பசு நெய்யின் மருத்துவப் பலன்கள்

பொது­வாக நெய் என்­றாலே அதில் அதி­கக் கொழுப்பு இருப்­ப­தால் உட­லுக்கு நல்­ல­தல்ல என்ற கருத்து நம்­மில் பல­ருக்­கும் உண்டு. குறிப்­பாக வய­தா­னோர் உண­வில் நெய்­யைச் சேர்த்­துக்­கொள்­வ­தால் உயர் ரத்த அழுத்­தம் போன்ற இத­யம் தொடர்­பான நோய்­கள் ஏற்­படும் என்ற அச்­ச­மும் நில­வு­கிறது.

ஆனால் கலப்­ப­ட­மற்ற பசு நெய் குறித்து இவ்­வாறு அஞ்­சத் தேவை­யில்லை என்று சித்த மருத்­துவ நூல்­கள் கூறு­கின்­றன. இதில் உட­லுக்கு நன்மை செய்­யும் கொழுப்­புச் சத்து மட்­டுமே இருப்­ப­தா­க­வும் சொல்­லப்­ப­டு­கிறது.

கண் எரிச்­சல், குடல் பிரச்­சி­னை­கள், தோல் வறட்சி, முடி உதிர்­தல் போன்­ற­வற்­றால் அவ­தி­யுறுவோர் பசு நெய்­யைத் தொடர்ந்து உட்­கொண்­டால் உடல் சூடு தணிந்து இந்­தப் பிரச்­சி­னை­கள் படிப்­ப­டி­யா­கச் சரி­யா­கி­வி­டும் என்று கூறப்­ப­டு­கிறது.

பசு நெய் புற்­று­நோய் வரு­வ­தைத் தடுக்­கும் என்­றும் சொல்­லப்­ப­டு­கிறது. இதி­லி­ருக்­கிற அத்­தி­யா­வ­சி­ய­மான கொழுப்பு அமி­லங்­கள் உட­லுக்கு நோய் எதிர்ப்­பு­சக்­தி­யைத் தரும்.

பசு நெய்­யின் சத்­து­கள் நீரி­ழிவு, ரத்த அழுத்­தம், 'ஆர்த்­தரைட்­டிஸ்' போன்ற நோய்­கள் வரு­வ­தைத் தடுக்­கும்; நீரி­ழி­வுப் பிரச்­சி­னை­யைக் கட்­டுக்­குள் வைக்­கும் என்­றும் சொல்­லப்­ப­டு­கிறது.

சிறு­வ­ய­தி­லி­ருந்தே பசு நெய்யை உண­வில் சேர்த்துக்கொண்டால் மூளை­யின் உயி­ர­ணுக்­கள் ஆரோக்­கி­ய­மாக இருக்­கும். ரத்­தத்­தில் உள்ள வெள்­ளை­ய­ணுக்­களை வலுப்­ப­டுத்­தும் ஆற்­றல் பசு­நெய்க்கு இருக்­கி­ற­தாம்.

பசு நெய்­யில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமி­லம், உடல் பரு­ம­னா­வ­தைத் தடுக்­கும். அத­னால், உடல் பரு­ம­னாக இருப்­போர் ரத்­தத்­தில் உள்ள கொழுப்­பின் அள­வைப் பரி­சோ­தித்த பின்­னர், மருத்­து­வ­ரின் அறி­வு­ரை­யின்­படி பசு நெய்­யைச் சாப்­பி­ட­லாம்.

பிறந்த குழந்­தைக்கு ஆறு மாதங்­க­ளுக்­குப் பிறகு அதன் ஒரு வயது வரை, கஞ்சி அல்­லது பருப்பு சாதத்­து­டன் தின­மும் இரண்டு தேக்­க­ரண்டி வரை பசு நெய் சேர்த்­துத் தர­லாம். ஒரு வயது முதல் ஐந்து வயது வரை தின­மும் நான்கு தேக்­க­ரண்டி வரை பசு நெய்யைக் கொடுக்­க­லாம்.

ஐந்து வய­துக்கு மேல் தின­மும் ஆறு தேக்­க­ரண்டி நெய் சாப்­பி­ட­லாம். கர்ப்­பி­ணி­களும் பாலூட்­டும் அன்­னை­ய­ரும் தின­சரி எட்டு தேக்­க­ரண்டி பசு நெய் சாப்­பி­ட­லாம்.

மூளை நரம்­பு­க­ளைச் சுறு­சு­றுப்­பாக்கி, மூளை­யின் செயல்­தி­றனை அதி­க­ரிக்­கும் ஆற்­றல் பசு நெய்க்கு இருப்­ப­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

மன­அ­ழுத்­தம், 'செரிப்­ரல் அட்­ரோபி' எனும் மூளை தொடர்­பான பிரச்சினை, வலிப்பு போன்­ற­வற்­றுக்­கான ஆயுர்­வேத மருந்­து­களில் பசு­நெய் முக்­கி­யப் பொரு­ளாக சேர்க்­கப்­ப­டு­கிறது.

'நீரைச் சுருக்கி, மோரைப் பெருக்கி, நெய்யை உருக்கி' உண்­ணச் சொல்­லும் பழந்­தமிழ்ப் பாட்­டைக் கேள்­விப்­பட்­டி­ருக்­கி­றோம் அல்­லவா?

எனவே, தேவையற்ற அச்சத்தைத் தவிர்த்து, கலப்­ப­ட­மில்­லாத பசு நெய்யை அள­வாக உண­வில் சேர்த்­துக்­கொண்டு பல­ன­டை­யும்­படி வல்­லு­நர்­கள் ஆலோ­சனை கூறு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!