இரண்டரை ஆண்டு ஏக்கத்தைத் தீர்த்துவைத்த நேப்பாளம்

பிர­சன்னா கிருஷ்­ணன்

கடந்த ஈராண்­டு­க­ளாக "எப்­போது மீண்­டும் வெளி­நாட்­டுக்கு சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொள்­ள­லாம்?" போன்ற பல கேள்­வி­கள் என் மனத்­தில் உதித்­த­துண்டு. இவ்­வ­ளவு ஏன், "இனி சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொள்­ள­மு­டி­யுமா" என்ற கேள்­வி­கூட அவ்­வப்­போது எழுந்­த­துண்டு.

அமோ­க­மான முறை­யில் எனது கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளித்­தது நேப்­பா­ளம். கொவிட்-19 கொள்­ளை­நோய்ப் பர­வல் தொடங்கி கிட்­டத்­தட்ட இரண்­டரை ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு நான் மேற்­கொண்ட முதல் சுற்­றுப்­ப­ய­ணம் இது.

இந்து கோயில்­கள் என்­றால் பல­ருக்கு இந்­தி­யா­தான் நினை­வுக்கு வரும். பெளத்த ஆல­யங்­களைப் பற்­றிப் பேசும்­போது தாய்­லாந்து, கம்­போ­டியா உள்­ளிட்ட நாடு­கள் சிந்­த­னை­யில் உதிக்­கும்.

ஆனால் இந்த இரு சமய மக்­க­ளி­டை­யே­யும் பிர­ப­ல­மாக இருக்­கும் பல ஆல­யங்­கள் அண்டை நாடான இந்­தி­யா­வில் இருக்­கும் உணர்­வைத் தரும் நேப்­பா­ளத்­தி­லும் அதி­கம். அவற்­றில் ஒன்று தலை­ந­கர் காட்­மாண்­டு­வில் இருக்­கும் பசு­ப­தி­நா­தர் இந்து கோயில்.

இந்­தக் கோயில் கட்­டப்­பட்ட விதம் தமி­ழர்­க­ளுக்­குப் பரிச்­ச­ய­மான ஆல­யங்­க­ளி­லி­ருந்து மாறு­பட்­டி­ருக்­கும். வெளி­யி­லி­ருந்து பார்க்­கும்­போது பெளத்த ஆல­யத்­தைப்­போல் தெரி­ய­லாம்.

ஆல­யத்­தின் உள்ளே படங்­கள் எடுக்க அனு­மதி இல்லை. கைபேசியை வெளியே எடுத்­தாலே காவல்­து­றை­யி­னர் அதைக் கையில் வாங்கி படங்­கள் ஏதே­னும் எடுக்­கப்­பட்­டி­ருந்­தால் அவற்றை அழித்து­வி­டு­வர்.

இந்­தி­யா­வின் வார­ணாசி நக­ரில் இருக்­கும் ஆல­யத்­தைப் போன்றே இந்­தக் கோயி­லுக்­குப் பின்­னா­லும் ஓர் ஆறு இருக்­கிறது. இந்த ஆல­யத்­தி­லி­ருந்து சுமார் ஒரு கிலோ­மீட்­டர் தொலை­வில் உள்­ளது இதன் ஓர் அங்­க­மான குகேஸ்­வரி கோயில். வெவ்­வேறு நாள்­களில் இரண்­டுக்­கும் சென்று ரசித்­தேன்.

காட்மாண்டு நக­ரில் பெளத்­த­நாத கோயில் என்ற பிர­பல பெளத்த ஆல­ய­மும் உள்­ளது. சிங்­கப்­பூ­ரில் சீனர்­கள் அதி­கம் செல்­லும் பெளத்த ஆல­யங்­களில் உள்ள உணர்வு இங்­கும் இருந்­தது.

ஆறு ஆல­யங்­க­ளுக்­குச் சென்­றி­ருப்­பேன். அவற்­றுக்­குப் பிர­ப­ல­மான நாடு நேப்­பா­ளம்.

