ஆயிரத்தெட்டு குறைகளைக் கண்டுபிடிக்கிறோம்

நம்மைப் பற்றி நாமே ஆண்டுக்கு 1,000க்கும் மேற்பட்ட குறைகளைக் கூறிக்கொள்கிறோம். முடி, தோல், எடை என நம்மையே விமர்சித்து முனகுகிறோம் என்று பிரிட்டிஷ் ஆய்வு ஒன்று கூறுகிறது. ஓர் ஆண் சராசரியாக ஒரு நாளில் மட்டும் தன்னைப் பற்றி மூன்று குறைகளைச் சொல்லிக்கொள்கிறார். இதன்படி ஆண்டுக்கு 1,095 குறைகளாகிவிடும். அதேபோல் ஒரு பெண் சராசரியாக ஒரு நாளில் தன்னைப் பற்றி நான்கு முறை குறை சொல்லிக் கொள்வாராம். இது ஆண்டுக்கு 1,460 என்றாகிவிடும்.

ஆய்வில் பங்கேற்ற 2,000 பேரில் தங்களையே அதிகமாக விமர்சித்துக்கொள்வோர் 21 விழுக்காட்டினர். இருப்பினும் தங்களின் குறைகளை மற்றவர்களிடம் கூறத் தயாராக இல்லை என்று 27 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.

பற்கள், வயிறு, கால்கள் எனத் தங்களின் வெவ்வேறு உடல் அங்கங்களைப் பற்றி பலரும் தங்களையே கடுமையாக விமர்சித்துக் கொள்கின்றனர். மேலும், வயதாக ஆக, தங்களின் தோற்றத்தைப் பற்றி மேலும் எதிர்மறை எண்ணங்களைக் கொண்டவர்கள் 26 விழுக்காட்டினர் என்று ஆய்வு கண்டறிந்துள்ளது.

பருமனான தோற்றம், வயதான தோற்றம், கைகளையும் கால்களையும் காட்டக்கூடாது எனப் பலரும் சராசரியாக ஐந்து முறை உடை மாற்றிய பின்னரே வெளியில் செல்வதாகக் கூறப்படுகிறது. இதனாலேயே, பலரும் தங்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் விதமாகக் கறுப்பு நிறத்தைத் தேர்வுசெய்வதாகவும் ஆய்வு தெரிவித்தது. ஒரு சில ஆடைகளை அணிவது தங்களின் வயதுக்குப் பொருந்தவில்லை என்று பிறர் தங்களிடம் கூறியுள்ளதாக 20 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.

நம் குறைகளைச் சுட்டிக்காட்டப் பிறர் இருக்க, நாம் நமது நிறைகளை எண்ணிப் பார்க்கலாமே!

செய்தி: நியூஸ்வீக்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!