விலங்குவழி பரவும் தொற்றுநோய்கள்

உல­கெங்­கும் ஜூலை 6ஆம் தேதியான இன்று, விலங்­கு­க­ளின் மூலம் பர­வும் தொற்­று­நோய்­கள் தொடர்­பான தின­மாக அனு­ச­ரிக்­கப்­ப­டு­கிறது.

விஞ்­ஞானி லூயி பாஸ்­டர் 1885ஆம் ஆண்டு இந்த நாளில்­தான் வெறி­நாய்க் கடி என்று அழைக்­கப்­படும் 'ரேபிஸ்' நோய்க்கு எதி­ரான தடுப்­பூ­சியை வெற்றி­கரமா­கச் செலுத்­தி­னார்.

இந்த நோய் தொற்­றிய விலங்­கு­கள் மனி­தர்­க­ளைக் கடிப்­ப­தன் மூலம் பர­வும் 'ரேபிஸ்' மர­ணம் விளைவிக்கக்­கூ­டி­யது.

இவ்­வாறு விலங்­கு­களில் இருந்து மனி­தர்­க­ளுக்­குத் தொற்­றும் பல்­வேறு நோய்­கள் குறித்த விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­த­வும் இதைத் தடுப்­ப­தற்­கான வழி­வ­கை­கள் குறித்த கற்­ற­லுக்­கா­க­வும் இன்­றைய நாள் அனு­ச­ரிக்­கப்­ப­டு­கிறது.

காடு­கள் அழிக்­கப்­ப­டு­தல், சுற்­றுச்­சூ­ழல் பாதிப்பு, அதி­க­ரிக்­கும் வெப்­ப­நிலை எனப் பல்­வேறு கார­ணங்­க­ளால் விலங்­கு­க­ளைப் பாதிக்­கும் நுண்­ணு­யி­ரி­கள், பூஞ்­சைக் காளான்­கள், ஒட்­டுண்­ணி­கள் போன்­றவை, இந்த விலங்கு­களு­டன் பழ­கும் மனி­தர்­க­ளுக்­குத் தொற்­றிக்­கொள்­வ­தாக ஆய்­வா­ளர்­கள் கூறு­கின்­ற­னர். இந்­தத் தொற்­று­நோய்­கள் விலங்­கு­கள், மனி­தர்­கள் என இரு­த­ரப்­பி­லும் உயிர்ச்­சே­தம் விளை­விக்­கின்­றன.

உல­கில் 200க்கும் அதி­க­மான விலங்­கு­க­ளி­டம் இருந்து மனி­தர்க்­குத் தொற்­றும் நோய்­கள் இருப்­ப­தாக உல­கச் சுகா­தார நிறு­வ­னம் கூறு­கிறது. இத்­த­கைய நோய்­க­ளைத் தடுப்­பூ­சி­கள் மூலம் தடுப்­பதே பர­வ­லைத் தவிர்ப்­ப­தற்­கான சிறந்த வழி என்று வல்­லு­நர்­கள் கூறு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!