தமிழில் சிறார் நூல்களை எழுதும் சிங்கப்பூரரின் முதல் ஆங்கில நூல்

தமி­ழில் சிறு­வர் நூல்­களை எழுதி வரும் சிங்­கப்­பூ­ர­ரான அபி கிருஷ் எழு­திய முதல் ஆங்­கில நூல் வெளி­வந்­தி­ருக்­கிறது. உள்­ளூர் பதிப்­பா­ள­ரான எப்பி­கி­ராம் பப்­ளிக்­கே­ஷன்ஸ் வெளி­யிட்­டுள்ள அந்த நூலுக்கு ‘தி பிராட்டா கேர்ள்’ என்று தலைப்­பி­டப்­பட்­டுள்­ளது.

பாசிர் ரிஸ்­ஸில் உள்ள ஓர் உண­வங்­காடி நிலை­யத்­தில் அலுப்பு தட்டிய பிராட்டா கடைக்­கா­ரர், சிறுமி வடி­வத்­தில் பிசை­யும் பிராட்டா மாவு உயிர்த்­தெ­ழு­கிறது.

அங்­கும் இங்­கும் ஓடும் பிராட்டா சிறு­மி­யின் குறும்­புச்­செ­யல்­கள் பல்வேறு பிரச்­சி­னை­க­ளை­ உண்­டாக்­கு­கின்­றன. இச­பெல்லா டோங் என்­ப­வர் இதன் சித்­தி­ரங்­களை வரைந்­துள்­ளார்.

“நம் நாட்­டில் எல்­லா­ருக்­கும் பிராட்டா பிடிக்­கும். பல்­வேறு கலா­சா­ரங்­க­ளின் உண­வு­களில் அதன் சாய­லைக் காண முடி­யும். எல்லா வய­தி­ன­ரும் ரசித்து தொடர்­பு­ப­டுத்­திக் கொள்­ளும் வகை­யில் உள்ள அதையே கதா­பாத்­தி­ர­மா­கப் படைக்க முடிவு செய்­தேன்,” என்று அபி கிருஷ், 35 விவ­ரித்­தார்.

மழ­லை­யரையும் சிறு­வர்­க­ளை­யும் கவ­ரும் மாறு­பட்ட, நவீன சித்­தி­ரங்­கள் கொண்ட சிறு­வர் அச்சு நூல்­க­ளை­யும் மின்­னூல்­க­ளை­யும் அபி கிருஷ் கடந்த 2018ஆம் ஆண்­டி­லி­ருந்து தமி­ழில் எழுதி வரு­கி­றார். கதை சொல்­லி­யு­மான இவர், சிங்­கப்­பூர் எழுத்­தா­ளர் விழா, தமிழ் மொழி மாதம் உள்­ளிட்ட பல்­வேறு நிகழ்­வு­களில் பல்­வேறு சிறு­வர் கதை­க­ளை­யும் சொல்லி வரு­கி­றார்.

இவர் உரு­வாக்­கிய தமிழ் கதை­யைத் தழுவி ‘மஞ்­சு­வின் ஸ்டு­பென்­டஸ் மசாலா தோசை’ என்ற ஆங்­கில நூலும் அண்­மை­யில் வெளி­வந்­தது.

வேறு யாரும் சுட­மு­டி­யாத மசாலா தோசைக்­கான சமை­யல் பொருள்­க­ளைத் தேடி மஞ்சு தன் சக்­கர நாற்­கா­லி­யில் அக்­கம்­பக்­கம் எங்­கும் சுற்­று­கி­றாள். மற்ற இனங் களைச் சேர்ந்த அக்­கம்­பக்க நண்­பர்­கள் அவ­ளுக்கு உத­வு­கின்­ற­னர்.

“கலா­சா­ரங்­க­ளுக்கு இடை­யி­லான ஒற்­று­மை­யைக் காட்­டு­வது இந்த நூலின் நோக்­கம். சமோ­சா­வைத் தேடிச் செல்­லும் மஞ்­சு­வுக்கு நண்­பர்­கள் கரி­பப்­ஃபைத் தரு­கின்­ற­னர். இது­போன்ற பல உதா­ர­ணங்­கள் நூலில் உள்­ளன,” என்று அபி தமிழ் முர­சி­டம் தெரி­வித்­தார்.

உடற்­கு­றை­யுள்ள கதா­பாத்­தி­ரங்­கள் சிறு­வர் நூல்­களில் இன்­னும் அதி­கம் இடம்­பெ­று­வது அவ­சி­யம் என்று அபி நம்­பு­கி­றார்.

“உடற்­கு­றை­யுள்­ள­வர்­கள் சமூ­கத்­தில் நம்­மைச் சுற்­றி­யுள்­ள­னர் என்ற உணர்வு பிள்­ளை­க­ளுக்கு ஏற்­பட வேண்­டும். தமிழ் பேசும், அது­வும் உடற்­கு­றை­யுள்ள முதன்­மைக் கதா­பாத்­தி­ரம் ஓர் ஆங்­கில நூலில் இடம்­பெ­று­வது மிக­வும் முக்­கி­ய­மா­னது என்று பதிப்­பா­ளர்­களும் என்­னு­டன் சேர்ந்து பணி­யாற்­றிய ஆர்­வ­லர்­களும் கரு­தி­னர்,” என்று அபி கூறி­னார்.

‘மஞ்­சு­வின் ஸ்டு­பென்­டஸ் மசாலா தோசை’ நூலின் சித்­தி­ரங்­களை வாசு­தே­வன் அனந்­த­ கிருஷ்­ணன் வரைந்­துள்­ளார். மார்­ஷல் கெவண்­டிஷ் பதிப்­ப­கம் இதை வெளி­யிட்­டுள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!