வட்டி விகிதம் கூடும்போது கவனிக்க வேண்டியவை

நல்ல விஷ­யங்­கள் அனைத்­தும் ஒரு முடி­வுக்கு வரு­வது இயல்பே. அந்த வகை­யில், வட்டி விகி­தம் குறை­வாக வசூ­லிக்­கப்­பட்ட வீட்டுக்­க­டன் திட்­டங்­கள் இருந்­த­தால் வீடு வாங்­கு­வோ­ருக்கு கையிருப்­பில் கூடு­தல் பணம் வைத்­தி­ருக்க முடிந்­தது.

இப்­போது மாற்­றம் சற்று வேக­மா­கவே இடம்­பெற்­றுள்­ளது. ஆறு மாதங்­க­ளுக்கு முன்பு, சில வங்­கி­கள் வழங்­கிய வீட்­டுக் கடன் திட்­டங்­கள் ஏறக்­கு­றைய 1 விழுக்­காடு வட்டி வசூ­லித்­தன. ஆனால், இப்­போது வட்டி 3 விழுக்­காடு அல்லது அதற்­கும் மேலா­கி­விட்­டது.

மத்­திய சேம­நி­திக் கழ­கத்­தின் சாதா­ரண கணக்­கிற்கு 2.5 விழுக்­காடு வட்டி வழங்­கப்­ப­டு­கிறது.

இது, வீடு வாங்­கு­வோர் ரொக்­கத்­தைக் கொண்டு வீட்­டுக் கட­னைச் செலுத்த ஓர் உந்­து­த­லாக இருந்­தது.

கார­ணம், மசே­நிதி தொகை­யைக் கொண்டு அப்­போது 1 விழுக்­காடு வட்­டி­யு­டன் கூடிய கட­னைச் செலுத்­து­வது அவ்­வ­ளவு பலன் தரு­வ­தாக அமை­ய­வில்லை.

ஆனால், இப்­போது வங்­கி­யில் இருந்து வீட்­டுக் கடன் பெறு­வோர், அதைத் திருப்­பிச் செலுத்த தங்­க­ளது ஓய்­வுக்­கால நிதி­யில் கை வைக்க நேரி­டும்.

உங்­க­ளது புது வீட்­டிற்கு வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­தி­டம் (வீவக) இருந்து கடன் பெறு­கி­றீர்­களோ அல்­லது ஏற்­கெ­னவே உள்ள வீவக கட­னைத் திருப்­பிச் செலுத்­து­கி­றீர்­களோ, வட்டி விகி­தம் அதி­க­ரிப்பு பற்றி நீங்­கள் கவ­லை­ய­டை­யத் தேவை­யில்லை.

ஏனெ­னில், அதன் 2.6 விழுக்­காடு வட்டி, இப்­போது உள்ள வட்டி விகி­தங்­களில் ஆகக் குறை­வான ஒன்­றாக உள்­ளது.

எனி­னும், வீவக கட­னில் இருந்து வங்­கிக் கட­னுக்கு மாறிய வீட்டு உரி­மை­யா­ளர்­கள், அதே வீட்­டிற்­காக மறு­ப­டி­யும் வீவக கட­னுக்கு விண்­ணப்­பிக்க இய­லாது.

கூடு­மா­ன­வரை வீட்­டுக் கட­னைச் செலுத்த மசே­நி­தி­யை­விட ரொக்­கத்­தைப் பயன்­ப­டுத்­து­வது சிறந்­தது.

கையில் ரொக்­கம் குறை­யும்­போது, அத்­தி­யா­வ­சி­யம் அல்­லாத பொருள்­களில் செலவு செய்­வ­தைக் குறைத்­துக்­கொள்ள வேண்­டும்.

மசே­நி­திக் கணக்­கில் உள்ள தொகை, உங்­கள் வங்­கிக் கணக்­கில் உள்­ள­தை­விட கூடு­தல் வட்டியை ஈட்­டு­கிறது.

முக்­கி­ய­மாக, உங்­க­ளி­டம் ரொக்கம் குறை­யும்­போது உத­விக்கு கிடைக்­கும் வள­மாக மசே­நி­தி­யைப் பார்க்­க­வும்.

அத்­த­கைய சூழ்­நி­லை­யில், கட­னைச் செலுத்த மசே­நிதி தொகை­யைப் பயன்­ப­டுத்த நீங்­கள் கோர­லாம்.

கையில் போது­மான ரொக்­கம் இல்­லா­ம­லும் வீட்­டுக் கட­னுக்­காக மசே­நிதி கணக்­கை­யும் நீங்­கள் காலி செய்­து­விட்­டால், வட்டி விகி­தம் அதி­க­ரிக்­கும் சூழ­லில் உங்­க­ளி­டம் கூடு­தல் நிதி இல்­லா­மல் போக­லாம்.

வீட்­டுக் கட­னைச் செலுத்தி முடித்த பிறகு உங்­கள் மசே­நி­தி­யில் இருந்து எடுத்த பணத்தை அதில் திருப்பி செலுத்­து­வது ஓய்வுக்­கா­லத்­திற்­கான சிறந்த திட்­ட­மி­டு­தல் ஆகும்.

கட­னைப் பெறு­வ­தற்­கான ஆவ­ணத்­தில் கையெ­ழுத்­தி­டு­வ­தற்கு முன்பு உங்­க­ளுக்கு இருக்­கும் சந்­தே­கங்­க­ளைக் கேட்டுத் தெளி­வு­படுத்திக்­கொள்­வது நல்­லது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!