ஜமால் முகமது முன்னாள் மாணவர் சங்கம் நடத்திய பேட்மிண்டன் போட்டி

ஜமால் முஹம்­மது கல்­லூரி முன்­னாள் மாண­வர்­கள் சங்­கம் (சிங்­கப்­பூர் கிளை), திறன்­மிக்க விளை­யாட்டு வீரர்­களை உரு­வாக்­கும் நோக்­கில் எட்டாவது முறை­யாக பேட்­மிண்­டன் போட்­டியை நடத்­தி­யுள்­ளது.

ஜூலை 31ஆம் தேதி ஞாயிற்­றுக்­கி­ழமை பிற்­ப­கல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை சிங்­கப்­பூர் எக்ஸ்போ விளை­யாட்டு அரங்­கத்­தில் போட்டி இடம்­பெற்­றது.

இப்­போட்­டி­யில் 28 விளை­யாட்டு வீரர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.

இடை­நி­லைப் போட்­டி­யில் முஜம்­மில், சக்­கீல் குழு­வி­ன­ரும் உயர் நிலைப் போட்­டி­யில் அஜ்­மல் கான், ஹபீ­புல்­லாஹ் குழு­வி­ன­ரும் வெற்றி பெற்­ற­னர்.

சிங்­கப்­பூர் இந்­திய முஸ்­லிம் பேர­வை­யின் தலை­வர் ஹாஜி அ. முஹம்­மது பிலால் போட்­டி­யில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார். விளை­யாட்டு வீரர்­ க­ளுக்­கும் வெற்றி வாகை சூடி­ய­வர்­க­ளுக்­கும் பரி­சு­க­ளை­யும், பதக்­கங்­க­ளை­யும் பாராட்­டுச் சான்­றி­தழ்­க­ளை­யும் அவர் வழங்­கி­னார்.

ஜமால் முஹம்­மது கல்­லூரி முன்­னாள் மாண­வர்­கள் சங்­கம் (சிங்­கப்­பூர் கிளை), சிங்­கப்­பூ­ரில் கடந்த 12 ஆண்டு களாக கல்­விச் சார்ந்த சமூக நலப்­ப­ணி­களை மேற்­கொண்டு வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!