பலன் தரும் ‘பாப்கார்ன்’

திரை­ய­ரங்­கிற்­குச் சென்று படம் பார்ப்­பது என்­றாலே பல­ருக்­கும் நினை­வுக்கு வரும் நொறுக்­குத் தீனி 'பாப்­கார்ன்'.

நொறுக்­குத் தீனி­கள் உடல்­நலத்­துக்­குக் கேடு விளை­விக்­கக் கூடி­யவை என்றே நாம் கருதுகிறோம். ஆனால் உல­க­ அளவில் பல ரசி­கர்­க­ளைக் கொண்­டுள்ள இந்த மக்­காச்­சோளப் பொரி­யில் உட­லுக்கு நன்மை செய்­யும் அம்­சங்­கள் பல இருப்­ப­தாக ஊட்­டச்­சத்து வல்லு­நர்­கள் கூறு­கின்­ற­னர்.

இதில் மாவுச்­சத்து, புர­தச்­சத்து, வைட்­ட­மின்-B6, மக்­னீ­சி­யம், இரும்­புச்­சத்து, நார்ச்­சத்து ஆகி­ய­வை­யும் உண்டு.

இது செரி­மா­னத்தை எளி­தாக்­கும்; மலச்­சிக்­க­லைத் தவிர்க்­கும். இதி­லுள்ள நார்ச்­சத்து ரத்­தத்­தில் சேரும் கொழுப்­பின் அள­வைக் குறைக்க உத­வும். இதன் மூலம் இத­ய­நோய், பக்­க­வா­தம் ஆகி­யவை வரா­மல் தடுக்­க­லாம்.

ரத்­தத்­தில் உள்ள சர்க்­கரை அள­வை­யும் இன்­சு­லின் சுரப்­பை­யும் சீராக வைத்­தி­ருப்­ப­தால், நீரிழிவு ­நோய் உள்­ள­வர்­கள் இனிப்பு சேர்க்­காத 'பாப்­கார்னை' சாப்­பி­ட­லாம்.

இதில் உள்ள பாலி­ஃபி­னா­லிக் கூட்­டுப் பொருள்­கள் புற்­று­நோ­யைத் தடுக்­கக்­கூ­டி­யவை என்று அண்மை ஆய்­வு­கள் கூறு­கின்­றன.

உரு­ளைக்­கி­ழங்கு வறுவலோடு ஒப்­பி­டும்­போது, 'பாப்­கார்­னில்' கலோரி அளவு குறைவு. இதில் உள்ள நார்ச்­சத்து, நன்கு சாப்­பிட்ட திருப்­தி­யைத் தரும்; எனவே, உடல் எடை­யைக் குறைக்க விரும்­பு­வோருக்கு இது நல்ல தெரிவு. உப்பு, வெண்ணெய், மசாலாப் பொருள்கள் அதிகம் சேர்க்காமல் 'பாப்கார்ன்' சாப்பிட்டால் பலன் அதிகம். படம்: இணையம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!