இமயமலை, எவ­ரெஸ்ட் மலை. நேப்­பா­ளம் என்­றால் நினை­வுக்கு வரும் மாபெ­ரும் மலை­கள் இவை.

காட்­மாண்­டு­விற்கு அரு­கில் இருக்­கும் பக்­த­பூர் நக­ரின் நாகார்­கொட் பகு­தி­யில் மலை ஒன்­றில் இருக்­கும் ஹோட்­ட­லில் நான் ஐந்து நாள்­க­ளுக்­குத் தங்­கி­யி­ருந்­தேன். அங்­கி­ருந்து இமய மலை­யைக் காண­மு­டி­யும், பரு­வ­நிலை ஒத்­து­ழைத்­தால்.

சென்ற மாதம் 10ஆம் தேதி­யிலி­ருந்து 15ஆம் தேதி­வரை நான் பய­ணம் மேற்­கொண்­ட­போது நேப்­பா­ளத்­தில் மழைக்­கா­லம். அத­னால் இமயமலைக்­குக் காவ­லாக இருந்­தன மேகம், பனி­மூட்­டம்.

சந்­தி­ர­கிரி மலை­கள் என்ற பிர­பல சுற்­றுலாப் பகு­திக்­குச் சென்­றால் இமயமலை, எவ­ரெஸ்ட் மலை இரண்­டை­யும் பார்த்து ரசிக்­க­லாம். ஆனால் அங்­கும் இதே நிலை­தான். வருத்­த­மாக இருந்­தது.

எனி­னும், ஒரு மலை­யின் மேல் வாழ்ந்து மேகத்­தால் போர்த்­தப்­பட்ட எழில் கொஞ்­சும் காட்­சி­க­ளைக் கண்டு ரசித்­ததே எனக்­குப் போதும்.

சந்­தி­ர­கிரி மலை­க­ளுக்கு மேல் காட்மாண்டு பள்­ளத்­தாக்­கும் சுற்றி­ இருக்­கும் சில மலை­களும் அவ்­வளவு ஆழ­கா­கக் காட்­சி­ய­ளிக்­கும்.

நேப்­பா­ளத்­தில் எனது முதல் நாளன்று நில­ந­டுக்­கத்­தை­யும் உணர்ந்­தேன். இர­வில் உறங்­கிக்­கொண்­டி­ருந்­த­போது நான் தங்­கி­யி­ருந்த அறை ஆடி­யது. பய­ணம் மேற்­கொண்ட பிறகு மிக­வும் களைப்­பாக இருந்­த­தால் அதை எனது கற்­ப­னை­யின் ஓர் அங்­க­மா­கக் கரு­தி­னேன்.

நில­ந­டுக்­கம் உலுக்­கி­யது மறு­நாள் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. பக்­த­பூர் நக­ரில் ரிக்­டர் அளவு 4.7ஆகப் பதி­வான நில­ந­டுக்­கத்­தால் எந்த பாதிப்போ உயிர்ச்சேதமோ இல்லை.

நில­ந­டுக்­கம் உலுக்கி இரண்டு நாள்­க­ளுக்­குப் பிறகு அதன் மைய­மாக இருந்த பக்­த­பூர் நக­ரில் இருக்­கும் சங்கு நாரா­யண ஆல­யத்­திற்­குச் சென்­றேன்.

2015ஆம் ஆண்டு நேப்பாளத்தை உலுக்­கிய மோச­மான நில­ந­டுக்­கத்­தின் தாக்­கத்தை காட்­மாண்டு நக­ரி­லும் சுற்று வட்­டா­ரங்­க­ளி­லும் இன்­ன­மும் காண­மு­டிந்­தது.

