கிம்முக்குப் பதிலாக பொறுப்பேற்கும் லாலிச்

லயன் சிட்டி சேலர்ஸ் குழு­வின் பயிற்­று­விப்­பா­ளர் பத­வி­யி­லி­ருந்து கிம் டோ ஹூன் வில­கி­யுள்­ளார். அவ­ரது பதவி வில­கல் உள்­ளூர் காற்­பந்து வட்­டா­ரங்­களில்

அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

அண்­மை­யில் தெம்­ப­னிஸ் குழு­வின் உதவி பயிற்­று­விப்­பா­ள­ரான ஃபஹ்ரு­தீன் முஸ்­தா­ஃபிக்­கைத் தலை­யால் முட்­டி­ய­தால் கிம்­முக்கு $2,000 அப­ரா­தமும் மூன்று ஆட்­டங்­க­ளுக்­குத் தடை­யும் விதிக்­கப்­பட்­டன. முஸ்­தா­ஃபிக்­கிற்கு $3,000 அப­ரா­த­மும் மூன்று ஆட்­டங்­க­ளுக்­குத் தடை­யும் விதிக்­கப்­பட்­டன.

தண்­டனை விதிக்­கப்­பட்டு 24 மணி நேரம்­கூட ஆகாத நிலை­யில் கிம் பதவி வில­கி­னார்.

அவ­ருக்­குப் பதி­லாக லூக்கா லாலிச், லயன் சிட்டி சேலர்ஸ் குழு­வின் இடைக்­கா­லப் பயிற்­று­விப்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். அக்­கு­ழு­வின் பயிற்­சிக் கழ­கத்­தின் தொழில்­நுட்ப இயக்­கு­ந­ரா­க­வும் 35 வயது செர்­பி­ய­ரான லாலிச் பதவி வகிக்­கி­றார்.

லயன் சிட்டி சேலர்ஸ் குழு­வின் இடைக்­கா­லப் பயிற்­று­விப்­பா­ள­ரா­கப் பொறுப்­பேற்­ப­தில் தமக்கு எவ்­வித ஆட்­சே­ப­மும் இல்லை என்­றார் அவர்.

இன்­னும் ஒன்­பது ஆட்­டங்­கள் எஞ்­சி­யுள்ள நிலை­யில், சிங்­கப்­பூர் பிரி­மி­யர் லீக் காற்­பந்­துப் போட்­டி­யின் லீக் பட்­டி­ய­லில் லயன் சிட்டி சேலர்ஸ் குழு 42 புள்­ளி­கள் பெற்று முன்­னிலை வகிக்­கிறது.

அதை­விட ஒரு புள்ளி குறை­வா­கப் பெற்று ஆல்­பி­ரக்ஸ் நிகாட்டா இரண்­டா­வது நிலை­யில் உள்­ளது.

தம்மை இடைக்காலப் பயிற்றுவிப்பாளராக நியமிக்க குழுவின் நிர்வாகம் எடுத்துள்ள முடிவு தமது ஆச்சரியமளிப்பதாக லாலிச் கூறினார்.

குழுவை வெற்றியின் பாதைக்குக் கொண்டு செல்ல ஆவலுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!