மூட்டுவலியைக் குணமாக்கும் முடக்கத்தான் சூப்

மூட்டுவலியைக் குணமாக்கும் முடக்கத்தான் சூப்

1 mins read
0521abf1-15b9-4721-b4c4-0063edba1582
-

மூட்டு வலி, தசை வலி, வாயுக்­கோ­ளாறு போன்­ற­வற்­றுக்கு மிகச் சிறந்த மருந்­தா­கக் கரு­தப்­ப­டு­கிறது முடக்­கத்­தான் கீரை. இதில் 'சூப்' செய்து அடிக்­கடி சாப்­பிட்டு வந்­தால் நல்ல பலன் கிடைக்­கும்.

தேவை­யான பொருள்­கள்:

முடக்­கத்­தான் கீரை ஒரு கப், துவ­ரம் பருப்பு இரண்டு தேக்­கரண்டி, மிளகு ஒரு தேக்­க­ரண்டி, சீர­கம் இரண்டு தேக்­க­ரண்டி, எண்­ணெய் ஒரு தேக்­க­ரண்டி, கடுகு அரை தேக்­க­ரண்டி, காய்ந்த மிள­காய் மூன்று , புளி சிறி­த­ளவு, பெருங்­கா­யம் சிறி­த­ளவு, பூண்டு மூன்று பல், உப்பு தேவை­யான அளவு.

செய்­முறை: கீரை­யில் இரண்டு குவளை தண்­ணீர் ஊற்றி வேக வைத்­துக்­கொள்­ள­வும். துவ­ரம் பருப்பு, மிளகு, சீர­கம், காய்ந்த மிள­காய், பூண்டு இவற்றை நன்கு அரைத்து வைத்­துக்­கொள்ள வேண்­டும். நான்கு குவளை தண்­ணீர் எடுத்து உப்பு, புளி­யைக் கரைத்து கீரை­யில் விட­வும். அரைத்து வைத்த விழு­தை­யும் கீரை­யில் போட்டு நன்கு கொதிக்­க­வி­ட­வும். இதை இறக்­கி­விட்டு கடுகு, பெருங்­கா­யம் சேர்த்துத் தாளித்தால் முடக்கத்தான் சூப் தயார்.

படம்: இணையம்