் கூறு­கின்­ற­னர். இத­னால் மருத்­து­வ­ம­னைக்கு விரைந்து சென்­றா­லும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­பா­ளர்­கள் இந்த அறி­கு­றி­களை மார­டைப்­போடு தொடர்­பு­ப­டுத்­தும் அள­விற்கு இவை வலு­வாய் இல்லை என்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

உதா­ர­ணத்­திற்கு மார­டைப்பு ஏற்­படும் பெண்­களில் பெரும்­பா­லோ­ருக்கு நெஞ்சு வலி அரி­தா­கவே ஏற்­ப­டு­கிறது. ஆனால் இவர்­க­ளுக்கு மூச்சு விடு­த­லில் சிர­மம், வியர்வை, அதீத சோர்வு, தாடை­க­ளி­லும் முது­கி­லும் வலி போன்ற அறி­கு­றி­கள் ஏற்­ப­டு­வ­துண்டு. இந்த அறி­கு­றி­களை உட­ன­டி­யாக இத­யக் கோளாற்­று­டன் தொடர்­பு­ப­டுத்த இய­லாது.

பெண்­க­ளுக்கு இவ்­வாறு நெஞ்சு வலி இல்­லா­மல் ஏற்­படும் மார­டைப்பு மிக­வும் அபா­ய­க­ர­மா­னது என்று அமெ­ரிக்க இத­யச் சங்­கம் தெரி­வித்­துள்­ளது. இத­னால் நோயா­ளி­கள், மருத்­து­வர்­கள் என இரு­த­ரப்­பி­ன­ருமே பிரச்­சி­னையை அடை­யா­ளம்­காண நீண்ட நேரம் எடுக்­கும் என்­பதை அது சுட்­டி­யது.

சில சம்­ப­வங்­களில் மருத்­து­வர்­களே இத்­த­கைய பெண்­க­ளி­டம் உட­லில் கோளாறு ஏது­மில்லை என்­றும் பிரச்­சினை அவர்­கள் கற்­ப­னை­யில்­தான் என்­றும் சமா­தா­னப்­படுத்­தி­ய­தை­யும் சங்­கம் கூறி­யது.

அமெ­ரிக்­கா­வில், நெஞ்சு வலிப்­ப­தா­கக் கூறி­யும் பெண்­கள் மருத்­து­வ­ரைக் காண அதிக நேரம் காத்­தி­ருக்க நேர்ந்­த­தா­க­வும் மற்­றோர் ஆய்வு கூறு­கிறது.

இத­னால் விழிப்­பு­ணர்வு ஏற்­படுத்த வகை­செய்­யும் நோக்­கில் இந்த ஆண்டு ஜன­வரி மாதம், நான்கு வெவ்­வேறு மருத்­து­வ­ம­னை­களில் கிரு­மிப்­ப­ர­வ­லுக்கு முன்­னர் மார­டைப்­புக்கு சிகிச்சை பெற்ற 218 பேரி­டம் ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது.

இதில் 62 விழுக்­காட்­டுப் பெண்­க­ளுக்கு நெஞ்சு வலி ஏற்­பட்­டி­ருக்­க­வில்லை; ஆண்­களில் இந்த எண்­ணிக்கை 36 விழுக்­காடு மட்­டுமே. செரி­மா­ன­மின்மை, வாந்தி, மூச்சு விடு­வ­தில் சிர­மம் போன்ற அறி­கு­றி­கள் பெரும்­பா­லான பெண்­களி­ட­மும் கால்­வாசி ஆண்­க­ளி­ட­மும் காணப்­பட்­டன.

மார­டைப்பு ஏற்­பட்ட 72 விழுக்­காட்­டுப் பெண்­கள் கிட்­டத்­தட்ட ஒன்­றரை மணி நேரத்­துக்­குப் பிறகே மருத்­து­வ­ம­னைக்­குச் சென்­ற­னர் அல்­லது அவ­சர உதவி எண்ணை அழைத்­த­னர். ஆண்­களில் இந்த விகி­தம் 36 விழுக்­காடு.

மார­டைப்பு ஏற்­ப­டும்­போது திரைப்­ப­டங்­களில் காட்­டப்­ப­டு­வ­தைப் போன்ற அறி­கு­றி­களோ நெஞ்சு வலியோ ஏற்­ப­டு­வது கட்­டா­ய­மில்லை என்று ஆய்வை மேற்­கொண்ட மருத்­து­வர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

அதே­போன்று ஆண்­களில் சரா­சரி­யாக 61 வய­துக்­குப் பிறகு மார­டைப்பு ஏற்­ப­ட்டதும் பெண்­களில் சரா­ச­ரி­யாக 69 வய­துக்­குப் பிறகே மார­டைப்பு ஏற்­பட்­டதும் ஆய்­வில் தெரி­ய­வந்­தது. ஆனால் இளம்­பெண்­க­ளுக்கு மார­டைப்போ இத­ய­நோயோ ஏற்­ப­டாது என்று இதற்­குப் பொருள் அல்ல என்று மருத்­து­வர்­கள் எச்­ச­ரித்­த­னர்.

விழிப்­பு­ணர்வு நட­வ­டிக்­கை­களின் மூலம்­தான் பெண்­க­ளின் இத­யக் கோளாறு தொடர்­பான அறி­கு­றி­க­ளைச் சரி­வர அடை­யா­ளம் காணு­தல் சாத்­தி­ய­மா­கும். அதே­வே­ளை­யில் பெண்­களும் தங்­க­ளுக்கு இத­யக் கோளாறு இருப்­ப­தா­கச் சந்­தே­கித்­தால் மருத்­து­வ­ரி­டம் 'இசிஜி' எனப்­படும் இத­யத் துடிப்பை அள­வி­டும் பரி­சோ­த­னையை மேற்­கொள்­ளும்­படி கேட்­டுக்­கொள்­ள­லாம் என்று அமெ­ரிக்க ஆய்­வா­ளர்­கள் ஆலோ­சனை கூறி­யுள்­ள­னர்.

சிங்­கப்­பூ­ரில் பெண்­க­ளி­டையே மர­ணம் விளை­விக்­கும் தலை­யாய மருத்­து­வச் சிக்­கல் இத­யக் கோளாறு­தான் என்று 'ஹெல்த்­ஹப்.எஸ்ஜி' கூறு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!