வீகன் உணவு விழா

சிங்கப்பூர் உணவு விழாவையொட்டி, சிங்கப்பூர் வீகன் விழா நான்காவது ஆண்டாக வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி சுவாரஸ்யமான நடவடிக்கைகளுடன் தொடங்குகிறது.

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் தாவர அடிப்படையிலான உணவுப் பிரியர்களின் கொண்டாட்டமாக அமையும் இந்த வீகன் விழா, நிலைத்தன்மையான, ஆரோக்கியமான உணவு விருப்பங்கள் மீது கவனம் செலுத்துகிறது.

உள்ளூர், அனைத்துலக சமையல் நிபுணர்களின் வகுப்புகள், குழு விவாதங்கள், அமர்வுகள், பயிலரங்குகள் வீகன் உணவு, பானம், ஷாப்பிங் அனுபவங்கள் என அனைத்தும் ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகிறது.

வீகன் என்பது அசைவ உணவுகளைத் தவிர்த்து, தாவர உணவுகளை சாப்பிடுவதாகும். இந்த உணவு முறை ஒவ்வொருவர் விருப்பத்திற்கு ஏற்றதுபோல அமையும். வீகன் உணவு முறையில் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்ற தாவர உணவுகளை மட்டும் சாப்பிட வேண்டும். இவற்றில் அனைத்து ஊட்டச் சத்துக்களும் இருக்கிறது.

வீகன் உணவுச்சந்தை

விழாவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உணவுச் சந்தை 25க்கும் மேற்பட்ட வீகன் வணிகங்களையும் பொருள்களையும் ஆதரிக்கும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீகன் உணவுக் கிராமம்

உணவுப் பிரியர்கள் அனைவரையும் திருப்திப்படுத்தும் சுவையான வீகன் உணவுகள் இங்கே கிடைக்கும். எட்டுக்கும் மேற்பட்ட உணவகங்களிலிருந்து தனித்துவமான தாவர அடிப்படையிலான உணவுகளின் விருந்தை இங்கு சுவைத்து மகிழலாம்.

நாள்: ஆகஸ்ட் 27

இடம்: ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மண்டம், ஸ்டாம்ஃபர்ட் பால்ரூம்

உணவுச் சுற்றுலாக்கள்

சிங்கப்பூர் வீகன் விழா தனிச்சிறப்பான வீகன் உணவுகளை அறிந்துகொள்ள உதவும் உணவுச் சுற்றுலாக்களுடன் தீவு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

நாள்: ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 4ஆம் தேதிவரை.

இடம்: சைனா டவுன், லிட்டில் இந்தியா, காத்தோங்

சிங்கப்பூர் உணவு விழா, வீகன் விழாக்கள் குறித்த மேல் விவரங்களுக்குப் பார்க்க:

https://www.singaporefoodfestival.sg/

https://sgveganfestival.com/

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!