'பக்­த­பூர் தர்­பாரி ஸ்கு­வேர்' என்று அழைக்­கப்­படும் ஆதி­கால பக்­த­பூர் நக­ரம் சுற்­றுப்­ப­ய­ணி­க­ளி­டையே பிர­ப­ல­மா­னது. 2015ஆம் ஆண்டு நில­ந­டுக்­கத்­தால் அங்­கு உள்ள பல கட்­ட­டங்­கள் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டன.

அங்கு சேத­ம­டைந்த சில கட்­ட­டங்­கள் இன்­றைக்­கும் சரி­செய்­யப்­பட்டு வரு­கின்­றன.

சிங்­கப்­பூ­ரில் 'ஸ்டார்­பக்ஸ்', 'காஃபி பீன்' போன்ற உயர்­தர காப்பிக் கடை­க­ளைப்­போல் நேப்­பா­ளத்­தில் இருக்­கிறது 'ஹிமால­யன் ஜாவா காஃபி'. விலை அதி­கம் இருக்­கும் அங்கு விற்­கப்­படும் காப்பி, தேநீர் வகை­களும் உணவு வகை­களும் சுவை­யில் யாரை­யும் ஈர்க்­கக்­கூ­டி­யவை.

அங்கு தயா­ரிக்­கப்­படும் காப்பி இமய மலைப் பகு­தி­யி­லி­ருந்து சேக­ரிக்­கப்­படும் காப்பிக் கொட்­டை­களிலி­ருந்து தயா­ரிக்கப்படு­பவை என்று தெரி­விக்­கப்­பட்­டது.

நேப்­பா­ளத்­தில் ஆல­யங்­கள் உள்­ளிட்ட பல இடங்­கள் மலைப் பகுதி­களில் அமைந்­துள்­ள­தால் பல வேளை­களில் அதி­க­மான படி­களில் ஏற­வேண்­டி­யி­ருக்­கும். இயல்பு வாழ்க்­கை­யி­லேயே அதிக உடற்­பயிற்சி கிடைக்­கும் சாத்­தி­யம் உள்ளது.

ஈரத்­தன்­மை­யும் அதிக வெயி­லும் நிறைந்த சிங்­கப்­பூ­ரின் பரு­வ­நி­லைக்­குப் பழக்­கப்­பட்­டோ­ருக்கு நேப்­பா­ளம் ஒரு விருந்து. அதுவும் நான் தங்­கி­யி­ருந்த மலைப் பகு­தி­யில் காலை­யி­லும் இர­வி­லும் குளிர் நம்­மைச் சீண்டி விளை­யா­டும்.

நேப்­பா­ளத்­திற்­குப் பய­ணம் மேற்­கொள்­ள­வி­ரும்­பு­வோர் முழு­மை­யாகத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்டு இ­ருக்­க­வேண்­டும். 'ஆன் அரை­வல் விசா' எனப்­படும் விமான நிலை­யத்­தில் தரை­யி­றங்­கி­ய­வு­டன் வழங்­கப்­படும் சுற்­றுப்­ப­ய­ணி­க­ளுக்­கான விசாவை காட்­மாண்டு திரி­பு­வன் அனைத்­து­லக விமான நிலை­யத்­தில் சிங்­கப்­பூ­ரர்­கள் சிர­மமின்றி பெற­லாம்.

இந்­தப் பய­ணத்­தில் இமயமலை எனது கண்­க­ளுக்­குத் தென்­ப­ட­வில்லை என்ற ஒரே வருத்­தம்­தான் இருந்­தது. பர­வா­யில்லை. எப்­ப­டி­யா­வது மீண்­டும் நேப்­பா­ளம் செல்­ல­வேண்­டும் என்ற உந்­து­தல் இருந்­த­படியே உள்­ளது.

சில நாடு­க­ளுக்­குப் பய­ணம் மேற்­கொள்­ளும்­போ­து­தான் இந்த உந்­து­தல் இருக்­கும். அந்­தப் பட்டி­யலில் முன்­னணி வகிக்­கும் நாடு­களில் நேப்­பா­ள­மும் ஒன்று.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!